RMY BATCHA

Create your own banner at mybannermaker.com!

17 April 2017

சீதனச்சந்தை.

வளைகுடா நாடுகளில் வாலிபத்தை தொலைத்தது யாருக்காக.
உடன் பிறந்த சகோதரிகளை 'கரை' ஏற்றுவதற்கு கடல் கடந்து 
சென்று உழைத்து உருக்குலைந்து வளைகுடா நாடுகளில் 
வாலிபத்தை தொலைத்து நிற்கும் சகோதரர்கள் எத்தனை பேர்?
ஓவ்வொரு வார்த்தையையும் கேட்டுகும்போது........
உண்மைகள் உரைக்கத்தான் செய்யும். உண்மையும் அதுதான்.

பெரியவர்கள் பாதுகாப்போடு பலபேர் சாட்சியாக
கொள்ளைஅடிக்க சிறந்த வழிஇது.
வேட்கப்படவேண்டிய செய்தி.

பணத்திற்காக சீதனச் சந்தையில்
உனது வாழ்க்கையை விற்கும்
ஆண் ஜாதியே ....
நாம் உமக்கு எதிராய் குரல் கொடுப்போம்.

பேரம் பேசி வாழ்க்கையைவிற்கும் நிலையில் இந்த ஆண் மகனா??????????
அவமானம் ... அவமானம் ....
கேவலம் ..... கேவலம் ...
உன் நிலை கேவலம்
பணத்திற்காய் விலை போகிறவள் விபச்சாரி
பணத்திற்காய் வாழ்க்கையை விற்கும்
நீ மட்டும் எந்த வர்க்கம் .....

வைத்திய மாப்பிள்ளைக்கு வரதட்சனை வேண்டாமாம்
செல்வதற்கு கார் பங்களா மட்டும் போதுமாம் ..
எஞ்சினியர் மாப்பிள்ளைக்கு எதுவும் வேண்டாமாம்
இருக்க வீடு வளவு மட்டும் போதுமாம் ....
எதுவும் வேண்டாமாம்
அரசாங்க தொழில் ஒன்றே போதுமாம் ...
அறிவில் உயர்ந்த ஆண் மகன் கேட்கின்றான்
சீதனப் பிச்சை ...
படித்துப் பட்டம் பெற்ற பாமர வர்க்கமா நீங்கள் ...

பெற்றெடுத்த தாய் கேட்கின்றாள் இன்று ...
பெண் மனம் புரியாது
தன் மகனுக்காய் வரதட்சனை ...
தான் ஊட்டிய பாலுக்கு பத்து லட்சம் வேண்டுமாம்
ஆணைப்பெற்ற அம்மாக்களின்
அகங்காரம் - இது
நீங்கள் விலைக்கு வாங்கி விளையாட
 நாங்கள் பொம்மைகள் அல்ல
மானமுள்ள உணர்வுகொண்ட மாதர்கள்
பணம் செலுத்தி பல் இளித்து
பஞ்சனை சுகம் நாங்கள் தேடவில்லை ..

கை நீட்டி பிச்சை வாங்கும்
மானமற்ற ஆண்களே!!
சீதனத்தால் பெண் சமூகம் வடிக்கும்
ஒவ்வொரு கண்ணீர் துளிகளும்
உம் வாழ்வை அழிக்கும்
சாபம் நிறைந்த நெருப்புப் பொறிகள்
என்பதை மறவாதீர்கள் .........

(சீதனம் வாங்கும், வாங்கவிருக்கும் ஆண்களுக்காக எழுதப்பட்டது)
- பிரியமுடன் யஸ்மின் யஹ்யா -



ஒரு பெண்ணை மண மேடையில் அமர்த்துவதற்காக சீதனம் என்னும் மரணப் படுகுழியில் விழும் பெற்றோர்கள் எத்தனை பேர்?

குமர் காரியம் என்று பிச்சைக்காரர்களாக கையேந்தி வரும் முஸ்லிம்கள் எத்தனை பேர்?

வாழ்க்கையில் விரக்தியுற்று வேலி தாண்டி ஓடிய வெள்ளாடுகள் எத்தனை, எத்தனை? என்றேனும் இந்த சமுதாயம் இதனை எண்ணிப் பார்த்து இருக்குமா?

வசதிப்படைத்த பெண்ணின் பெற்றோர் சிலர் தங்களின் மகளுக்கு மனமுவந்து அன்பளிப்பாக வழங்குவதை நாம் குறைகூற இயலாது. அதை திருமணத்தன்று செய்யாமல் பிரிதொரு சமயத்தில் மணமக்களுக்கு செய்யலாமே! திருமணத்தன்று பலர் முன்னிலையில் இப்படி செய்வது மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அல்லவா அமைந்து விடுகிறது. இல்லாதவர்கள் என்ன செய்ய முடியும்?
ஜம்பதாயிரம், ஒரு லட்சம் என்று மணப்பெண்ணிடம் சீதனம் வாங்கிக்கொண்டு அதிலிருந்து சிறு அற்ப தொகை 1001 ரூபாயை மணபெண்ணுக்கு மஹராக வழங்கி மணமுடிக்கும் மகா கெட்டிகாரர்கள் இந்த சமூகத்தில் இருக்கவே செய்கிறார்கள். 'மஹர் வழங்கி மண முடியுங்கள் "என்ற மறை மொழியை அப்படியே பின்பற்றுகிறார்களாம்! அல்லாஹ்வை எமாற்ற நினைக்கும் இந்த அயோக்கியர்கள்.


நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு
மஹர் (திருமணக் கொடை) களை மகிழ்வோடு கொடுத்து விடுங்கள். (4:4)
என்ற அருள்மறையின் கட்டளைகளை மணமக்களும்
அவர்தம் பெற்றோர்களும் எண்ணி பார்க்க வேண்டாமா?

திருமணம் பணத்தினால் நிச்சயிக்கப்படுகிறது என்ற நிலை மாறி இறையச்சத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் என்ற நிலை வர வேண்டும். அப்போதுதான் சீதனம் ஒழிந்து வாடி வதங்கும் வனிதைகளுக்கு வாழ்வு கிடைக்கும். இல்லறமும் நல்லறமாகி இன்பம் பொங்கும். இன்ஷா அல்லாஹ் .....
வரதட்சணை வேண்டாம் என்று சொல்.SAY NO TO DOWRY.
நன்றி,
சீதனம் மற்றும் வரதச்சனைக்கு எதிராக, இன்றைக்கு அவசியமான,
அனைத்து நண்பர்களும் காணவேண்டியஒரு வலைதளம்
 --சுட்டி--


No comments: