RMY BATCHA

Create your own banner at mybannermaker.com!

17 March 2012

கேரளா சென்ற வாலிபர் மாயம் குடந்தை போலீஸில் தாய் புகார்


கும்பகோணம்: வேலைக்கு செல்வதாகக் கூறி சென்ற வாலிபர் திரும்பி வராததால் கும்பகோணம் போலீஸார் விசாரிக்கின்றனர். கும்பகோணம் அருகேயுள்ள கொரநாட்டு கருப்பூர் ரைஸ்மில் தெருவைச் சேர்ந்தவர் முகம்மதுரபீக். இவரது மனைவி பைரோஜிபானு. இ வர்களது மகன் இதயதுல்லா (26). கொத்தனார் வேலை செய்யும் தொழில் செய்து வந்தார்.

கடந்தாண்டு நவம்பர் 6 ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த சிலருடன் கேரளாவிற்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். பின்னர் 10 நாட்கள் கழித்து கேரளாவிலிருந்து இதயதுல்லா அவரது அம்மாவிற்கு ஃபோன் செய்து பேசினார். அதன்பிறகு ஃபோன் செய்யவில்லை. இந்நிலையில் இதயதுல்லாவுடன் கேரளாவில் வேலைக்காகச் சென்றவர்கள் ஊருக்கு திரும்பி வந்துவிட்டனர். ஆனால், இதயதுல்லா மட்டும் வரவில்லை. அவரின் தாய் கேரளாவிற்கு சென்றவர்களிடம் என் மகன் ஏன் வரவில்லை? என கேட்டபோது அவர் எங்களுடன் ஊருக்கு திரும்பாமல் அங்கேயே இருக்கிறார் என கூறியதாக தெரிகிறது. இதனால் கவலையடைந்த பைரோஜிபானு கும்பகோணம் தாலுக்கா போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து இதயதுல்லா கேரளாவில்தான் இருக்கிறாரா? அல்லது தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.நன்றி-தினமலர் 
16 மார்ச் 2012
கும்பகோணம்: கும்பகோணம் அருகே புதிதாக கட்டப்பட்டுப்பட்டு வந்த கட்டடத்தில் இருந்து 3 நாட்டு வெடி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
கும்பகோணத்தை அடுத்த தராசுரம் எலும்பிச்சங்கா பாளையத்தில் கஸ்தூரி என்பவர் புதிதாக வீடு ஒன்று கட்டி வருகிறார். கடந்த 3 மாதங்களாக அங்கு பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இந்த நிலையில், கட்டடத்தினை பார்வையிடச் சென்ற கஸ்தூரி, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடி குண்டுகளை கண்டுபிடித்தார். இதையடுத்து திருச்சியில் இருந்து வரவழைக்கப்பட்ட வெடி குண்டு நிபுணர்கள் குழுவினர், அந்த கட்டடம் முழுவதும் சோதனை நடத்தினர். பின்னர் கட்டடத்தில் இருந்து எடுக்கப்பட்ட 3 சக்திவாய்ந்த நாட்டு வெடி குண்டுகளையும், செயலிழக்கச் செய்தனர்.
நன்றி - Thoothuonline

No comments: