RMY BATCHA

Create your own banner at mybannermaker.com!

20 March 2012

அம்மா ........

பெற்றோரை கவனிக்காவிட்டால் என்ன தண்டனை?



கருவறையில் வசிக்கிற
கடவுளுக்கு மத்தியில்
கருவறை சுமக்கிற
கடவுள் தானே நீ அம்மா .............
கவிதை - பாரதி கார்த்திக் FB
மதுரை மாநகராட்சி வளாக ரோட்டில், நேற்று காலை, 70 வயது மூதாட்டி ஒருவர், மயங்கிக் கிடந்தார். மனநிலை சரியில்லாதவராக இருக்கலாம் என, பலரும் அவரை கண்டுகொள்ளவில்லை.

உச்சி வெயிலையும் பொருட்படுத்தாமல், ஆடைகள் கலைந்த நிலையில் இருந்தார். அசைவுகள் இல்லாததால், சந்தேகப்பட்ட சிலர், அவரை நெருங்கினர்.
அப்போது அவர், மயக்கத்தில் இருந்தது தெரிந்தது. சிகிச்சைக்கு அனுப்ப,"108" ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள்," காயம் இல்லாததால், அவரை சிகிச்சைக்கு கொண்டு செல்ல முடியாது' எனக்கூறி, திரும்பிச் சென்றனர்.
பின், போலீசாருக்கு தகவல் தெரிவித்து, அவர்கள் வந்ததும், மூதாட்டியை தண்ணீர் தெளித்து எழுப்பினர். பசி மயக்கத்தில் இருந்ததை அறிந்த போலீசார், அவருக்கு உணவு கொடுக்க முயற்சித்தனர். அதுவரை வாய் திறக்காதவர், பேசத் தொடங்கினார். "" எனக்கு உணவே வேண்டாம், தயவு செய்து என்னை விடுங்க ...'' என, அழுதார். "" மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்குதெருவைச் சேர்ந்த குஞ்சம்மாள் நான்.
எனக்கு ஒரு மகள், மகன். சிரமப்பட்டு அவர்களை வளர்த்தேன். விவசாய வேலைகளை செய்து, திருமணம் ஆன என் மகனுடன் வசித்து வந்தேன். ஒரு விபத்தில் என் கால் காயம் அடைந்தது. இரண்டு நாள் வீட்டில் முடங்கிய என்னை, யாரும் கவனிக்கவில்லை. என் மகன் விரட்டியதால், அங்கிருந்து பஸ் ஏறினேன்.
15 நாட்களுக்கு முன், மதுரை வந்தேன். கையில் இருந்ததை வைத்து, உணவு தேவையை சமாளித்தேன். பணம் தீர்ந்த பின், பிறரிடம் கையேந்த மனம் வரவில்லை. கடந்த நான்கு நாட்களாக பட்டினி.
காதில் தங்கத்தோடு இருந்தாலும், அதை வைத்து சாப்பிட மனம் வரவில்லை. எனக்கு சாப்பாடு தர உறவுகள் மறுத்ததால், உணவை பார்த்தாலே எரிச்சலாக உள்ளது,''என, அழ துவங்கினார்.
அவரை சமாதானப்படுத்திய போலீசார், கட்டாயப்படுத்தி சாப்பிட வைத்து, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்
நன்றி-tamilcnn


அன்றோ எங்கள் வீட்டில் யாருமில்லை என்று அவனை அனாதை இல்லத்தில் இருந்து தத்து எடுத்தோம் ...

இன்றோ அவன் எங்களை முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டான் அவன் வீட்டில் இடமில்லை என்று ...


உன்னை எந்த அளவுக்கு பிடிக்கும் என்று தெரியவில்லை ... ஆனால்! உன்னை பிடித்த அளவுக்கு இந்த உலகத்தில் வேறு எதுவும் எனக்கு பிடிக்கவில்லை அம்மா ....

17 March 2012

கேரளா சென்ற வாலிபர் மாயம் குடந்தை போலீஸில் தாய் புகார்


கும்பகோணம்: வேலைக்கு செல்வதாகக் கூறி சென்ற வாலிபர் திரும்பி வராததால் கும்பகோணம் போலீஸார் விசாரிக்கின்றனர். கும்பகோணம் அருகேயுள்ள கொரநாட்டு கருப்பூர் ரைஸ்மில் தெருவைச் சேர்ந்தவர் முகம்மதுரபீக். இவரது மனைவி பைரோஜிபானு. இ வர்களது மகன் இதயதுல்லா (26). கொத்தனார் வேலை செய்யும் தொழில் செய்து வந்தார்.

கடந்தாண்டு நவம்பர் 6 ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த சிலருடன் கேரளாவிற்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். பின்னர் 10 நாட்கள் கழித்து கேரளாவிலிருந்து இதயதுல்லா அவரது அம்மாவிற்கு ஃபோன் செய்து பேசினார். அதன்பிறகு ஃபோன் செய்யவில்லை. இந்நிலையில் இதயதுல்லாவுடன் கேரளாவில் வேலைக்காகச் சென்றவர்கள் ஊருக்கு திரும்பி வந்துவிட்டனர். ஆனால், இதயதுல்லா மட்டும் வரவில்லை. அவரின் தாய் கேரளாவிற்கு சென்றவர்களிடம் என் மகன் ஏன் வரவில்லை? என கேட்டபோது அவர் எங்களுடன் ஊருக்கு திரும்பாமல் அங்கேயே இருக்கிறார் என கூறியதாக தெரிகிறது. இதனால் கவலையடைந்த பைரோஜிபானு கும்பகோணம் தாலுக்கா போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து இதயதுல்லா கேரளாவில்தான் இருக்கிறாரா? அல்லது தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.நன்றி-தினமலர் 
16 மார்ச் 2012
கும்பகோணம்: கும்பகோணம் அருகே புதிதாக கட்டப்பட்டுப்பட்டு வந்த கட்டடத்தில் இருந்து 3 நாட்டு வெடி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
கும்பகோணத்தை அடுத்த தராசுரம் எலும்பிச்சங்கா பாளையத்தில் கஸ்தூரி என்பவர் புதிதாக வீடு ஒன்று கட்டி வருகிறார். கடந்த 3 மாதங்களாக அங்கு பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இந்த நிலையில், கட்டடத்தினை பார்வையிடச் சென்ற கஸ்தூரி, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடி குண்டுகளை கண்டுபிடித்தார். இதையடுத்து திருச்சியில் இருந்து வரவழைக்கப்பட்ட வெடி குண்டு நிபுணர்கள் குழுவினர், அந்த கட்டடம் முழுவதும் சோதனை நடத்தினர். பின்னர் கட்டடத்தில் இருந்து எடுக்கப்பட்ட 3 சக்திவாய்ந்த நாட்டு வெடி குண்டுகளையும், செயலிழக்கச் செய்தனர்.
நன்றி - Thoothuonline

02 March 2012

கூடங்குளம் கரண்டு ஃபேக்டரி... |

கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது - கருணாநிதி சொல்கிறார்
கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனே திறக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கேட்டுக் கொண்டார். இத்தனை காலமாக இது ஏன் திறக்கப்படவில்லை . ஆளும் கட்சி இதை திறப்பதற்கு துணை நிற்பதற்கு பதிலாக அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக தெரிகிறது என்று குற்றம் சாட்டினார். மேலும் கூடங்குளம் அணு உலைகள் செயல்பாட்டிற்கு வந்தால் தமிழ் நாட்டில் இருள் இல்லை , மின் தட்டுப்பாடு இல்லை எனவும் தெரிவித்தார். கல்பாக்கம் அணு உலை இது வரை பாதுகாப்பாக தானே இயங்கிக் கொண்டிருக்கிறது, அதன் மூலம் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லையே . இதிலிருந்து அணு உலைகள் பாதுகாப்பானது தான் என்பது தெரிகிறது என்றார்.
கருணாநிதி சொல்வதில் பல முரண்பாடுகள் இருப்பதாக தெரிகிறது . கூடங்குளத்தின் மூலமாக இறுதியில் எல்லா இழப்புகளும் போக கிடைக்கும் 300 மெகாவாட் மின்சாரத்தை கொண்டு தமிழ்நாட்டில் எப்படி மின்தட்டுபாட்டை போக்க முடியும். தமிழ் நாட்டிக்கு தேவை 4500 மெகாவாட் மின்சாரம். அது கிடைத்தால் தான் தமிழ்நாட்டிற்கு தடையில்லா மின்சாரம் வழங்க முடியும் / அதனால் கூடங்குளம் அணுமின் நிலையம் மூலமாக தமிழ்நாட்டின் மின் தட்டுபாட்டை சமாளித்து விடலாம் என்பது பொய் என்று அணு உலை எதிர்பாளர்கள் மற்றும் ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.
மேலும் கல்பாக்கத்தில் பணிபுரியும் மருத்துவர் புகழேந்தி அணு கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக மருத்துவம் பார்க்கிறார். ஒரு ஆவண படத்திலும் அனுகதிர்வீச்சால் கல்பாக்க மக்கள் எவ்வாறு பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்பதை பல சான்றுகளுடன் விளக்கியிருக்கிறார் . அணு உலைகளின் பயங்கரத்தை அந்த படத்தில் தெளிவாக விளக்கியிருக்கிறார் மருத்துவர் புகழேந்தி.
இப்படி ஒரு நிலையில் , கருணாநிதி ஆராயாமல் அணு உலை பாதுகாப்பானது தான் என்று சொல்வது மக்களுக்கு மீண்டும் ஒரு துரோகம் இழைக்கும் செயலாகவே பார்க்க முடிகிறது என தமிழின ஆர்வலர்கள் கருதுகின்றனர்                                           
                                            கூடங்குளம் கரண்டு ஃபேக்டரி... |
“எங்கள் கணவர் மார்களில் பெரும்பான்மையோர் குடிப்பதை அறவே நிறுத்தி விட்டார்கள். மீதமுள்ள சிலரும் குடிப்பதில் பெரும்பகுதி நிறுத்திக் கொண்டார்கள்.. கூடிய விரைவில் அவர்களும் முற்றாய் நிறுத்திவிடுவார்கள். எங்களை அடித்து துன்புறுத்துவதை நிறுத்திக் கொண்டதோடு வீட்டு வேளைகளில்கூட எங்களுக்கு கூடமாட ஒத்தாசை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்,” என்பதாக நீளும் மகிழ்ச்சியும் குதூகலமும் கலந்து கொப்பளிக்கும் பெண்களின் பேட்டியோடு நகர்கிறது இன்றைய (.28.12.2011) “நியூ இந்தியன் எக்ஸ்ப்ரெஸ்” இன் செய்தி ஒன்று.

யுகம் யுகமாக எது பெண்களை விடாது அழவைத்ததோ அதை முற்றாக அழித்துப் போட்டு அவர்களின் கண்ணீரைத் துடைத்து அவர்களை மலரச் செய்த தலைவன் யார்? அல்லது கடவுள்தான் யார்?

எந்தத் தலைவனாலும், இறைதூதனாலும் ஏன் இறைவனாலும் இது சாத்தியப் படாது. ஒரு மக்கள் போராட்டம் மட்டுமே இத்தகையதொரு மாற்றத்திற்கு காரணமாக அமைய முடியும் என்பது மீண்டுமொருமுறை நிறுவப் பட்டிருக்கிறது.

இடிந்தகரையில் நடைபெறும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தின் 134 வது நாள் நிகழ்வுகளை சேகரிப்பதற்காக சென்ற அந்தப் பத்திரிக்கையின் செய்தியாளர்களிடம் போராடிக்கொண்டிருக்கும் அந்த மண்னின் பெண்கள் கூறியது இது.

எந்தவொரு மகத்தான மக்கள் போராட்டமும் இது போன்ற உப விளைவுகளையும் சேர்த்தே கொண்டு வந்து சேர்க்கும் என்பதுதான் நமக்கு வரலாறு சொல்லும் பாடம்.

உப விளைவே இவர்களது வாழ்க்கையில் இவ்வளவு மாற்றத்தினையும் மகிழ்ச்சியையும் கொடுக்க வல்லது எனில் போரட்டத்தின் இறுதி விளைவு சத்தியமாய் இதைவிட கோடி கோடி மடங்கு மாற்றத்தையும் உறுதியாய் கொண்டு வந்து சேர்க்கும் என்று நம்மால் உணர முடிகிறது.

”எங்கள் வருமானத்தில் பத்தில் ஒரு பங்கினை போராட்ட நிதியாக வழங்கிவிடுகிரோம்” என்று நீளும் அவர்களது நேர்காணலோடு நீள்கிறது அந்த செய்தி. உண்மையை சொல்வதெனில் தினமும் தினமும் செத்து செத்துப் பிழைக்கும் அன்றாடம் காய்ச்சிகளான, அதிலும் அறைகுறை வருமானத்திற்கான உழைப்பின் பெரும்பகுதி நேரத்தையும் போராட்டத்திற்காகத் தியாகித்து விட்ட பனையேறிகளும் மீனவர்களும் கிடைக்கும் தங்கள் சொற்ப வருமானத்திலும் பத்தில் ஒரு பங்கை போராட்டத்திற்களித்து போராடுகிரார்கள் எனில் ஏன் அவர்கள் போராடுகிறார்கள்?

“ஏம்பா கூடங்குளத்து கரண்டு ஃபேக்டரி வரக்கூடாதுன்னு இப்படி வம்படிக்குறீங்களே. நல்லா இருப்பீங்களா நீங்க .?” என்று விஷ்ணுபுரம் சரவணனின் நண்பரிடம் அவரது நண்பர் ஒருவர் கூறினாராம். ஆக, அவரைப் பொறுத்தவரை கூடங்குளம் அணு உலை என்பது சோப்பு ஃபேக்டரி மாதிரி, கார் ஃபேக்டரி மாதிரி மின்சாரம் தயார் செய்யும் ஒரு ஃபேக்டரி. அது உற்பத்தியைத் துவங்கி விட்டால் மின் தடை வராது, ஒரு ஆயிரம் ரெண்டாயிரம் பேருக்கு பிழைப்பு கிடைக்கும். ஒரு பத்து பதினைந்து பேர் கடை வைத்துப் பிழைக்கலாம், சுத்துப் புறம் வளர்ந்து விரிவடையும். இன்னும் சொல்லப்போனால் மின்சாரத்தின் விலைகூடக் குறையும். அதை ஏன் பாழாய்ப் போன இவர்கள் இப்படி மல்லுக் கட்டிக் கொண்டு எதிர்க்கிறார்கள் என்பது அவரது ஆதங்கம். ஆமாம் கூடங்குளத்தில் கரண்டு ஃபேக்டரி ஏன் வரக்கூடாது?

மேலே சொன்ன எதுவும் உண்மை அல்ல என்பதை முதலில் சொல்லிவிட்டு தொடர்வதே சரியாக இருக்கும்.

கூடங்குளத்தில் அணு உலை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில்1988 இல் கோபர்ச்சேவ் மற்றும் ராஜீவ் இருவரும் கையொப்பமிடுகின்றனர் “அணுக்கரு வழங்குவோர் குழுமத்தின்” ஒப்புதல் பெறவில்லை. எனெவே இதை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க் குரெலெடுத்தது அமெரிக்கா. ஏறத்தாழ இந்த நிலையிலேயே இப்பகுதி மக்களும் உலைக்கு எதிரான தங்கள் போராட்டத்தினை ஆரம்பித்திருந்தார்கள். போராடுபவர்களைப் பார்த்து அரசும் இதன் ஆதரவாளர்களும் சொன்னார்கள் “அமெரிக்காவிடம் பணம் பெற்றுக் கொண்டு கூத்தடிக்கும் அமெரிக்க கைக்கூலிகள்” . இப்படிச் சொன்னவர்கள்தான் ஆட்சியே போனாலும் பரவாயில்லை அமெரிக்காவோடு அணு ஒப்பந்தம் செய்தே தீருவோம் என்று அந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட உத்தமர்கள். மக்களின் எதிர்ப்பிற்கும் அமெரிக்காவின் எதிர்ப்பிற்கும் ஒரே காரணம்தான் என்பதை ஒத்துக் கொள்வதற்கு நாம் ஒன்றும் அவர்கள் அளவிற்கு புத்திசாளிகள் இல்லை. ரஷ்யாவோடு ஒப்பந்தம் என்பதைத் தவிர அமெரிக்கா இதை எதிர்ப்பதற்கு வேறு காரணம் எதுவுமில்லை என்பது நமக்கு மட்டுமல்ல அவர்களுக்கும் நன்றாகவே, மிக நன்றாகவேப் புரிகிறது.

”உலைக் கட்டுமானங்கள் மிகப் பாதுகாப்பன முறையில் கட்டமைக்கப் பட்டுள்ளன. மேலும் ரிக்டர் அளவில் ஆறு எண் வரைக்கும் நில நடுக்கம் ஏற்பட்டாலும் எந்த ஆபத்தும் ஏற்படாத வகையில் உலை கட்டமைக்கப் பட்டுள்ளது. எனவே அச்சமே கொள்ளத் தேவையில்லை என்று அப்துல் கலாமே சொல்லியிருக்கிறார். அவரைவிட நீங்கள் என்ன பெரிய அறிவாளியா ?” என்றும் ஒரு புன்னகையோடு ஏளனிக்கிறார்கள் சிலர்.

சத்தியமாக அய்யா கலாம் அளவிற்கு நாம் படித்தவர்களோ அறிவாளிகளோ அல்லதான். ஆனாலும் அவர் சொல்லியிருக்கிற எல்லை அளவைக் கடந்து 6.5 ரிக்டர் அளவில் அந்தப் பகுதியில் எதிர் காலத்தில் ஒரு பூகம்பம் வருகிறது என்று வைத்துக் கொள்வோம் (அதைவிட அதிக அளவில்கூட நிலனடுக்கம் வருவதற்கு வாய்ப்புகள் அதிகமென்றே சொல்கிறார்கள்) அதன் விளைவுகள் புக்சிமா, செர்னோபில் மற்றும் அமெரிக்காவின் மூன்று மைல் அணு உலை விபத்துக்களைவிடக் கொடுமையானதாகத்தானே இருக்கும். ஒருக்கால் அப்படி ஒரு பேரிடரே வராது. நாங்கள் இறைவனிடம் ஐ.எஸ்.டி போட்டு பேசிவிட்டோம் என்று கூட இவர்கள் சொல்லக்கூடும். அவர்களுக்கும் ‘செர்னோபில் மற்றும் மூன்று மைல் அணு உலை விபத்துக்கள் பேரிடர் விபத்துகளால் ஏற்படவில்லை. மனிதத் தவறுகளும் இயந்திரக் கோளாறுகளுமே கூட உலைகள் வெடிக்க காரணமாகக் கூடும்’ என்பதே நமது பாமரத்தனமான பதில்.

ஆயிரம் விமர்சனங்கள் அவர் மீது நமக்கு இருந்தாலும் கலாம் அய்யா மீது நாம் கொண்டிருக்கும் மதிப்பும் மரியாதையும் எந்த ஆக நவீன அளவுகோளையும் தாண்டி நீளும் தன்மை கொண்டவை. ஆனால் அதற்கு சற்றும் பொருத்தமே இல்லாமல் “செர்னோபில் விபத்தில் வெறும் 55 பேர் மட்டுமே இறந்து போனார்கள்.அதை ஏன் இவ்வளவு பெரிது படுத்துகிறார்கள்” என்பது மாதிரி சொல்லி நம்மை சங்கடப் பட வைத்திருக்கிறார்.

அய்யோ அய்யா, 55 பேர் செத்தது பெரிது இல்லையா? இதைச் செய்தால் ஒரே ஒருவன் செத்துப் போவான் என்று தெரிந்த பின்னும் அதை ஒருவன் செய்தால் அவன் மனிதன்தானா அய்யா? விழித்துக் கொண்டே கனவு காணும் பித்துக்குளி கூட இப்படி உளற மாட்டானே. எப்படி இப்படி மாறினீர்கள் என்று நான் கேட்க மாட்டேன். இதுதான் நீங்கள் என்பது நன்றாகவே தெரியும். ஆனால் இவ்வளவு வெளிப்படையாகப் பேசுகிற தைரியம் எப்படி வந்தது? எதற்கு சுற்றி வளைத்து பேசிக் கொண்டு, நேரடியாய் சொன்னால் மட்டும் என்ன செய்துவிடுவார்கள் என்கிற, ஆமாண்டா அப்படித்தான் சொன்னேன் என்ன செஞ்சுடுவ? என்று கேட்கிற திமிர் கலந்த தொனி இருக்கிறது பாருங்கள் அதுதான் நாங்கள் சற்றும் எதிர் பார்க்காதது. அது சரி, எத்தனை பேர் செத்தால்தான் அதை நீங்கள் ஒரு பொருட்டாய் கொள்வீர்கள்? யூனியன் கார்பைடு மாதிரி குவியல் குவியலாய் செத்துத் தொலைத்தால்தான் உங்களுக்கு அதை ஒரு பொருட்டென ஏற்க மனமிரங்குமா?

அது சரி, செர்னோபில் கூட ஒரு விபத்து. செர்னோபில் விபத்தில் கூட 55 பேர்தானே செத்தார்கள் என்பதன் மூலம் எதை எங்களுக்கு உணர்த்த வருகிறீர்கள் அய்யா?. பயப்படாதீர்கள், அப்படியே விபத்து ஏதேனும் நிகழ்ந்தாலும் சொற்ப அளவில்தான் சாவு இருக்கும் என்று சொல்ல வருகிறீர்களா? உங்கள் இடது கால் சுண்டு விரலிலிருந்து உதிர்ந்து விழும் மண்ணளவிற்கும் பொருட்டில்லாத நான் கேட்கிறேன், எதிர்பார்க்கமல் ஏற்படும் உயிரிழப்பை விபத்து என்று கொள்ளலாம். ஆனால் சொற்ப அளவே நிகழும் என்ற அளவில் எதிர் பார்த்துவிட்டாலே அது விபத்தல்ல, கொலையாயிற்றே அய்யா?. உங்களைப் போன்ற சான்றோர்களையும் மேதைகளையும் எதிர்கால சந்ததியினர் கொலையாளிகளாகப் பார்த்துவிடக் கூடாதே என்பதற்குத்தான் இப்படிப் போராடித் தொலைக்கிறார்கள் .

2004 நவம்பர் மாதத்து “current science" இதழில் கேரளப் பல்கலைகழகத்தின் நில இயல் துறையை சேர்ந்த முனைவர் பிஜி அவர்களூம் சென்னை ஐ.ஐ.டி ராம்குமார் அவர்களும் கூடங்குலம் பகுதி எரிமலைக் குழம்புகளால் ஆனது என்று எழுதியிருப்பதை தனது பேட்டி ஒன்றில் மாலதி மைத்ரி மேற்கோள் காட்டியிருப்பதை இப்போது நாம் கவனத்தில் கொள்வது அவசியம்.

"மக்கள் அதிகமாய் நடமாடாத பகுதியில்தானே அணு உலை அமைக்கப் படுகிறது. பிறகு ஏன் இவ்வளவு பதறுகிறீர்கள்?” என்பது மாதிரியான ஒரு கேள்விக்கு, மக்கள் நடமாட்டமே இல்லாதப் பகுதியில்தான் இவை அமைக்கப் படவேண்டும் என்ற 29.04.1991 அன்று வெளியிடப் பட்ட எண் 828 (தமிழ்நாடு பொதுப் பணித்துறை) என்ற அரசாணையை பொருத்தமாக சுட்டிக் காட்டி இது அந்த அரசாணைக்கு புறம்பானது என்று சொல்வதையும், சுற்றுலாத் தளங்கள் மற்றும் புகழ் பெற்ற இடங்களுக்கு 20 கிலோமீட்டர் தொலைவு வரை அணு உலைகளை நிறுவக் கூடாது என்கிற AERA விதிகளையும் இது மீறுவதாக அவர் மிகச் சரியாக கூறுவதையும் நம்மால் உதாசீனப் படுத்திவிட முடியாது.

கல்பாக்கத்தில் இத்தனை ஆண்டுகளாக ஒரு பாதிப்பும் நிகழ்ந்து விடவில்லையே. அப்புறம் ஏன் இவ்வளவு பதட்டம் என்று கூட சொல்கிறார்கள். விபத்து திடீரென்றுதான் வரும் என்று நாம் அவர்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நம்மைவிட அவர்களுக்கு இது மிக நன்றாகவே தெரியும். கல்பாக்கத்தில் பெரிய அளவில் விபத்துக்கள் நிகழவில்லையே தவிர அதன் பாதிப்புகளான கேன்ஸர் , ஆறு விரல் குழந்தைகள், மற்றும் பல்வேறு விதமான எலும்பு சம்பந்தமான வியாதிகள் இருக்கவே செய்கின்றன. கூடவே அவற்றை எதிர்த்து போராட்டங்களும் அந்தப் பகுதியில் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. என்ன சோகம் எனில் அணு உலைக்கு எதிராகப் பேசுபவனை குண்டர் சட்டத்திலே போடு என்று பேசினால் பக்கம் பக்கமாகப் போடும் பத்திரிக்கைகள் அவற்றுக்கெதிரான போராட்டங்களை கண்டு கொள்வதே இல்லை.

மின்சாரம் தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதைத் தவிர வேறு மாற்றே இல்லையே என்கிறார்கள். ஒரு மூன்று மாதங்களுக்கு முன்னால் எந்தப் பத்திரிக்கை என்று சரியாய் நினைவில்லை தினத் தந்தி அல்லது தினகரன் இலவச மலரில் வந்திருந்த ஒரு செய்தி மாற்று சாத்தியமே என்று சொல்கிறது.

ஏழாம்வகுப்பு அளவில் படிக்கும் இரண்டு மாணவர்களுக்கு வழங்கப் பட்ட விருதுகளைப் பற்றியது அது. ஒருவன் வீட்டிலிருக்கும் மின் விசிரியை தொடர்ந்து உற்று நோகியதன் விளைவாக ஒரு ஆய்வுக்கு நகர்கிறான். சக்கரம் சுற்றினால் மின்சாரம் எடுக்கலாம். மின்விசிரிதான் சுழல்கிறதே அதிலிருந்து மின்சாரம் எடுக்கலாமே என சிந்திக்கிறான். விளைவு அதற்கேற்றார்போல் ஒரு டைனமோ தயார் செய்கிறான். மின்விசிறி இயங்கும் போது ஒரு பெல்ட்டால் இணைக்கப்பட்ட
அதன் அருகில் பொருத்தப் பட்டுள்ள டைனமோவின் சக்கரமும் சுழற்றப் பட்டு மிசாரம் தயாராகிறது. ஒரு அரை மணி நேரமானதும் மின் இணைப்பை துண்டித்து விடலாம். அரை மணி நேரம் அந்த டைனமோ உற்பத்தி செய்து சேமித்து வைத்திருந்த மின்சாரத்தைக் கொண்டு அடுத்த அரை மணி நேரம் மின்விசிறி ஓடும். இந்த அரை மணி நேரத்தில் மின் விசிரி இயங்கும் போது மீண்டும் டைனமோ மிசாரத்தை உற்பத்தி செய்யும்.

இன்னொரு மாணவன் சுழலும் ரயில் சக்கரங்களிலிருந்து மின்சாரம் தயாரிக்க இயலும் என்று நிறுவி இருக்கிறான்.

ஒரு நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு மணி நேரம் கூட மின்வெட்டே இல்லை என்ற செய்திக் கட்டுரையை ஜூனியர் விகடனில் பார்த்தேன். அவர்கள் காற்றாலை , சூரிய ஒளி போன்றவற்றால் மின்சாரம் தயாரிப்பதாகவும், தங்கள் தேவைக்கு மிஞ்சிய மின்சாரத்தை அவர்கள் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தருவதாகவும் படித்தேன்.

இப்படியெல்லாம் மாற்றுப் பாதையில் வெற்றிகரமாக பயணிக்க பள்ளிப் படிப்பைத் தாண்டாதவர்களாலேயே முடிகிறது எனில் அணு உலையை அமைத்தே தீருவது என்று ஒற்றைக் காலில் நிற்கும் இந்த மேதைக்ளால் முடியாதா?

வெய்யில் எவ்வளவு மகத்துவமானது என்பதை எஸ்.ரா விடம்தான் கேட்க வேண்டும். வெய்யிலின் தீராக் காதலர் அவர். மகத்துவம் மிக்க வெய்யிலை எப்படி வீணடிக்கிறோம்? ஒவ்வொரு சொட்டு வெய்யிலிலும் எவ்வளவு மின்சாரம் இருக்கிறது என்பது இந்த அணு உலையின் காதலர்களுக்கு ஏன் இன்னும் புரியாமல் இருக்கிறது?.அல்லது ஏன் இன்னும் புரியாத மாதிரி நடிக்கிறார்கள்.அல்லது என்ன செய்தால் இவர்களுக்குப் புரியும். அல்லது புரிந்தேதான் இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்வார்கள்.
தமிழகத்தில் இவ்வளவு மின் தேவையும் இருளும் இருக்கிறபோது என் பாட்டனையும் அப்பனையும் தம்பி தங்கைகளையும் கூண்டோடு கொலை செய்த ராஜபக்‌ஷேவை திருப்தி செய்வதற்காய் கடலிலே குழாய் அமைத்து வழங்க இருக்கும் மின்சாரத்தை நிறுத்தினால் போதாதா?
“செர்னோபில்லில் நடந்ததை ஒரு குறிப்பிட்ட நாட்டில் நடந்த பேரழிவாகக் கொள்ள முடியாது.மாறாக இது மொத்த உலகத்தையேபாதித்துள்ள விஷயமாகக் கொள்ள வேண்டும்” என்று கோபர்ச்சேவ் சொன்னதையும் இங்கு பதிவது சரியாக இருக்கும்.
ஏற்கனவே 14000 கோடிகளுக்கு மேல் கொட்டியாகிவிட்டது . இவ்வளவு செலவு செய்த பிறகு விட்டுவிட முடியுமா?. வீணாக்க முடியுமா? என்றும் அடிக்கடி கேட்கிறீர்கள் சான்றோர்களே?.
1,76,000 கோடிலிருந்து வேண்டுமானால் இந்த 14000 கோடியை கழித்துக் கொண்டு அருள்கூர்ந்து எங்களை விட்டு விடுங்களேன். 14000 கோடி செலவளித்து செய்த சவப் பெட்டி என்பதற்காக செத்துவிடு என்றால் இயலாது என்று போராடுவதற்காக எங்களை மன்னித்து விடுங்கள் பெரியோர்களே. 
நன்றி: “காக்கைச் சிறகினிலே” - இரா. எட்வின்