RMY BATCHA

Create your own banner at mybannermaker.com!

23 April 2012

கும்பகோணத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் பரபரப்பு ..


கும்பகோணம் நேற்று காலை நாகர்கோவில் இந்திய உணவுக் கழகத்திலிருந்து அரிசி ஏற்ற கும்பகோணம் ரெயில் நிலையத்திற்கு வந்த சரக்கு ரெயில்இணைப்பு பாதையிலிருந்து சரக்கு கையாளும் இடத்திற்கு ரெயில் பெட்டிகளை கொண்டு செல்வதற்காக ரெயில் இன்ஜினை பின்னோக்கி ஏற்றும் போது இருப்புப் பாதையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புக் கட்டைகளையும், இரயில்வே சிக்னலையும் கவனிக்காமல் இயக்கயதால் இரயில் பாதையில் இருந்து தடுப்புக் கட்டைகளை தாண்டி 100 மீட்டர் தரையில இறங்கி நின்றது. எதிரில் செக்காங்கண்ணி பகுதி மக்கள் வசிப்பிடங்களும் கார் மெக்கானிக் செட்டும் இருக்கிறது. அடிக்கடி மக்கள் நடமாட்டம் உள்ள பகுதி இதனால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரெயில் இன்ஜின் டிரைவர் பார்த்திபன் என்பவர் நாகர்கோவில் சந்திப்பிலிருந்து கும்பகோணம் ரெயில் நிலையம் வரை ஓட்டி வந்தார். இது குறித்து கும்பகோணம் ரெயில்வே போலீசாரும், கும்பகோணம் காவல் துறையும் வழக்கு பதிவு செய்து விபத்து நடந்தது தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தமிழகத்திலேயே இதுவரை இது மாதரி தடம் புரண்ட சம்பவம் இல்லை. ஆதலால் இந்த சம்பவத்தை நேரில் பார்ப்பதற்கு மக்கள் பரபரப்பாக கூடினார்கள். திருச்சி ரெயில்வே மண்டலத்தை சார்ந்த கும்பகோணம் ரெயில் நிலையம் என்பதால் திருச்சி ரெயில்வே மண்டலத்தை சார்ந்த உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு தப்பிச் சென்ற ரெயில் டிரைவரை தேடி வருகிறார்கள் மற்றும் சம்பவம் நடந்த பகுதியல் செக்காங்கண்ணி ரெயில்வே கேட் கீப்பரிடம் திருச்சி உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடததினார்கள்.
சம்பந்தபட்ட ஓட்டுனர் பார்த்திபன் மீது ரெயில்வேகாவல்
அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து டிரைவரை தேடி வருகிறார்கள்.
நன்றி-தினபூமி
கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கம் மீண்டும் மூடல் ...

கும்பகோணம்: அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நோயாளி இறந்ததையடுத்து கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கம் மூடப்பட்டது. 6 மாதங்களுக்கு முன்பு தஞ்சை மருத்துவக்கல்லூரி தொற்றுநோய் பிரிவு நிபுணர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தனர். அறுவை சிகிச்சை அரங்கில் இருந்து சில மாதிரிகளை எடுத்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து, அறுவை சிகிச்சை அரங்கில் தொற்றுநோய் கிருமி பரவியுள்ளதால், இங்கு அறுவை சிகிச்சை எதுவும் செய்ய வேண்டாம் என பரிந்துரை செய்தனர். அதனால் கடந்த 4 மாதமாக இங்கு அறுவைசிகிச்சை நடைபெறவில்லை. தமிழக அரசின் மருத்துவத் துறை இயக்குனர் உத்தரவின்பேரில், குடந்தை அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அரங்கில் உடனடியாக பல்வேறு ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் கடந்த 5 ம் தேதி முதல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அன்று முதல் சிறிய அளவிலான அறுவைசிகிச்சைகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் விரைவீக்க அறுவை சிகிச்சைக்காக கும்பகோணம்
அடுத்த கண்டரமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (40), வில்லியவரம்பல் கிராம த்தை சேர்ந்த கருணாகரன் (30) ஆகியோர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இருவருக்கும் கடந்த 16 ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. அன்று மாலையே இருவருக்கும் காய்ச்சல், மயக்கம், மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இருவரும் உடனடியாக மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத் துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த20 ம் தேதி பாலசுப்ரமணியன் இறந்தார். கருணாகரனுக்கு தொடர்ந்துசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக மருத்துவத்துறை இயக்குனர் உத்தரவின்பேரில் ஒரு கண்காணிப்பு குழு அமைக்கப்பட் டது. இந்த குழுவில் உள்ள மருத்துவ நிபுணர்கள் கும்பகோ ணம் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்து வருகின்றனர். இதையடுத்து கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கு மீண்டும் மூடப்பட் டது.
நன்றி-தினகரன்

No comments: