RMY BATCHA

Create your own banner at mybannermaker.com!

18 November 2011

கொரநாட்டு கருப்பூர் பெயர் உண்டான வரலாறு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

திருப்பாடலவனம்(கருப்பூர்)
இறைவன் : ஸ்ரீசுந்தரேசர்
இறைவி : அபிராமி
தலவிருட்சம் : பாதிரிமரம்
தீர்த்தம் : பிரம்மதீர்த்தம்
பாடலம் - பாதிரிமரம். பாதிரி மரங்கள் அடர்ந்த காடாக இருந்ததால் பாடலவனம் எனப்பெயர் பெற்றது.
சுந்திரம் - அழகு. இத்தலத்தில் உமாதேவியும், சிவபெருமானும் அழகிய கோலத்தில் வீற்றிருப்பதால் சுந்தரேசர் என்று பெயர் பெற்றார் இறைவன். இத்தலம் பழம்பெருமை கொண்டது.
தமிழ் முனிவரான அகத்தியர் இத்தலத்தில் நீராடி சுந்தரேஸ்வரரை பூசித்து பல வரங்களைப் பெற்றார் என்றும் வாக்கில்லியர் என்னும் முனிவர் சுந்தரேஸ்வரை வழிபட்டு இறைவனோடு கலந்தார் என்றும் இத்தலபெருமை கூறப்படுகிறது. குபேரனும், சுரதன் என்ற மன்னர்களும் வழிபட்டு பல்வேறு பலங்களைப் பெற்றனர் என குடந்தைப் புராணம் கூறுகிறது.
ஞான உபதேசம் பெற விரும்பிய பிரம்மன் சிவலிங்கத்தை நிறுவி இறைவனை வழிபட்டு, இறுதியில் இறைவனிடம் ஞான உபதேசம் பெற்ற இடம் இந்தத் திருப்பாடலவனம் என்னும் கொரநாட்டுக் கருப்பூர்.
இந்த ஆலயத்தில் கிழக்கு நோக்கிய சன்னிதானத்தில் மூலவர் ஸ்ரீசுந்தரேஸ்வர சுவாமியும், தெற்கு நோக்கிய சன்னிதானத்தில் அபிராமி அம்மையும் வீற்றிருக்கின்றனர்.
பெட்டிகாளியம்மன் :
இக்கோயிலில் சக்தி மிக்க காளியம்மன் உள்ளது. அதை பெட்டியில் வைத்துள்ளனர். காளி உத்தரவு கொடுக்கும் போது அதற்கு விழா எடுக்கிறார்கள். இதற்கு பெட்டிகாளியம்மன் என்று பெயர். கருப்புநிற மகாகாளியம்மன் இடுப்பு வரை மட்டுமே உள்ள திருவுருவத்தோடு ஒரு பெட்டியில் காவிரியில் மிதந்து வந்து இத்தலத்தில் எழுந்தருளினாள். குறைந்த கருப்புக் காளி ஊர் என்றழைக்கப்பட்டு பின்னர் பேச்சு வழக்கில் குறைநாட்டு கருப்பூர் என்று மருவி இறுதியில் கொரநாட்டு கருப்பூர் என்ற பெயரே நிலைத்துவிட்டது.
காளியம்மன் வரலாறு
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் காவிரியில் மிதந்து வந்த பெட்டி ஒன்று திருபாடலவனம் என்ற இவ்வூரின் காவிரிக் கரையில் ஒதுங்கியது. காவிரிப் படித்துறையில் பெட்டியைக் கண்ட மக்கள் திறந்து பார்த்த பொழுது அதில் மேல்பாதி மட்டும் உள்ள காளியின் சிலை இருக்க கண்டனர். மரத்தால் செய்யப்பட்ட பழமையான, நேர்த்தியான, அற்புதமான சிலை ஊர் மக்களும் ஆலய அர்ச்சகரும் கூடி என்ன செய்வது என திகைத்து நிற்க, அப்பொழுது அக்கூட்டத்தில் இருந்த ஒரு சிறுபெண் மேல் காளியின் அருள் வந்தது. அச்சிறு பெண் வாயிலிருந்து மலையாளமும், பிராகிருத மொழியும் கலந்த சொற்களில் மாகாளி தன்னை எப்படி எந்த வகையில் பூசிக்க வேண்டும் என்ற வழிமுறைகளைக் கூறி அந்த சிறுபெண்ணை விட்டு நீங்கினாள்.
அதன்படியே அவ்வூர் மக்களும் மகாகாளியை பெட்டியில் வைத்து பூட்டி ஊரின் தென் பகுதியில் ஒரு ஓலைக் கொட்டகையில் வைத்து பூசித்தனர். பெட்டகத்தை திறக்கும் முன் அம்மனின் அருள் வாக்கின்படி அஷ்டோத்ர அர்ச்சனை செய்து அன்னம் முதலிய பிரசாதங்களை பெட்டி முன் வைத்து, பள்ளயம் போட்டு மகாகாளிக்கு அர்ப்பணித்த பின்னரே பெட்டித் திறக்கப்படும். இவ்வாறே இன்றும் நடைமுறையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஒரு வருடம் முடிவில் மகாகாளி பெட்டகம் இருந்த ஓலைக்கொட்டகை தீப்பிடித்து எரிந்து விட்டது. ஊர்மக்களும் பக்தர்களும் காளியிருந்த பெட்டகத்தை காப்பாற்றிவிட்டனர். பின்னர் என்ன செய்வது என்று காஞ்சிபுரம் காமகோடி பீடத்தில் அன்று பட்டத்திலிருந்த பரமாச்சாரியாரைக் அணுகிக்கேட்க அவரது ஆலோசனையின் பேரில் திருபாடலவனம் ஸ்ரீசுந்தரேஸ்வரசுவாமியின் ஆலயத்தில் சுவாமி சன்னிதிக்கு அருகில் அபிராமி அம்மை சன்னிதிக்கு கிழக்குப் பகுதியில் அருள்மிகு சுந்தரமகாகாளியம்மன் பெட்டகம் வைக்கப்பட்டுள்ளது. வருடத்திற்கு ஒருமுறை உத்தராயண காலத்தில் மகாகாளி பெட்டியினுள் இருந்தபடியே பல்லக்கில் புற்ப்பட்டு திருமஞ்சனவீதி உலா வருவாள். பல்லக்கு எப்பொழுதும் ஆடிக் கொண்டும், ஓடிக்கொண்டும் வரும். உக்கிர காளியின் ஆவேச வெளிப்பாடு அதுவாகும்
நன்றி-சுட்டி
பெட்டிகாளியம்மன் எனும் ஸ்ரீ சுந்தர மாகாளி
திருக்கோவில் அமைவிடமும், சிறப்புகளும்
கும்பகோணத்தில் இருந்து அணைக்கரை செல்லும் சாலையில் சுமார் 3 கி.மீ. தொலைவில் கொரநாட்டு கருப்பூர் எனும் ஊரில் உள்ளது அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோவில். அபிராமி அம்மை சமேதராய் சுந்தரேஸ்வரர் அருளும் திருத்தலம். ஊரின் புராணப் பெயர் திருப்பாடலவனம். ஒரு காலத்தில் இங்கு பாதிரி மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் இப் பெயர் உண்டானது. 

இத் திருக்கோவிலில், தனி சந்நதியில் ஒரு பெட்டியின் உள்ளே குடிகொண்டிருக்கின்றாள் ஸ்ரீ சுந்தர மாகாளி. பெட்டி ஒன்றின் உள்லே இருப்பதால் காளி அம்மன் என்றும் வணங்கப்படுகின்றாள். சாதாரண நாட்களில் பெட்டியினை மட்டுமே வணங்க முடியும். செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ராகு கால வேலைகளில் மட்டுமே பெட்டிக்கு நைவேத்யம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து பெட்டி திறக்கப்பட்டு உள்ளே குடி கொண்டுள்ல ஸ்ரீ சுந்தர மாகாளியின் திரு உருவத்தினை தரிசன் செய்ய முடியும். அதுவும் சிறிது நேரம் மட்டுமே. பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்து முடித்த உடன் திரும்ப பெட்டி மூடப்படும். இத் திருக்கோவில் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் கோவில் என்பதைவிட பெட்டி காளி அம்மன் கோவில் என்றே எல்லோராலும் அழைக்கப்படுகின்றது.

திருத்தல பெருமைகளும் வழிபாட்டு பலன்களும்
முப்பத்து முக்கோடி தேவர்களும் வணங்கிய திருத்தலம் இது. இத் திருக்கோவிலில் உள்ள சுந்தரேஸ்வரரை வழிபட்டே குபேரன் நவநிதிகளையும் காக்கும் பெரும் பேற்றினை பெற்றான். திசை ஒன்றின் அதிபதியுமானான் என்கின்றன நமது புராணங்கள். எனவே, இத் தல அபிராமி அம்மை சமேத சுந்தரேஸ்வரரை வழிபட்டால் பொன், பொருள், நல் மனைவி, மக்கட்பேறும் கிடைக்கும் என்பது திண்ணம். இத் திருத் தலத்தில் லஷ்மி குபேர யாகம் செய்வது பெரும் சிறப்பு. சகல ஐஸ்வர்யங்கலையும் வழங்கிடும். தேவர்கள் வந்து இங்கு வழிபட்ட பொழுது அம்மை சமேதராய் முக்கண்ணன் அழகு மிளிர காட்சி தந்ததால் சுந்தரேஸ்வரர் என்ற திருநாமம் கொண்டார். அகத்திய மாமுனி வணங்கிய தலம் இது. வாலகீல்யர் என்ற முனிவர் ஒரு சித்ரா பௌர்ணமியன்று சுந்தரேஸ்வரரை வழிபட்டு அவரில் ஐக்கியமானார் என்பது ஐதீகம். சோமகேது என்ற மன்னனுக்கு புத்திரப் பேறு அளித்திட்ட திருக்கோயில் இது. இத்தல இறைவனை வணங்குபவர்கள் அனைத்து குறைகளும் நீங்கி, வளமான வாழ்வு பெற்றிடுவர் என்கின்றது திருக்குடந்தை புராணம். பெட்டி காளி அம்மனை வழிபட சகல் விதமான தோஷங்களும் நீங்கும் என்பது அனைவரும் கண்ட உண்மை. 

அபிராமி அம்மை சமேத சுந்தரேஸ்வரரை வழிபட பொன், பொருள், நல் மனைவி, மக்கட்பேறும் கிடைக்கும். இங்கு லஷ்மி குபேர யாகம் செய்வது சகல ஐஸ்வர்யங்களையும் வழங்கிடும். இத்தல இறைவனை வணங்குபவர்கள் அனைத்து குறைகளும் நீங்கி, வளமான வாழ்வு பெற்றிடுவர் என்கின்றது திருக்குடந்தை புராணம்
பெட்டிகாளியம்மன் திருத்தலம் வந்த வரலாறு
ஒரு சமயம் காவிரி நதியில் பெட்டி ஒன்று மிதந்து வந்து இன்றைய கொரநாட்டு கருப்பூரில் கரை ஒதுங்கியது. அப்பொழுது அங்கு இருந்த மக்கள் அனைவரும் ஒன்று கூடி அப் பெட்டியினை ஆற்றில் இருந்து எடுத்து கரையின் மீது வைத்தனர். அச் சமயம் அங்கிருந்த சிறுமி ஒருத்தியின் மீது அம்மன் வந்து, ' தானே இஷ்டப்பட்டு ஊரின் நன்மைக்காக இங்கு தாமாகவே வந்ததாகவும், தம்மை இங்கு வைத்து வழிபடவேண்டும்' என்றும் கட்டளை இட்டாள். அம்மனின் அருள் கண்ட மக்கள் ஆனந்தக் கண்ணீர் விட்டனர். அனைவரும் ஒன்று கூடி பெட்டியினை வைத்து வழிபட வேண்டி, குடிசை ஒன்றினை உருவாக்கி அதில் பெட்டியை வைத்து நித்தம் நித்தம் பூஜைகள் செய்து வழிபட்டு வந்தனர். ஆனால் அடிக்கடி அந்த குடிசை தீப்பிடித்தது. வேறு கூரை மாற்றினாலும் மீண்டும் தீப்பிடித்து கூரை சாம்பலாகும். என்ன செய்வது என்று தெரியாது ஊர் மக்கள் செய்வதறியாது திகைத்தனர். மனம் கலங்கினர்.

அச் சமயம், காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதியாய் இருந்த சங்கராச்சார்யார் கும்பகோணத்தில் உள்ள சங்கர மடத்திற்கு வருகை புரிந்திருந்தார். இதனை கேள்வியுற்ற ஊர் மக்கள் ஒன்று குடி, காஞ்சி மகானிடம் சென்று தங்கள் குறைகளை கூறினர். இதனைக் கேட்ட காஞ்சி மகான் ஊர் மக்களுடன் கருப்பூர் வந்தார். பெட்டியினை திறந்து பார்த்தார். இடுப்பு வரையான உருவம் கொண்டு எட்டு கரங்களுடனான காளியின் திருவுருவம் கண்டார். மெய் சிலிர்த்தார். அம்மனை வணங்கினார். பின்னர் ஊர் மக்களிடம் " காளி மிக உக்கிரமாக இருக்கின்றாள், இவளை இந்த குடிசையில் வைத்து வணங்குவது தவறு. எனவேதான் குடிசைகள் தீப்பிடிக்கின்றன. இவளது உக்கிரம் தணிக்க, பெட்டியுடன் அம்மனை எடுத்து சென்று சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் வைத்து வணங்குங்கள். ஊர் செழிக்கும் " என நல்லாசி கூறினார். ஊர் மக்களும் அவ்வாறே காளியினை பெட்டியுடன் சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் வைத்து ஸ்ரீ சுந்தர மாகாளி என்ற திருநாமத்துடன் வணங்கி வருகின்றனர்.

பெட்டி காளி அம்மனை வழிபட சகல வித தோஷங்களும் நீங்கும். அஷ்ட நாக கன்னியரை, பெட்டிகாளிக்கு உகந்த, செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமை ராகு கால வேளைகளில் பாலாபிஷேகம் செய்து வழிபட்டு, பின்னர் பெட்டி காளிக்கு நெய் தீபம் ஏற்றி வணங்கினால் நாக தோஷம் உள்ளிட்ட சகல தோஷங்களும் தீர்கின்றன.
இத் திருத்தலம் பல பெருமைகளை கொண்டது என்கிறது தல புராணம். பிரம்ம தேவர் இங்கு சிவ லிங்கம் ஒன்றினை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகவும், குபேரன் இங்குள்ள திருத்தல புஷ்கரணியில் திருநீராடி, கடும் தவம் செய்து, அம்மையப்பனாய் சிவ தரிசனம் கண்டதாகவும் கூறுகின்றது தல புராணம். உட் சுற்று பிரகாரத்தில் குரு பகவானுக்கு நேர் எதிரில் தனி சந்நதியில் வீற்றருளும் அஷ்ட நாக கன்னியரை, பெட்டிகாளிக்கு உகந்த நேரமான செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமை ராகு கால வேளைகளில் பாலாபிஷேகம் செய்து வழிபட்டு, பின்னர் பெட்டி காளிக்கு நெய் தீபம் ஏற்றி வணங்கினால் நாக தோஷம் உள்ளிட்ட சகல தோஷங்களும் தீர்கின்றன. குபேரன் சிவபெருமானை வழிபட்டு நவநிதிகளையும் நிர்வகிக்கும் பொறுப்பினை பெற்றதால், இங்கு லஷ்மி குபேர பூஜைகள் செய்வது சிறப்பு. தீபாவளிக்கு மறுநாள் லஷ்மி பூஜைக்கு உகந்த நாளாகும். இதனை கேதார கௌரி நோன்பு என்பர். அன்றைய தினம், இத் திருத்தலத்தில் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் செய்து சிவனையும், அம்பளையும், பெட்டி காளியையும் வழிபட்டால் சகல விதமான செல்வங்களும் வந்து சேர்ந்திடும் என்பது நிச்சயம்.கும்பகோணம் சுற்றி உள்ள நவக்கிரக கோவில் பற்றிதேறிந்துகொள்ள.
சுட்டியை காணவும்
நன்றி-சுட்டி

No comments: