RMY BATCHA

Create your own banner at mybannermaker.com!

20 April 2017

பழைய அரிய தமிழ் புத்தகங்கள்


நிறைய உள்ளன. தேடி எடுத்துக்கொள்ளுங்கள்.1887-ல்    இருந்துஅச்சுபதிக்கப்பட்ட அனைத்து புத்தகங்களும் உள்ளன.மொத்தம் *5376 புத்தகங்கள் PDF*    கோப்பாக உள்ளது.







தகவல் இராச்குமார் சி

17 April 2017

யார் இந்த குஞ்சாலி மரைக்காயர்கள்

யார் இந்த குஞ்சாலி மரைக்காயர்கள்?
(தமிழில் மருதநாயகம் வரலாற்று திரைப்படம் தடைபட்டது போல மலையாளத்தில் குஞ்சாலி மரைக்காயர் என்கிற இந்திய விடுதலை போராட்ட வரலாற்று திரைப்படம் முழுமை பெறாமல் நின்று விட்டது.)
இந்திய விடுதலைப் போரின் முன்னோடிகளாகத் திகழ்பவர் ஒரு முஸ்லிம் தான் என்பதை வரலாறு எடுத்துக் காட்டுகிறது. கடற்போர் பல செய்த தமிழ் மன்னர்களைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் புகழ்ந்து உரைக்கின்றன. அம்மன்னர்களைப் போன்று கடற்போர் பல செய்தவர் குஞ்சாலி மரைக்காயர். ஆங்கிலேயர் நம் நாட்டை அடிமைப்படுத்துவதற்கு முன் இங்கு வந்து கால்பதித்த போர்ச்சுகீசியரை விரட்டியடிக்க கடற்போர் பல செய்த குஞ்சாலி மரைக்காயர் தான் இந்திய விடுதலைப் போரின் முன்னோடி.
இந்திய சுதந்திரப் போராட்டங்களில் முஸ்லிம்கள் சிந்திய இரத்தத்தின் அளவு மற்றவர்கள் வியர்வை கூட சிந்தியிருக்கமாட்டார்கள் என்பது தான் வரலாற்று உண்மை. வரலாற்றின் பக்கங்களுக்குள் சற்று ஆழமாகச் கால்பதிப்போம்.
வாஸ்கோடகாமா
கி.பி 1492ல் ஸ்பெயினில் இஸ்லாமிய ஆட்சி வீழ்த்தப்படுகிறது.
வாஸ்கோடகாமா கி.பி 1498 மே, 17ல் கோழிக்கோடு கப்பாட்டு என்ற இடத்தில் வந்திறங்கினார். வியாபாரத்தின் பெயரைக் கூரி இந்திய மண்ணில் கால்பதித்த மிகக் குறிய காலத்திலேயே கி.பி 1510ல் போர்ச்சுகீசியர்கள் கோவாநகரைக் கைப்பற்றுகிறார்கள்.
வாஸ்கோடகாமா வந்தது முதல் கோழிக்கோடு சாமுத்ரி அரசனுக்கும் பரங்கியருக்கும் இடைவிடாத போர் நடை பெற்று வந்தது. மலபார் பிராந்திய பரங்கியர் படைத்தலைவர் மார்டின் டி-ஸோஸா, 25 போர்கப்பல்களுடன் வடக்கிலிருந்த கோலத்ரி மன்னனின் ஆதரவோடு கோழிக்கோடு கடற்கரையை வந்தடைந்தார்.
கோழிக்கோடு அரசன் சாமுத்ரி செய்வதறியாது திகைத்து நின்ற போது தான், “அந்நியரைக் காலூன்ற அனுமதிக்க முடியாது. அதற்காக தரையிலும் கடலிலும் மனித இரத்தம் பெருக்கெடுத்து ஓடினாலும் நாம் அதற்குத் தயார்” என்று அந்நியருக்கெதிராக முதன்முதலில் சூளுரைத்தார் குஞ்சாலி மரைக்காயர். சொன்னது மட்டுமின்றி செயலிலும் காட்டும் முகமாக அந்நியருக்கெதிரான போரில் கடற்படைக்குத் தலைமை தாங்கினார் அந்த இஸ்லாமிய வீரர். இக்காலகட்டத்தில் கடற்படையைக் குறித்து எவ்வித அறிவோ திட்டங்களோ சாமுத்ரி ராஜா உட்பட பெரும்பாலான இந்திய அரசர்களுக்கு இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கி.பி. 1521ல் ஹென்றி டிமெனபெஸ் – லோப்வாஸ்-டி-சம்பாயோ ஆகியோர் அடங்கிய பரங்கிய கடற்படை, கோழிக்கோட்டு அரசன் சாமுத்ரியின் கடற்படைத்தளமான பொன்னானி மீது ஆக்ரமிப்பைத் தொடுத்தது.
இதையடுத்து அஹ்மது மரைக்காயர், அவரது தம்பி குஞசாலி மரைக்காயர், இவர்களது மாமா முஹம்மது அலி மரைக்காயர் ஆகியோர் கொச்சியிலிருந்து கோழிக்கோடு சென்று தங்கினார்கள்.
கி.பி. 1523ல் குஞ்சாலி மரைக்காயர் பரங்கியருக்கெதிராகப் போர் செய்ய 200
பெரிய கப்பல்களைத் தயாராக வைத்திருந்தார். கி.பி. 1542ல் பரங்கியருக்கும், குஞ்சாலி மரைக்காயர் படைக்கும் உக்கிரமானபோர் நடைபெற்றது. இப்போரில் குட்டி அலி பரங்கியரை கலங்கடித்து அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்.
கி.பி. 1528ல் பர்கூரில் குட்டி அலியின் படைகளும் போர்த்துக்கீசியப் படைகளும் கடுமையாக மோதிக் கொண்டன. மங்கலாபுரத்துக்கும் மவுண்ட் அலிக்கும் இடையில் நடைபெற்ற போரில் சின்னகுட்டி அலி போர்த்துக்கீசியரால் சிறைப்பிடிக்கப்பட்டார்.
முதல் வெற்றி
கி.பி. 1528ல் செத்வாய் என்னுமிடத்தில் போர்த்துக்கீசியர் பல கப்பல்கள் நிறைய இந்திய வளங்களை ஏற்றிக் கொண்டு பலத்த பாதுகாப்புடன் தங்கள் தாய் நாட்டிற்குக் கொண்டு செல்ல முயன்றபோது குஞ்சாலி மரைக்காயர் அக்கப்பல்களைத் தாக்கி, ஒரு வெள்ளையரையும் விடாமல் கொன்று குவித்து மாபெரும் முதல் வெற்றியைப் பெற்றார்.
கி.பி. 1531ல் பரங்கியரை கடற்போரில் கதிகலங்கச்செய்த அஹ்மது
மரைக்காயர் வீரமரணத்தினைத் தழுவிக் கொண்டார்.
கி.பி. 1535ல் அட்மிரல் சுலைமான் பாட்ஷா, சமுத்ரியின் படையுடன் சென்று பரங்கியரை வென்று அவர்களை இலங்கையிலிருந்து வெளியேற்றினார்.
கி.பி. 1537ல் நாநோடி குன்ஹா என்பவர், கவர்னர் பதவிக்கு வந்த போது தியோ-கோ-தே-எஸல்வேலி யாவின் தலைமையில் கோழிக்கோடு கடற்கரையை முற்றுகையிடவும் போப்பூர் நதிக்கரையில் உள்ள சாலியன் என்ற இடத்தில் கோட்டையைக் கட்டவும் முயன்றபோது குஞ்சாலி மரைக்கார் சாலியன் கோட்டையைத் தாக்கினார். இதனைத் தொடர்ந்து நாகப்பட்டின கடற்கரையிலும் போர் நடைபெற்றது. அங்கு 51 சிறப்புக் கப்பல்களில் 8000 வீரர்களுடன் குஞ்சாலி மரைக்காயர் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கி.பி. 1538ல் தூத்துக்குடி கடற்கரையில் போர்த்துக்கீசியருக்கும், குஞ்சாலி மரைக்காயருக்கும் உக்கிரமான போர்கள் நடைபெற்றன. போர்த்துக்கீசிய படையை இங்கு குஞ்சாலி மரைக்காயர் தோற்கடித்தார். இவ்வாறாக அந்நியருக்கெதிராக கற்பனைகளை மிஞ்சிய பெரும் சாதனை புரிந்த மாவீரன் குஞ்சாலி மரைக்காயர் கொழும்பில் எதிரிகளின் குண்டுக்கு இரையாகி நாட்டுக்காக தன்னுயிர் ஈத்து வீரமரணம் எய்தினார்.
இவரை அடுத்து அவரது குடும்பத்தினர் சுதந்திரப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கினர்.
1570ல் போப்பூர் நதிக்கரையின் சாலியன் கோட்டை போரில் இரண்டாம் குஞ்சாலி மரைக்காயர் வெற்றி பெற்று, சுமார் 65 வருடங்களாக நடைபெற்று வந்த அந்நியரின் கடலாதிக்கத்தை முறியடித்தார்.
இவருக்குப் பின் மூன்றாம் குஞ்சாலி மரைக்காயர் தலைமைப் பொறுப்பேற்றார்.
1572ல் பரங்கியர்படை மஸ்ஜிதுகளையும் கோயில்களையும் கொள்ளையிட்டு, கோழிக்கோடு, திருக்கொடி, கப்பக்காடு, பொன்னானி துறைமுகங்களுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியது.
இவர்களைத் தொடர்ந்து எதிர்த்து வந்த மூன்றாம் குஞ்சாலி மரைக்காயர்
1586ல் அந்நியர் படையை வெற்றி கொண்டார்.
1589ல் இவரது மருமகன் குவாஜிமூஸா மரைக்காயர் மற்றோரிடத்தில் பரங்கியரைத் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாமுத்ரி ராஜாவின் துரோகம், குஞ்சாலி மரைக்காயரின் மறைவு!
1595 -ல் நான்காம் குஞ்சாலி மரைக்காயரும் பரங்கியரை எதிர்த்து வந்தார். ஆனால் அப்போதைய கோழிக்கோடு அரசன், வாஸ்கோடகாமாவின் பேரனான பிரான்ஸிஸ்கோ-டி-காமாவுடன் இரகசிய உடன்படிக்கை செய்து கொண்டான். இப்பாதகனின் கீழறுப்பு வேலைகளை சற்றும் அறியாமல் மனத்தூய்மையோடு நாட்டிற்காக போராடி வந்த குஞ்சாலி மரைக்காயர் சமுத்ரி அரசனைச் சந்திக்க வந்தபோது அவரைப் பிடித்து பரங்கியரிடம் ஒப்படைத்து விட்டான். இதனால் சங்கிலியால் பிணைக்கப்பட்டு ஊண், உறக்கம் இன்றி கொடுமைப்படுத்தப்பட்டு, இறுதியில் தேசவிரோதி சாமுத்ரி ராஜாவின் கூட்டுச்சதியால் நான்காம் குஞ்சாலி மரைக்காயர் கொடுமையாகக் கொல்லப்பட்டார்.
ஹாஜி பக்கீர் முஹம்மது சேட் என்ற முஸ்லிமால் வழங்கப்பெற்ற (அப்போதைய) இரண்டு இலட்சம் ரூபாயின் மூலம் வாங்கப்பட்ட சுதேசிக்கப்பலின் மாலுமியான வ.உ.சி.க்கு வரலாற்றுப்பாடப்புத்தகத்தில் தனி இடம் ஒதுக்கிய இந்திய அரசு இருநூறுக்கும் அதிகமான சிறப்புப் போர் கப்பல்களைக் கொண்ட மாபெரும் கடற்படையை உருவாக்கி நூறு ஆண்டுகளாக அந்நியரை எதிர்த்துப் போராடி வீரமரணம் அடைந்த குஞ்சாலி மரைக்காயர் குடும்பத்தைப் பற்றி ஒருவரி கூட பாடப்புத்தகங்களில் இடம் பெறச் செய்யாதது நாட்டின் விடுதலைக்காக போரிட்ட வீரத்தியாகிகளை அவமதிப்பதாகாதா?
ஒரு முஸ்லிம் வாங்கிக் கொடுத்தக் கப்பலின் மாலுமியாக இருந்த வ.உ. சிதம்பரனாருக்கு வரலாற்றில், “கப்பலோட்டிய தமிழன்” பட்டம். இந்தியச் சுதந்திரப்போருக்கு முன்னோடியாக ஒரு நூற்றாண்டுகாலம் பரங்கியர்களை எதிர்த்து 200க்கும் மேற்பட்ட இந்தியப் போர் கப்பல்களை உருவாக்கி எதிர்த்து மடிந்த குஞ்சாலி மரைக்காயர் குடும்பத்தைக் குறித்து ஒரு வரி கூட வலாற்றில் இல்லை. இந்திய வரலாற்று ஆசிரியர்கள் முஸ்லிம்களுக்கு இழைத்த மிகப்பெரும் அநீதியாகும் இது.
அந்நியருக்கெதிராக தெற்கு முனையில் சுமார் ஒரு நூற்றாண்டுக்காலம் நாட்டைப் பாதுகாக்க, முஸ்லிம்கள் செய்த தன்னிகரில்லா தியாகங்களின் சில துளிகள் தான் இவை.
நன்றி ஹைதர் அலி

சீதனச்சந்தை.

வளைகுடா நாடுகளில் வாலிபத்தை தொலைத்தது யாருக்காக.
உடன் பிறந்த சகோதரிகளை 'கரை' ஏற்றுவதற்கு கடல் கடந்து 
சென்று உழைத்து உருக்குலைந்து வளைகுடா நாடுகளில் 
வாலிபத்தை தொலைத்து நிற்கும் சகோதரர்கள் எத்தனை பேர்?
ஓவ்வொரு வார்த்தையையும் கேட்டுகும்போது........
உண்மைகள் உரைக்கத்தான் செய்யும். உண்மையும் அதுதான்.

பெரியவர்கள் பாதுகாப்போடு பலபேர் சாட்சியாக
கொள்ளைஅடிக்க சிறந்த வழிஇது.
வேட்கப்படவேண்டிய செய்தி.

பணத்திற்காக சீதனச் சந்தையில்
உனது வாழ்க்கையை விற்கும்
ஆண் ஜாதியே ....
நாம் உமக்கு எதிராய் குரல் கொடுப்போம்.

பேரம் பேசி வாழ்க்கையைவிற்கும் நிலையில் இந்த ஆண் மகனா??????????
அவமானம் ... அவமானம் ....
கேவலம் ..... கேவலம் ...
உன் நிலை கேவலம்
பணத்திற்காய் விலை போகிறவள் விபச்சாரி
பணத்திற்காய் வாழ்க்கையை விற்கும்
நீ மட்டும் எந்த வர்க்கம் .....

வைத்திய மாப்பிள்ளைக்கு வரதட்சனை வேண்டாமாம்
செல்வதற்கு கார் பங்களா மட்டும் போதுமாம் ..
எஞ்சினியர் மாப்பிள்ளைக்கு எதுவும் வேண்டாமாம்
இருக்க வீடு வளவு மட்டும் போதுமாம் ....
எதுவும் வேண்டாமாம்
அரசாங்க தொழில் ஒன்றே போதுமாம் ...
அறிவில் உயர்ந்த ஆண் மகன் கேட்கின்றான்
சீதனப் பிச்சை ...
படித்துப் பட்டம் பெற்ற பாமர வர்க்கமா நீங்கள் ...

பெற்றெடுத்த தாய் கேட்கின்றாள் இன்று ...
பெண் மனம் புரியாது
தன் மகனுக்காய் வரதட்சனை ...
தான் ஊட்டிய பாலுக்கு பத்து லட்சம் வேண்டுமாம்
ஆணைப்பெற்ற அம்மாக்களின்
அகங்காரம் - இது
நீங்கள் விலைக்கு வாங்கி விளையாட
 நாங்கள் பொம்மைகள் அல்ல
மானமுள்ள உணர்வுகொண்ட மாதர்கள்
பணம் செலுத்தி பல் இளித்து
பஞ்சனை சுகம் நாங்கள் தேடவில்லை ..

கை நீட்டி பிச்சை வாங்கும்
மானமற்ற ஆண்களே!!
சீதனத்தால் பெண் சமூகம் வடிக்கும்
ஒவ்வொரு கண்ணீர் துளிகளும்
உம் வாழ்வை அழிக்கும்
சாபம் நிறைந்த நெருப்புப் பொறிகள்
என்பதை மறவாதீர்கள் .........

(சீதனம் வாங்கும், வாங்கவிருக்கும் ஆண்களுக்காக எழுதப்பட்டது)
- பிரியமுடன் யஸ்மின் யஹ்யா -



ஒரு பெண்ணை மண மேடையில் அமர்த்துவதற்காக சீதனம் என்னும் மரணப் படுகுழியில் விழும் பெற்றோர்கள் எத்தனை பேர்?

குமர் காரியம் என்று பிச்சைக்காரர்களாக கையேந்தி வரும் முஸ்லிம்கள் எத்தனை பேர்?

வாழ்க்கையில் விரக்தியுற்று வேலி தாண்டி ஓடிய வெள்ளாடுகள் எத்தனை, எத்தனை? என்றேனும் இந்த சமுதாயம் இதனை எண்ணிப் பார்த்து இருக்குமா?

வசதிப்படைத்த பெண்ணின் பெற்றோர் சிலர் தங்களின் மகளுக்கு மனமுவந்து அன்பளிப்பாக வழங்குவதை நாம் குறைகூற இயலாது. அதை திருமணத்தன்று செய்யாமல் பிரிதொரு சமயத்தில் மணமக்களுக்கு செய்யலாமே! திருமணத்தன்று பலர் முன்னிலையில் இப்படி செய்வது மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அல்லவா அமைந்து விடுகிறது. இல்லாதவர்கள் என்ன செய்ய முடியும்?
ஜம்பதாயிரம், ஒரு லட்சம் என்று மணப்பெண்ணிடம் சீதனம் வாங்கிக்கொண்டு அதிலிருந்து சிறு அற்ப தொகை 1001 ரூபாயை மணபெண்ணுக்கு மஹராக வழங்கி மணமுடிக்கும் மகா கெட்டிகாரர்கள் இந்த சமூகத்தில் இருக்கவே செய்கிறார்கள். 'மஹர் வழங்கி மண முடியுங்கள் "என்ற மறை மொழியை அப்படியே பின்பற்றுகிறார்களாம்! அல்லாஹ்வை எமாற்ற நினைக்கும் இந்த அயோக்கியர்கள்.


நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு
மஹர் (திருமணக் கொடை) களை மகிழ்வோடு கொடுத்து விடுங்கள். (4:4)
என்ற அருள்மறையின் கட்டளைகளை மணமக்களும்
அவர்தம் பெற்றோர்களும் எண்ணி பார்க்க வேண்டாமா?

திருமணம் பணத்தினால் நிச்சயிக்கப்படுகிறது என்ற நிலை மாறி இறையச்சத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் என்ற நிலை வர வேண்டும். அப்போதுதான் சீதனம் ஒழிந்து வாடி வதங்கும் வனிதைகளுக்கு வாழ்வு கிடைக்கும். இல்லறமும் நல்லறமாகி இன்பம் பொங்கும். இன்ஷா அல்லாஹ் .....
வரதட்சணை வேண்டாம் என்று சொல்.SAY NO TO DOWRY.
நன்றி,
சீதனம் மற்றும் வரதச்சனைக்கு எதிராக, இன்றைக்கு அவசியமான,
அனைத்து நண்பர்களும் காணவேண்டியஒரு வலைதளம்
 --சுட்டி--


16 April 2017

உலகின் பெரிய வழிபாட்டுத்தளம்.

“விஷ்ணு” கடவுளுக்காக கட்டப்பட்ட இந்த கோயில்தான் உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே ” பெரியது “!
இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும்


                   
                      உலகின் பெரிய வழிபாட்டுத்தளம்

  
    நன்றி-சுட்டி

15 April 2017

மனிதாபிமானமற்ற மனிதமனமே தயவுசெய்துஉன்னைமாற்றிக்கொள்ள.


மனிதன் மனம் எவ்வளவு கொடுரமானது, இந்தவீடியோவை
பார்க்கும்போது உங்களுக்கே புரியும். இயற்கைக்கு மாறாக
மனிதன் செய்யும் செயல்.
மனிதாபிமானமற்ற மனிதமனமே தயவுசெய்து
உன்னை மாற்றிக்கொள்ள.

13 April 2017

கும்பகோணம் அருகே உள்ள திருப்புரம்பியம் என்ற கிராமம் குறித்த காணொளி

சோழ மன்னர்களின் முதன்மைநகரான நமது ஊர் ( கும்பகோணம் ) அருகே உள்ள திருப்புரம்பியம் என்ற கிராமம் குறித்த காணொளி.
 நாம் அறியாத பல சுவாரஸ்யமான வரலாற்றுக் குறிப்புகளைக்கொண்டுள்ளது.
 நமது ஊர்( கொரநாட்டு கருப்பூர் ) அருகில் உள்ள மனஞ்சேரி என்ற அழகிய கிராமத்தில் உள்ளதர்ஹாவை பற்றியவரலாறு தகவல் அறிந்தவர்கள் விரும்பினால் கமெண்ட்ஸ் பகிர்ந்து கொள்ளவும். 
இந்த போரில் கலந்துகொண்டவர்கள் அடக்கஸ்தலம்மாக இருக்க
வாய்பு உள்ளது.ஏன் என்றால் இந்த அடக்கஸ்தலதை காணும் போது
மரணம் அடைந்த பலஉடலை ஒரு இடதத்தில் அடக்கசெய்தது 
போல் உள்ளது.இந்த அடக்கஸ்தலதை கண்டவர்களுக்கு புரியும். திருப்புரம்பியம்

13 January 2017

இனிய தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள்



பொங்கல் வாழ்த்துக்கள்..
பொங்கல் விழா, 
தமிழக மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா.

போகி


மார்கழி கடைசி நாளன்று போகி கொண்டாடப்படுகிறது. அந்நாளில், பழையன கழித்து புதியன புகுத்தல் வழக்கம்.
போகியன்று, வீட்டின் கூரையில் செருகப்படும் பூலாப்பூ (அ) காப்புக்கட்டு பூலாப்பூ, வேப்பிலைக்கொத்து, ஆவாரம்பூக்கொத்து, இம்மூன்றும் சேர்ந்தக கட்டே பூலாப்பூ என்று ஒரே பெயரில் விற்கப்படுகிறது. பொங்கல் தினத்திற்க்கு முன்தினம், இதனை முன்வாயில் கூரையில் செருகி வைப்பர்.





02 January 2017

இவரை நினைக்க நினைக்க நெஞ்சு விம்முகிறது


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு...
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....


இவரை நினைக்க நினைக்க நெஞ்சு விம்முகிறது ! விழிகள் கலங்குகின்றன !!ஆம் தொடர்ந்து ஆங்கிலேயர்களை தூங்கவிடாமல் செய்த மாவீரன் மருத நாயகம் கான் சாஹிப்.


இந்தியாவில் சுதந்திற்கு போராடிய முஸ்லிம் போராளிகள் பலர் இருகின்றனர்.அதிகமான போராளிகள் துரோகிகளின் மூலமே ஆங்கிலேயர்களால் கொல்லபட்டனர் .அப்படிபட்ட போராளிகள் இருக்கும் பொழுது ஆங்கிலேயர்களால் இந்தியாவை கைப்பற்றுவது கேள்வி குறியானது?அப்படி பட்டவர்களின் ஒருவர் தான் இந்த மாவீரன் கான் சாஹிப். ஏன் இப்பொழுது உள்ள மக்கள் இவரது தியாகத்தை நினைப்பதில்லை,மேலும் ஏன் வரலாற்றில் இருந்து இவரை மறைக்க முயல்கின்றனர்.கோழையாக இருந்தவர்கள் ,நாட்டை காட்டி கொடுத்தவர்கள் எல்லாம் இன்று போற்ற படுகின்றனர் ஆனால் உண்மையான போராளிகள் மறைக்க படுகின்றனர். ஏன் இந்த பாகுபாடு.அவர் முஸ்லிம் என்ற ஒரே காரணமோ?இனியாவது விழிக்குமா வரலாறு ?மேலும் இவரை போற்றும் விதமாக மதுரை விமான நிலையதிற்கு இவரது பெயரை வைக்குமா அரசாங்கம் ? இனி இவரது சாதனைகளை பார்ப்போம் .

சிவகங்கை அருகே உள்ள பனையூர் என்ற கிராமத்தில் 1725ம் ஆண்டு மருதநாயகம்பிறந்தார். மதுரை பகுதியை ஆண்டதால் மருதநாயகம் என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. இஸ்லாத்தை ஏற்ற காரணத்தினால் முகம்மது யூசுப்கான் சாஹிப் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இவர் மருதுநாயகம்,கான்சாஹிப், மருதநாயகம் முகம்மது கான் சாஹிப் என பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறார்.

இவர் பிறவி முஸ்லிம். இதை நாட்டுப்புற பாடல்கள் உறுதிப்படுத்துகின்றன என்று பேரா. நத்தர் ஷா தனது ஆய்வு நூலில் வாதிடுகிறார்.

1764ல் வெள்ளைய அதிகாரி ஒருவர் எழுதிய கடிதம் ஒன்று அதற்கு ஆதாரமாக மேற்கோள் காட்டப்படுகிறது.

வளரும் பயிறும், துடிப்பான தொடக்கமும் :

சிறுவராக இருக்கும்போதே கம்பீரமாக தன் வாழ்நாளைத் தொடங்கினார் கான்சாஹிப். விளையாட்டாக இருந்தாலும், வீரதீர சாகஸகங்களாக இருந்தாலும் கான் சாஹிப்தான் அதில் வெற்றி பெறுவார்.மருத்துவர், தையல் தொழிலாளி,படகோட்டி, விளையாட்டு வீரர், வித்தகர் என பல திற மைகள் வெளிப்பட்டாலும் தன்னை போர்க் களத்தில் ஈடு படுத்திக் கொள்வதிலேயே அவரது ஆர்வம் இருந்தது.

தஞ்சாவூரை தலைமையகமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னன் பிரதாப சிம்ஹானின் படையில் கொஞ்ச காலம் பணிபுரிந்தார். இதுதான் முதல் ராணுவ அனுபவம்!

பிரெஞ்சுப் படையின் ஆயுதம் :

பிறகு என்ன காரணத்தினாலோ அவர் புதுச்சேரிக்குச் சென்றார். சென்றவர் அங்கேயும் போர் புலியாகவே தன்னை அடையாளம் காட்டினார். புதுச்சேரியை மையமாகக் கொண்டு ஆட்சி புரிந்த பிரெஞ்சுப் படையில் சாதாரண படைவீரனாக தன்னை இணைத்துக் கொண்டார்.

இவரது அறிவும், தலைமைப் பண்பும், போர் நுட்பமும் பிரெஞ்சு தளபதிகளை வியப்பில் ஆழ்த்திற்று. விளைவு, குறுகிய காலத்தில் முக்கியப் பதவிகளை வென்றார் கான்சாஹிப் மருதநாயகம்.
ஆற்காடு நவாப் 
யார் ஆற்காடு நவாப்?

ஒளரங்கசீப்பின் மரணத்திற்குப் பிறகு முகலாய பேரரசு தென்னிந்தியாவில் பலகீனமடைந்தது. யாரும், யாருக்கும் கட்டுப்படவில்லை. ஒவ்வொருவரும் தங்களை நவாபுகள், நிஜாம்கள் என்று சிற்றரசர்களாக அறிவித்துக் கொண்டனர்.

தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஆற்காட்டை தலைநகராகக் கொண்டு இயங்கிய ஆற்காடு நவாபின் அரசுதான் முதன்மையானதாகவும் , பலமானதாகவும் இருந்தது. இவர்களிடம் அனுமதி பெற்றுத்தான் ராபர்ட் கிளைவின் தலைமையில் கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் ஆங்கிலேயே வணிகர்களும், படையினரும் தென்னிந்தியாவில் நுழைந்தனர்.

ஆங்கிலேயப் படையில் கான் சாஹிப் :

ஆற்காடு போருக்குப் பிறகு தென்னிந்தியாவில் பிரெஞ்சுக்காரர்களின் செல்வாக்கும்,ஆதிக்கமும் குறையத் தொடங்கியது. அவர்கள் புதுச்சேரியையும், காரைக்காலையும் மட்டுமே தக்க வைத்துக் கொண்டனர். இந்நிலையில் பிரெஞ்சு படையில் இருந்த தளபதிகளுக்கும், கான் சாஹிபுக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் தோன்றியது.

கோபமுற்ற கான் சாஹிப் ஆங்கிலேயப் படையில் ராபர்ட் கிளைவின் அனுமதியுடன் இணைந்தார். தங்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் தங்களோடு இணைவதில் பெருமகிழச்சி கொண்டனர் ஆங்கிலேயர். ஆனால், அவர்தான் தங்கள் ஆட்சிக்கு பூகம்பமாக மாறப்போகிறார் என்பதை அப்போது அவர்கள் உணரவில்லை.
ஹைதர் அலி
வீரமும் பரிசும்


மருதநாயகம் ஆங்கிலேயர் அணியில் இருந்த போது துரதிர்ஷ்டமாக ஒரு போரை சந்திக்க வேண்டி வந்தது. இருவரும் வீரர்கள். மோதிக் கொண்ட அவர்கள் மைசூர் சிங்கம் ஹைதர் அலியும், மருதநாயகமும் தான் என்பது வேதனையான செய்தி!

அந்தப் போர் நடைபெற்றிருக்கக் கூடாது. விதியை என்னவென்பது ? திண்டுக்கல் அருகே போர் நடந்தது. இந்தப் போரில் மருதநாயகம் தோற்றிருக்க வேண்டும் என மனம் நினைக்கிறது. ஆனால் ஹைதர் அலியை தோற்கடித்தார் மருதநாயகம்! ஆங்கிலேயர்கள் பூரித்தனர். தான் யார் என்பதையும், ஹைதர் அலி யாருக்காக போராடுகிறார் என்பதையும் அறியாதகாலத்தில் மருதநாயகம் செய்த போர் அது. இதற்கு ஆற்காட் நவாபின் துரோகம்தான் பின்னணியாக இருந்தது.

நடைபெற்ற தவறுக்கு பிற்காலத்தில் பரிகாரம் தேடினார் மருதநாயகம்! மருந்து தடவினார் ஹைதர் அலி என்ற உணர்ச்சிமிகு செய்திகள் ஆங்கிலேயர்களுக்கு அப்போது தெரிந்திருக்க நியாயமில்லை.

மைசூர் சிங்கம் ஹைதர் அலியையே தோற்கடித்த தால் , புகழின் உச்சிக்குப் போனார் கான் சாஹிபு மருதநாயகம். அதுபோல் திருநெல்வேலி சீமையில் ஆங்கிலேயரை எதிர்த்த பூலித்தேவனுக்கும்,மருதநாயகத்திற்கும் 06.11.1759ல் போர் நடந்தது. மருதநாயகம் முதல் தோல்வியைச் சந்தித்தார். ஆனால் தளரவில்லை. ஒரேவருடத்தில் 12.12.1760ல் நெல்கட்டான் செவ்வல் அருகே போரிட்டு பூலித்தேவனை வென்றார்.

1752 ல் இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பாக்கத்தில் பிரெஞ்சுப் படையை மருதநாயகம் வீழ்த்தியது ஆங்கிலேயரையே ஆச்சர்யப்படுத்தியது.

ஒருமுறை 09.11.1757ல் மருதநாயகம் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலருடன் மட்டுமே இருந்தபோது, நூற்றுக்கணக்கான எதிரிகள் அவரை முற்றுகையிட்டனர். அதில் அவர் காட்டிய வீர தீர செயல்களும், அதுபோல் மேலும் பல வெற்றிகளும் அவருக்கு தளபதி தகுதிக்கு மேலே சென்று கவர்னர் பொறுப்பையும் பெற்றுத் தந்தது.

இன்றைய மதுரை, தேனீ, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர்,தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் திருச்சியின் தெற்கு பகுதிகளை போர்கள் மூலம் வென்றெடுத்ததால், ஆங்கிலேயர்கள் 1759ல் அவரை தெற்குச் சீமையின் கவர்னராக நியமித்தனர்.

இது ஆற்காடு நவாப் முகம்மது அலிக்கு பொறாமையை ஏற்படுத்தியது. கான் சாஹிபுக்கும், ஆற்காட் நவாபுக்கும் இடையில் பனிப்போர் தொடங்கியது. இதில் ஆங்கிலேயர் குளிர் காய்ந்தனர்.

மனம் மாறிய மருதநாயகம் :

திறமையற்ற நவாபையும், ஆற்றல் மிக்க தன்னையும் ஒரே தட்டில்வைத்துப் பார்க்கும் ஆங்கிலேயர்களின் சூழ்ச்சிகளை மெல்ல உணரத் தொடங்கினார் மருதநாயகம்! சிங்கமும், சிறு நரியும் சமமாக முடியுமா? உயர உயரப் பறந்தாலும் குருவி பருந்தாக முடியுமா?

இதுவரை ஆற்றல் மிகு தளபதியாய், ஆட்சி நிர்வாகியாய் மட்டுமே இருந்த கான்சாஹிபுக்கு ஏன் நமது நாட்டை நாமே ஆளக் கூடாது-? எதற்கு பிரெஞ்சுக்காரர்களிடமும், ஆங்கிலேயர் களிடமும் அடிமைப்பட்டு கிடக்க வேண்டும்-?இவர்கள் யார்-? அன்னியர்கள்தானே? இந்திய மன்னர்களுக்குள் நடைபெறும் சண்டை,சச்சரவுகளில் அன்னியர்கள் ஏன் லாபமடைய வேண்டும்? இப்படி பல கேள்விகள் அவரிடம் எழுந்தது. அதுவே தேசப் பற்றையும், விடுதலை உணர்வையும் தூண்டியது!

மதுரைப் போர்!


முடியாது! முடியவே முடியாது! ஆற்காடு நவாபிடம் மட்டுமல்லஉனக்கும் கப்பம் கட்ட முடியாது என்று ஆங்கிலேயர்களுக்கு சவால் விட்டார் மருதநாயகம். புயல் உருவானது! போர் மேகங்கள் சூழ்ந்தன!


1763 ஜனவரி 9 அன்று தனது கோட்டையில் பறந்த ஆங்கிலேயர் கொடியை இறக்கி, அதிகாரப்பூர்வமாக தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். ஆங்கிலேய கொடி எரிக்கப்பட்டது! போர் வீரனாக, சிறந்த ஆட்சியாளனாக திகழ்ந்த மருதநாயகம், தன்னை சிறந்த ராஜ தந்திரியாகவும் காட்ட வேண்டியதை உணர்ந்தார். கோட்டையில் அவரது கொடியான மஞ்சள் கொடியை ஏற்றியதோடு,பிரெஞ்சுக்காரர்களின் கொடியையும் சேர்த்து தன் கோட்டையில் பறக்கவிட்டார்! எதிரிக்கு எதிரி நண்பன்! பழைய நட்பை புதுப்பித்துக் கொண்டார். பிரெஞ்சுக்காரர்களின் உதவியை நாடினார்.

தக்காணத்தை ஆட்சி செய்த தக்காண நிஜாம் அலி , தனது கவர்னராக மருதநாயகத்தை அங்கீகரித்தார். இது ஆங்கிலேயர்களையும் ஆற்காடு நவாபையும் திகைப்பில் ஆழ்த்தியது.

ஆற்காடு நவாபின் வேண்டுகோளை ஏற்று, ஆங்கிலேயப்படை திருபுவனம் வந்தது. மருதநாயகத்தின் அதிரடி யுத்தத்திற்கு முன்னால் தாக்குப்பிடிக்க முடியாத அவர்கள் ஓடி ஒளிந்தனர். அடுத்தடுத்து இரண்டு போர்களிலும் மருதநாயகம் வென்று திகிலூட்டினார். நிமிர்ந்து உட்கார்ந்தனர் ஆங்கிலேய தளபதிகள்! விழிகள் மிரள யோசித்தனர்.

ஆங்கிலேயப் படைக்கு தலைமையேற்ற பிரஸ்ட்டன் திணறினார். அவரும்,கான்சாஹிபும் முன்னாள் நண்பர்கள்! அதனால் பயம் அதிகரித்தது! காரணம் மருதநாயகத்தின் குணமும், சினமும் தெரியும்! அவர் பயந்தபடியே நடந்தது! மூலக்கரை கொத்தளம் அருகே நடந்த ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் வாள் முனையில் நூற்றுக்கணக்கானோரை சீவித் தள்ளினார் மருதநாயகம்! உடைந்த வாள்களும் வீரம் பேசின! ரத்தம் கொட்டின! ஆங்கிலேய தளபதி பிரஸ்ட்டன் சுடப்பட்டு படுகாயமடைந்தார். பின்னர் உயிர் துறந்தார்.

பிரஸ்ட்டனை பெரிதாக நம்பியிருந்த ஆற்காடு நவாப் நிலை குலைந்தார். மருதநாயகம் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிடும் செய்தியும், அதன் வெற்றிகளும் மைசூர் மன்னர் ஹைதர் அலிக்கு எட்டியது. அவர் பழைய பகையை மறந்தார். மண்ணுரிமை போரில், தனது நிலைக்கு மருதநாயகம் வந்ததை வரவேற்று வாழ்த்து செய்தி அனுப்பினார்.

தந்திரம்! வஞ்சகம்!

ஆற்காடு நவாபுக்கு அடுத்து என்ன செய்வது புரியவில்லை. பயம் வாட்டியது. சிவகங்கை சீமையின் விஷமியான தாண்டவராயன் நீங்க ஒன்றும் பயப்படாதீங்கஎன்று செயற்கையாக ஆற்காடு நவாபுக்கு தைரியமூட்டினான். இனி, மருதநாயகத்தை போரினால் வெல்ல முடியாது! இனி தந்திரம் தான் தீர்வு என்பதை உணர்ந்து செயல்பட்டான் தாண்டவராயன்! துரோகிகளை விலை பேசினான்!


இறுதியாக மதுரையில் மருதநாயகத்தின் கோட்டை முற்றுகையிடப்பட்டது. தீவிரமான முன்னேற்பாடுகளுடன், நிறைய ஆயுதங்கள், ஆயிரக்கணக்கான வீரர்கள், உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவாசிய தேவைகளுடன் ஆங்கிலேயப்படைகள் திரண்டன.1763 பிப்ரவரி மாதம் மருதநாயகம் ஆங்கிலேயர்களின் கொடியை தனது பீரங்கி வாயிலில் வைத்து வெடித்து சிதற செய்து தன் கோபத்தை வெளிப்படுத்தினார். தொடங்கியது மதுரை போர்’!

மதுரை போர் உக்கிரமடைந்தது! நாட்கள் பல கடந்து, வாரங்களாக நீடித்தது முற்றுகை! மருதநாயகத்தின் கோட்டை, நகரிலிருந்து துண்டிக்கப்பட்டது, உணவு,ஆயுதங்கள், மருந்துகள் என காக்கா, குருவி கூட நுழைய விடாமல் தடுக்கப்பட்டது. மருதநாயகம் சரணடைந்தால் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்று ஆங்கிலேயர்கள் தூது அனுப்பினர். மண்டியிட மாட்டேன் என்றார் மாவீரன் மருதநாயகம். அப்படி சிந்திப்பதே குற்றம் என கருதுபவராயிற்றே!

நாலாயிரம் வீரர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆங்கிலேய அதிரடிப்படை,இரண்டாயிரம் குதிரைகள் என மருதநாயகத்துக்கு எதிராக முற்றுகை வலுத்தது. மருதநாயகத்தின் படையினர் பீரங்கிகளால் அதிர வைத்தனர். பின்வாங்கி ஓடிய ஆங்கிலேயர்கள் மதுரை தெப்பக்குளத்துக்கு அருகே பதுங்கினர். ஆங்கிலேயர்கள் அணியில் இருந்த இந்தியப்படையினர் போரில் ஈடுபடுவது குறித்து குழம்பிக் கொட்டிருந்தனர்.

அச்சமயத்தில், இந்திய வீரர்களின் குழப்பத்தை பயன்படுத்தி மருதநாயகம் நடத்திய தாக்குதலில் படு தோல்வியடைந்தது ஆங்கிலேயப்படை. வைகை நதி சிவந்தது! போர் தற்காலிகமாக நின்றது.

போரில் உறுதி

கோட்டையில் மருதநாயத்துக்கு ஆதரவாக பிரெஞ்சுப் படைகளும் தளபதிகளும் உறுதியோடு நின்றார்கள். அவர்களில் ஒருவர் மார்ச்சந்! அவருக்கும் மருதநாயகத்திற்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் இருந்தது. எனினும் அவரே சிறந்த தளபதி என்பதை உணர்ந்த மருதநாயகம் அவருக்கு முன்னுரிமை கொடுத்தார்.

ஒருவாரம் கழித்து 15.09.1763ல் மீண்டும் போரை தொடங்கினர் ஆங்கிலேயர். அப்போதும் தோல்வி. ஆங்கிலேயர்களின் தோல்வியில் கிடைத்த அமைதியில்,தற்காலிக இடைவெளியை சரியாக பயன்படுத்தினார் மருதநாயகம்! கோட்டைக்குள் உணவு, ஆயுதங்கள், மருந்துகள் கொண்டு வரப்பட்டு அடுத்த போருக்கு தயாரானார்கள்.

இறுதி யுத்தம்

ஆங்கிலேயர்கள் தங்கள் படையை பலப்படுத்தி மீண்டும் மதுரைக்கு வந்தனர்.31.01.1764 ல் மும்பையிலிருந்து சிறப்பு ஆங்கிலேய அதிரடிப் படையும் மதுரைக்கு வரவழைக்கப்பட்டது. இவர்கள் தொண்டி துறைமுகத்தில் இறங்கினர். மதுரையை சுற்றியிருந்த குட்டி, குட்டி அரசுகளான பாளையக்காரர்களையெல்லாம் ஆங்கிலேயர்கள் வளைத்தனர்.

ஆங்கிலேயர்களையும், ஆற்காட் நவாபையும் ஆதரிப்பவர்கள் தங்களை தாங்களே அழித்துக் கொள்வதற்கு சமம் என்றும், தனக்கு பாளையக் காரர்கள் அதாவது சிற்றரசர்கள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கடிதம் எழுதினார் மருதநாயகம்.

ஹைதர் அலியின் உதவி

முன்பு ஹைதர் அலியும், மருதநாயகமும் திண்டுக்கல் அருகே போரிட்டதை குறிப்பிட்டிருந் தோம். இப்போது வரலாறு மாறியது. இருவரும் தாய் நாட்டுக்காக ஓரணியில் திரண்டனர். பழைய சம்பவங்களை மறந்த மருதநாயகம், ஹைதர் அலியிடம் ராணுவ உதவியை கோரினார்.

நானும், நீயும் வேறல்ல. நமது படையும், நாடும் வேறல்லஎன்று சகோதர உணர்வோடு ஹைதர் அலி கடிதம் எழுதி தனது ஆதரவை வழங்கினார். (நன்றி : C. Hayavadana Rao, History of Mysore)

பிப்ரவரி 1764ல் ஹைதர் அலி, சுலைமான் என்ற தளபதியின் கீழ் ஒரு பெரும்படையை மருதநாயகத்துக்காக அனுப்பி வைத்தார். போதாக் குறைக்கு19.02.1764ல் பிரெஞ்சுப் படைகளும் வந்து சேர்ந்தது.

சீறினார்மோதினார்!

உற்சாகத்தில் சிலிர்த்து எழுந்தார் மருதநாயகம். அவரது நிலப்பரப்பின் முக்கிய எல்லைகளில் படைகள் முன்னிறுத்தப்பட்டது. வடக்கே நத்தம், தெற்கே பாளையங்கோட்டை பகுதிகளில் ராணுவம் பலப்படுத்தப்பட்டது. பாதுகாப்பு அரண்கள், அகழிகள், மணல் மேடுகள் என தற்காப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

மீண்டும், மீண்டும் ஆங்கிலேயர்கள் சளைக்காமல் மதுரையை குறிவைத்து போரிட்டனர். நவீன ஆயுதங்களை இங்கிலாந்திலிருந்து வரவழைத்தனர். 1764 ஜூன் மாதம் தொடர்ந்து நடைபெற்ற போரில் ஆங்கிலப்படை தோல்வியை சந்தித்தது. ஆங்கிலேயர்கள் புறமுதுகிட்டு ஓடியதோடு, சமாதானக் கொடியையும் ஏற்றினர். செய்தி கேட்டு அலறினார் ஆற்காட் நவாப்!

அதே நேரம் மதுரை மற்ற பகுதிகளுடன் துண்டிக்கப்பட்டதாலும், போரினால் ஏற்பட்ட நிர்வாக சீர்குலைவினாலும் பெரும் இழப்பு ஏற்பட்டது. கோட்டையில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டதால், அது மருதநாயகத்திற்கு பெரும் இன்னலை ஏற்படுத்தியது. மருதநாயகம், சரண் அடைய விடுக்கப்பட்ட வேண்டுகோளை நிராகரித்ததுடன் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை தாய் மண்ணை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கர்ஜித்தார்.

தந்திரம்

போரினால் வெல்ல முடியாது என்பதை உணர்ந்த எதிரிகள் தந்திரங்களையும்,வஞ்சகங்களையும் கையாண்டனர். கான்சாஹிபின் அமைச்சர்களில் ஒருவரான சீனிவாசராவை வலையில் வீழ்த்தினர். இதற்கு பின்னணியில் சிவகங்கை மன்னரின் தளபதியான தாண்டவராயன் இருந்தான். பொன்னுக்கும், பொருளுக்கும் ஆசைப்பட்ட சீனிவாசராவ் மூலம் மெய்க்காவலர்களான பாபாசாஹிப், சேகுகான் உள்ளிட்டோரையும், பிரதான தளபதியும், பிரெஞ்சு அதிகாரியுமான மார்ச்சந்த்தையும் துரோக வலையில் இணைத்தனர்.

மருதநாயகம் தன் குடும்பத்தோடு தப்பி செல்ல விருப்பதாகவும், அதன் பிறகு உங்கள் கதி அதோ கதிதான் என்றும் இவர்களிடம் அவதூறு கூறப்பட்டது. அவர்கள் மருதநாயகத்தின் மீது சந்தேகம் கொண்டனர். இதைத்தான் ஆங்கிலப்படை எதிர்பார்த்தது. அது நடந்தது. கான்சாஹிப் மருதநாய கத்தை பிடித்துக் கொடுத்தால்,பொதுமன்னிப்பும், சலுகைகளும் உங்களுக்கு வழங்கப்படும் என்று பேரம் நடந்தது. திட்டம் தயாரானது.

சூழ்ச்சி வென்றது

மருதநாயகத்தை யாராலும் அவ்வளவு எளிதில் நெருங்க முடியாது. அடக்க முடியாது. பிடிக்க முடியாது. போர் யானையை எப்படி முடக்க முடியும்? அவரை எப்போதும், கெடுபிடி இன்றி சந்திக்க கூடிய அந்த நால்வரும் இப்போது எதிரிகளின் கையில்! இதை அறியாதவராக மருதநாயகம் இருந்தார்!

அது ரமலான் மாதம் என்று சில வரலாற்று ஆசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள்.13.10.1764 அன்று கோட்டைக்குள் தனியறையில் அவர் தொழுதுக் கொண்டிருந்த போது துரோகிகள் நுழைந்திருக் கிறார்கள். தனது நம்பிக்கைக்குரியவர்கள் என்பதால் அவர் தயார் நிலையில் இல்லை. அவர்கள் பாய்ந்து மருதநாயகத்தை அமுக்கி பிடித்தனர். அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தொழுத நிலையில் இருந்த மருதநாயகத்தை சிறைபிடித்தனர்.

அந்த மாவீரன் அப்போது நம்பிக்கை துரோகிகளின் முகத்தை பார்த்து என்னை கொன்று விடுங்கள், எதிரிகளிடம் ஒப்படைத்து விடாதீர்கள்என்று கதறியுள்ளார். எதிரிகளிடம் அடிமைப்படுவதை, அவர் அப்போதும் விரும்பவில்லை. ஆம். மாவீரர்கள் மண்டியிடுவதில்லை! 700 வீரர்களின் பாதுகாப்புடன் கண்களை கட்டி,ஆற்காடு நவாபிடம் கொண்டு செல்லப்பட்டார். மருதநாயகம் கைதுக்கு பிறகு மூன்று நாட்கள் பட்டினி! அவரது மகனும், மனைவியும் திருச்சி சிறையில் பூட்டப்பட்டனர். அடுத்தநாள் மதுரை கோட்டையில் ஆற்காடு நவாபின் கொடி ஏற்றப்பட்டது.

விசாரணை

சிறைபிடிக்கப்பட்ட மருதநாயகத்தை சித்ரவதைப் படுத்தினார்கள். ஆற்காடு நவாபை பார்த்து தலை வணங்க சொன்னார்கள். முடியாது என மறுத்தார் மருதநாயகம்! உணவு தட்டுகளை எட்டி உதைத்தார். கைது செய்யப்பட்டதிலிருந்து தொடர்ந்து பட்டினி! ஆனாலும் மானமும், வீரமும் அவருக்கு உரமேற்றின.

மருதநாயகத்துக்கு என்ன தண்டனை? என விவாதிக்கப்பட்டபோது ஆங்கிலேயர்கள் தண்டனை எதுவுமில்லை என்றதும், ஆற்காடு நவாப் கோபமடைந்தார். அவரை தூக்கிலிடுங்கள் அல்லது என்னை கொல்லுங்கள் என அடிமை குரல் கொடுத்தார். ஆங்கிலெயர்களிடம் இருந்த நேர்மை, இரக்கம், கூட ஆற்காடு நவாபிடம் இல்லை. வேறு வழியின்றி ஆங்கிலேயர்கள் வரலாற்று பெருவீரனை தூக்கிலிட ஆணையிட்டனர்.

தூக்குக் கயிறை முத்தமிட்டார்

15.10.1764 இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் ஒரு கறுப்பு நாள்!

அன்று மதுரைக்கு மேற்கே உள்ள சம்மட்டிபுரத்தில் உள்ள ஒரு மாமரத்தில் தூக்கிலிட கொண்டுவரப்பட்டார், மருதநாயகம். அவர் அப்போதும் கலங்கவில்லை. தூக்குக் கயிறை (மரணத்தை) முத்தமிட்டார்.

மருதநாயத்தின் முகத்தில் பயம் இல்லை. விழிகளில் கலக்கமில்லை. தாய்நாட்டின் விடுதலைக்காக உயிர்துறக்கிறோம் என்ற பெருமிதம் தெரிந்ததாக வரலாற்றுப் பக்கங்கள் பூரிக்கின்றன.

தூக்கிலிடப்பட்டதும் அவர் மரணிக்கவில்லை. மாறாக கயிறு அறுந்து விழுந்தது! அவர் உடலில் சதையும், எலும்புகளும், ரத்தமும் மட்டுமில்லை. தியாக குணமும்,வீரத்தனமும் அல்லவா கலந்திருந் தது! எனவே, எடை தாங்கவில்லை!

புதிய கயிறு தயாரிக்கப்பட்டு மீண்டும் தூக்கிலிடப்பட்டார், அப்போதும் உயிர் பிரியவில்லை. நான் யோகாசனம் பயின்றவன். கழுத்தை உப்ப வைத்து, பல மணிநேரம் மூச்சை அடக்கும் ஆற்றல் கொண்டவன்என்று தூக்கு கயிற்றில் சீறினார் மருதநாயகம். எதிரிகள் குலை நடுங்கினர்.

இறுதியாக, மூன்றாவது முறை நீண்ட நேரம் தூக்கில் தொங்கவிட்ட பிறகுதான் மாவீரனின் உயிர் பிரிந்தது. நாடு துயரில் மூழ்கியது! அன்று இரவு சில ஆங்கிலேய தளபதிகளின் கனவில் மருதநாயகம் வந்து மிரட்டியதாகவும் செய்தி பரவியது. அதன் பிறகு எங்கே; மீண்டும் உயிர் பெற்று எழுந்து விடுவாரோ என பயந்த ஆங்கிலேயர்கள் புதைக்கப்பட்ட அவரது உடலை மீண்டும் தோண்டியெடுத்தனர்.

தலை, கால், கை என பல பாகங்களாக வெட்டி யெடுக்கப்பட்ட அவர் உடல் பல்வேறு ஊர்களுக்கு தனித்தனியாக அனுப்பப்பட்டு அடக்கப்பட்டது. ஆம், செத்த பிறகும் மருதநாயகத்தின் உடலை கண்டு ஆங்கிலேயர்களும், துரோகி ஆற்காடு நவாப் முகம்மது அலியும் நடுங்கியுள்ளனர். வெட்டப்பட்ட உடல்களை பொதுமக்கள் பார்வைக்கும் வைத்துள்ளனர்!

மருதநாயகம் அடக்கஸ்தலம்


அவரது உடலின் ஒரு பாகம் மதுரையருகே அவர் தூக்கிலிடப்பட்ட சம்மட்டி புரத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கே இப்போதும் அவர் நினைவிடம் உள்ளது. அவரது தலை திருச்சியிலும், ஒரு கை தஞ்சாவூரிலும், இன்னொரு கை பெரியகுளத்திலும், ஒரு கால் திருவிதாங்கோட்டிலும், இன்னொரு கால் பாளையங்கோட்டையிலும்,உடல் மதுரையிலும் அடக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


தொடர்ந்து இரண்டாண்டுகள் ஆங்கிலேயர்களை தூங்கவிடாமல் செய்தவன்,ஷஹீதாகி மீள முடியாத உறக்கத்தில் ஆழ்ந்தான்…! தாய் நாட்டிற்காக தன்னுயிர் தந்த, தலைவனின் உடல் சின்னாப்பின்னப்படுத்தப்பட்டதை நினைக்கும் போது நெஞ்சம் பதறுகிறது. விழிகள் கலங்குகின்றன. இந்த தியாகத்தை யாராவது போற்றுகிறார்களா? நினைக்க நினைக்க நெஞ்சு விம்முகிறதே 
நன்றி.
அஸ்கர்
மாதவலாயம்.[ஷார்ஜா-அமீரகம் ]