RMY BATCHA

Create your own banner at mybannermaker.com!

24 April 2012

மக்கள் திருந்துவார்களா? அல்லது இன்னும் கெடுவோம் என்ன பந்தயம் என்று கேட்பார்களா?



அட்சய திருதியை நாளில் நகை வாங்கினால் செல்வம் கொழிக்கும் என்ற நம்பிக்கை இந்துக்கள் தாண்டி, இன்று பரவலாக அனைத்து சமுதாய மக்களில் சிலரிடமும் ஒட்டிக் கொண்டிருக்கிறது. மக்களின் பக்தி முலாம் பூசப்பட்ட இந்த மூடநம்பிக்கையை பயன்படுத்தி நகைக்கடை வியாபாரிகள் நன்றாகவே கல்லா கட்டுகிறார்கள். தங்கம் விலை விமானத்தை விட உயர்வாக ரெக்கை கட்டிப் பறக்கும் இந்த காலகட்டத்திலும் நகைக்கடையில் மண்ணள்ளி போட்டால் கூட கீழே விழாத அளவுக்கு மக்கள் கூட்டம். எந்த அளவுக்கென்றால் ஏனைய நாட்களில் சாதாரணமாக பணத்துடன் சென்றால் நகை வாங்கிவிடலாம். ஆனால் இன்று முன்கூட்டியே டோக்கன் வாங்கியவர்கள் மட்டுமே நகை வாங்கமுடியும் என்று சொல்லும் அளவுக்கு சில பெரிய நகைக்கடைக் காரார்கள் டோக்கன் சிஸ்டம் கொண்டுவரும் அளவுக்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. உண்மையில் இது தெளிவான ஒரு மூடநம்பிக்கை என்று பல்வேறு காலகட்டங்களில் சிந்தனையாளர்களால் தெளிவுபடுத்தப்பட்டாலும் மக்கள் தெளிவடைய மறுக்கிறார்கள். கீழ் வரும் இந்த செய்தியை படித்த பின்பாவது தெளிவடைவார்களா என்று பார்ப்போம்.

சென்னை அண்ணா நகரில் வசிக்கும் கவுசல்யா என்ற இல்லத்தரசி அட்சய திருதியை தினத்தில் தங்கம் வாங்கி, தனக்கு நேரிட்ட கசப்பான அனுபவத்தை கூறியதாக தினத்தந்தி நாளிதழில் வந்துள்ள செய்தி;

'' எல்லோரும் சொல்கிறார்களே என்று, கடந்த ஆண்டு அட்சய திருதியை அன்று, நானும் என் கணவரும் ஒரு நகைக்கடைக்குச் சென்றோம். அங்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. மக்கள் வெள்ளத்தில் நீந்திச்சென்று தங்க நாணயம் ஒன்றை வாங்கினோம். ஒரு வருடம் கடந்துவிட்டது.

இன்னும் ஓரிரு மாதத்தில் எங்கள் பேத்திக்கு பெயர் சூட்டு விழா நடக்க உள்ளது. பேத்திக்கு தங்கத்தில் நகை செய்யலாம் என்று கருதி, கடந்த ஆண்டு அட்சய திருதியை அன்று வாங்கிய தங்க நாணயத்தை எடுத்துக்கொண்டு, பொற்கொல்லர் ஒருவரிடம் சென்றோம். தங்க நாணயத்தை எங்களிடம் இருந்து வாங்கிய பொற்கொல்லர், நாணயத்தை மேலும் கீழும் திருப்பித் திருப்பி பார்த்தார்.

'' ஏம்மா, அட்சய திருதியை நாளில் வாங்கிய நாணயமா? என்று ஒருவித இளப்பமான தோரணையில் கேட்டுவிட்டு, மாற்று ரொம்ப கம்மியா இருக்கிறது அம்மா! ' என்று சொன்னார். எங்களுக்கு தூக்கிவாரிப்போட்டது. இனிமேல், 'அட்சய திருதியை நாளில் நகை வாங்குவதைவிட வேறு ஒரு நாளில் வாங்கினால் நல்லது' என்று உறுதிமேற்கொண்டேன். '
இவ்வாறு இல்லத்தரசி கவுசல்யா கூறினார்.
மக்கள் திருந்துவார்களா? அல்லது இன்னும் கெடுவோம்
என்ன பந்தயம் என்று கேட்பார்களா?
நன்றி-"TAMIL MUSLIM POLITICS"



தீபாவளி, பொங்கல், தமிழ் புத்தாண்டு போயாச்சு அப்பாடி நிம்மதி அடுத்த தீபாவளி வரைக்கு தி நகர் அல்லது உங்கள் அருகில் உள்ள நகை கடைக்கு போகும் வேலை இல்லை அடுத்து ஸ்கூல் ஃபீஸ், யூனிஃபார்ம் லொட்டு லொசுக்குன்னு செலவு தானே அதுக்குள்ளே கோடை விடுமுறைக்கு குளு குளு ஸ்தலம் போலாம்னு அய்யாமார்கள் நினைக்கும் போது வீட்டில் உள்ள அன்னபூரணிக்கள் "அக்ஷ்ய திருத்திகை" எனும் மாடர்ன் காஸ்ட்லியான பண்டிகைக்கு ஒரு பொட்டு தங்கமாவது வாங்குனாதாங்க நம்ம டாப்பா இருப்போம்னு ஆரம்பிச்சு மினிமம் 4000 ரூவாய்ல இருந்து லட்சகணக்கில் ஹஸ்பன்ட் சேவிங்க்ஸை பங்க்ச்ர் ஆன டியூப் போல ஆக்கிவிடுவார்கள். இதில் பெரிய பீத்தல் வேற நாங்க பொம்பளைங்க கட்டும் சட்டுமா குடும்பம் நடத்தி இப்படி நாலு தங்க பொருளை வாங்கி வச்சாதான் ஆத்திர அவசரத்திற்க்கு உதவுதுன்னு வேற...... அந்த காலத்தில ஒரு லிட்டர் பாலுக்கு பதிலா அரை முக்கால்னு வாங்கி பால் கவர் போட்டு, பழை பேப்பர் வயர் கூடை ஸ்வெட்டர் எம்ப்ராய்டிரினு வீட்ல சும்மா இருக்கிற நேரத்தில் போட்டு நாலு காசை எட்டா சுருட்டி ஒவ்வொரு டப்பாவுல கையவிட்டு அம்மாக்கள் எடுத்து தந்த காலம் போய் நான் சொன்ன எந்த ஒரு விஷயத்தையும் செய்யாம சீரியல் பாத்தே நேரத்தை போக்கிட்டு புரட்சி போராட்டம்னு தி நகர்ல 75 கோடி பெருமானமுள்ள வீட்ல ஓனர் சின்ன சிவாஜி சொன்னா தப்பா இருக்காதுன்னு தங்கம் வாங்க தமிழகத்தில ஒரு அஃபிசியல் நாள் கிடைச்சாசுனு அன்னைக்கு போய் ஏமாறாதீங்க. ஏற்கனவே நோட்ஸ் போட்டு அது பெரிய ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்கு இருந்தாலும் இதோ இன்னும் ரெண்டு நாள்ல அந்த அக்ஷய திருத்திகை வருதுன்னு கிளம்பிருவீங்களேன்னு தான் ஒரு அட்வான்ஸ் தங்க டாப் 10..........

1. எந்த பெரிய கடையிலேயும் தங்க காயின் வாங்கும்போது கேளுங்க சார் இதை திருப்பி கொடுத்தா அன்னையை விலையில எடுத்துப்பீங்களான்னு - ஒரு நல்லவர் கூட சொல்ல மாட்டாரு நாங்க வாங்கிப்போம்னு ( அதனால சும்மா வெட்டியா 4000 காசை கரியாக்காதீங்க)

2. நீங்க அவசரமா சேட்டு கடையாகட்டும், சேட்டன் கடையாகட்டும் நகையை விக்க அல்லது அடகு வைக்க போகும் போது தேங்கா சட்னி அரைக்கிற மாதிரி தேச்சி தேச்சி பார்த்திட்டு நம்ம மூஞ்சியை வேறு என்னமோ சம்பல் கொள்ளை நம்ம அடிச்ச மாதிரி பார்த்து பார்த்து அவன் கருங்கல்லை தங்க கல்லா மாத்திதான் யோசிப்பான் வாங்கலாமா அல்லது அடகு வைக்கலாம்ன்னு - ஆனா நம்ம மக்கள் ஒரு நாளாவது அந்த தங்கத்தை உரசி காட்டுங்கன்னு கேட்டிருக்கிங்களா?

3. நம்ம எண்ணம் எல்லாம் லட்சத்திற்க்கு நகையை வாங்கிட்டு பத்து ரூவா பெறுமானமுள்ள பிளாஸ்டிக் அல்லது சணல் பையை ஒன்னுக்கு ரெண்டு கேட்டு வாங்கிடம்னுதான் எண்ணம் - ஆமாவா இல்லையா

4. நாங்க வழக்கமா வாங்குற கடையில கேரட் மீட்டர், பீட்ரூட் மீட்டர் இருக்கு டக்குனு காட்டிடும்னு பல அப்பாவி புருசஷன்களை நம்ப வைக்காதீங்க இருவது ரூவாய்க்கு ஒரு கிலோ வெண்டைக்காயை ஒடிச்சு பாத்து வாங்கும் உங்க திறமை இதில காட்டுங்க.BIS Hallmark Certificate இருக்கன்னு பாருங்க அதுல நீங்க வாங்கற 85% தங்க காசுல இருக்காது அப்படி இல்லாம வாங்குற காய்ன் டேபிள் ஆடுனா அதுக்கு கூட முட்டுக்கு வைக்க லாய்க்கு இல்லை.

5. அப்படி வாங்கித்தான் தீருவேன்னு நினைச்சு என் பேச்சை நானே கேக்கமாட்டேன்னு சொல்ற ஆளா இருந்தா - அட்லீஸ்ட் போஸ்ட் ஆஃபிஸ்ல போய் வாங்குங்க கொஞ்சம் காஸ்ட்லி ஆனா 99.5 - 99.99 பியூரிட்டியுடன் கிடைக்கும். போஸ்ட் ஆபிஸ்ல கிடைக்கிற ரிலையன்ஸ் கோல்ட் காயின் வெரைட்டியை தவிர்க்கவும்.

6. நிறைய பேர் எளிதில் பிரிக்க முடியாத டஃப் பிளாஸ்டிக் மோல்டிங் போட்ட கோல்ட் காயின் தருவார்கள் அதை பிரிக்காமல் அப்படியே வைத்தால் அடுத்த வருஷம் அதுக்கு பேரிச்சம்பழம் கொட்டை கூட தர மாட்டாங்க பிரிச்சி பாருங்க உங்க ஆல்பர்ட் அயின்ஸ்டீன் மூளையை உபயோகிச்சு பரிசோதீங்க.....

7. பஜன்லால் சேட்டு கடையில் இருந்து பல்லாவரம் கோவாப்ரேட்டிவ் வங்கியில் கூட தங்க காயினுக்கு அடுகு ஸ்டேட்டஸ் "நஹி நஹி" தான் சில பேர் சொல்றாங்க ஸ்டேட் பேங்க்ல மட்டும் பிக்ஸட் டிபாஸிட் இருந்தால் எடுக்கிறாங்களாம் அது நம்ம காசை வாங்கி நம்மளுக்கே கடன் கொடுக்கும் கதை தான்.....

8. 4000 மினிமம் பச்சா நம்ம வீட்டு பாச்சாக்கு செலவு வெச்சே ஆவனும்னு நினைச்சா தயவு செய்து ஆன்லைன் கோல்ட் பன்டில் (பண்டு) மியூச்சவல் பண்டில் போடுங்கள் அல்லது எல் ஐ சி போன்ற இன்ஸூரன்ஸுல் போட்டால் குழந்தைகளின் பியூச்சருக்கு சோறு கியாரண்டி

9. தங்க பிஸ்கோத்து, தங்க கட்டி, தங்க கலசம், இதெல்லாம் அசோகன் வில்லனா நடிக்கும் படங்களில் வேணால் நல்லாயிருக்கும் நம்ம காலத்துக்கு தங்க காயின் யூஸ்ஃபுல் இல்லை, இப்ப இருக்கிற காலத்தில பொரம்போக்கு லேன்ட் வாங்கினா தங்க காயின், ஆயிரம் ரூவா மொபைல் போன் வாங்கினா தங்க காயின், டீவி வாங்கினா தங்க காயின், கொஞ்சம் நாள்ல கட்டண கழிப்பிடத்தில மலம் கழிச்சீங்கன்னா தங்க காயின்னு போடப்போரான் பாருங்க

10. ஒன்னு சாமி முன்னாடி அல்லது பீரோ உள்ளே உள்ள சேஃப்டி லாக்கர்ல வைக்கும் ஒரு சமாச்சாரத்தை நல்லதா நகையா அல்லது தங்கத்தை ஆச்சாரிகிட்ட சொல்லி (எங்கூர்ல தங்கம் உருக்குதல்னு ஒரு நிகழ்ச்சி கல்யானத்திற்க்கு முன் நடக்கும்) அதை வைத்து தான் கல்யானத்திற்க்கு தேவையான நகை தாலி போன்றவற்றை செய்வாங்க இன்னைக்கு அப்படியே ஜொலிக்கும் இப்ப வாங்குற நகைகள் பாலீஸ் போட்டே பாதி காசு காலி அதனால் நல்ல தங்கத்தை வாங்குங்க இல்லைனா அது வரைக்கும் வெயிட் பண்ணி நல்ல பொருளை வாங்குங்கள், நிறைய பேர் பெரிய கடைக்கு போக கஷடபட்டு பக்கத்துல இருக்கிற டுபாக்கூர் சேட்டுகளிடம் வாங்கி கடைசில அது நெத்தி காசுக்கு கூட லாயக்கில்லைனு தெரியும் போது வெளிய சொல்ல கூச்ச படுறாங்க அதனால் ஒரு கிராம் வாங்குனாலும் நல்ல கடையில் அல்லது போஸ்ட் ஆப்பீஸ்ல போய் வாங்குங்க தாய்க்குலங்களே......

கடைசி டிப்ஸ் - ஏற்கனவே பல படத்தில வந்த ஜோக்கு பீஸா ஆர்டர் பண்ணினா கூட 45 நிமஷத்தில வரான் ஆனால் ஆம்புலன்ஸ் வர 2 மணி நேரம் ஆகுதுன்னு, இப்ப ஜிவல்ஸ்னெக்ஸ்ட்.காம் கம்பெனியில போன் போட்டு ஆர்டர் பண்ணினா தங்கத்தை 30 நிமிஷத்தில ஹோம் டெலிவரி பன்றாங்களாம் என்ன கொடுமைடா...... யாரா இருந்தாலும் நான் போட்ட பத்து பாயின்ட்ஸை கேளுங்க 4000 சும்மா இல்லை பெரிய பணம் இன்னைக்கு - உங்களுக்கு என்று ஒன்று இருந்தால் அதை யாராலும் உங்களுக்கு கிடைப்பதை தடுக்கமுடியாது, உங்களுக்கு என்று இல்லாத பொருளை அந்த இறைவன் நினைத்தாலும் கொடுக்க முடியாது. தயவு செய்து பிடித்திருந்தால் ஷேர் செய்யவும் நிறைய அண்ணபூரணிகளுக்கு இந்த அவேர்னஸ் தேவை......... ஹேவ் ஏ ஹாப்பி அக்ஷய திருத்திகை
நன்றிRavi Nag



No comments: