RMY BATCHA

Create your own banner at mybannermaker.com!

13 January 2012

சாதி மத வேறுபாடில்லாது அனைத்து தமிழர்களுக்கும் தமிழர் திருநாள் பொங்கல் வாழ்துகள்.


உழவர் பெருமக்கள்.
இவர்கள் "சேற்றில்" கை வைத்தால்தான் நாம் "சோற்றில்" கை வைக்க முடியும்.
தமிழர் திருநாள்... பொங்கல் திருநாள்...
உழவர்கள் அறுவடை நாளை தமிழர் திருநாளாக உலகெங்கும் உள்ள தமிழர்கள் குதூகலமாகக் கொண்டாடுகிறார்கள்.
தைத்திருநாளாம் இந்தப்பொங்கல் திருநாள் உங்கள் வாழ்வில்
அனைத்துவிதமான செல்வத்தையும், என்றும் குறையாத அன்பையும் கொண்டுவரும் புதிய நாளாக அமைய வாழ்த்துக்கள்
தமிழனாய் இருப்போம் ...
தமிழை போற்றுவோம்...
ஒன்றுபடுவோம்......
நக்கீரன் விவகாரத்தின் போது தலைமை நீதிபதி இக்பால்அவர்கள் ''அரசு என்பது எல்லோருக்கும் பொதுவானது. ஜாதி, மதம் பார்க்கக் கூடாது. கட்சி பேதம் பார்க்கக் கூடாது. மரண தண்டனை கைதிகளுக்கு கூட குடிநீரும், மின்சாரமும் கடைசி வரை வழங்க வேண்டும்.என்றுநீதிஅரசர் கூறிஉள்ளார். 
ஆனால் இன்று தமிழ்நாட்டில் காவேரியால்தஞ்சை திருச்சியில் 
முப்போகம் விளைதபூமி இன்று வீட்டுமனையாக மாறுகிறது.
முல்லை பெரியார்ரால் தென்மாவட்டங்களில் குடிநீரும் 
கேள்விகுறியாய் உள்ளது.
தமிழர்கள்..
தமிழர் என்பவர்கள் ஒரு தேசிய இனம். தமிழர்களின் தாய் மொழி தமிழ். தமிழர்கள் ஏறத்தாழ 2300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட எழுதப்பட்ட வரலாற்றைக் கொண்ட தெற்காசிய திராவிட இனக்குழுவைச் சேர்ந்தவர்கள். மிகப் பழைய தமிழ்ச் சமுதாயங்கள் தென்னிந்தியா, இலங்கையைச் சேர்ந்தவைகள் ஆகும். உலகம் முழுவதிலும் இன்று தமிழர் பரவி வாழ்ந்தாலும் அவர்களது தாயகம் தமிழ்நாடும், தமிழீழமுமே ஆகும். 1800 - களில் பிரித்தானியக் குடியேற்றவாத அரசால் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்காகத் தென்னிந்தியாவிலிருந்தும், இலங்கையின் வடபகுதியிலிருந்தும் குறிப்பிடத்தக்க அளவில் தமிழர்கள் மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற நாடுகளில் குடியேற்றப்பட்டார்கள். இவ்வாறே மொரிசியசு, மடகாசுகர், தென்னாபிரிக்கா போன்ற ஆபிரிக்க நாடுகள் பலவற்றிலும் தமிழர்கள் குடியேறியுள்ளார்கள். 20 - ஆம் நூற்றாண்டில் தொழில் வாய்ப்புகள் பெற்று நடு ஆசிய நாடுகளுக்குச் சென்று வசிக்கின்றனர். 1950 - களின் பின்னர் தமிழர் தொழில் வல்லுனர்களாக ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தனர். 1983 - இல் இலங்கை இனக்கலவரங்களில் பாதிக்கப்பட்டுப் பெருமளவு ஈழத்தமிழர்கள் அசுத்திரேலியா, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, பிரான்சு, யேர்மனி, சுவிற்சர்லாந்து, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகளிலும் சென்று வாழ்கிறார்கள். உலகில் 68 மில்லியன் மக்கள் தமிழைத் தாய் மொழியாகவும், மேலும் 9 மில்லியன் மக்கள் தமிழை இரண்டாம் மொழியாகவும் பயன்படுத்துவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
வரலாறு….
தமிழர் தோற்றம் பற்றி மூன்று கருதுகோள்கள் உள்ளன. பழந்தமிழர் தென் இந்தியாவின் பழங்குடிகள் என்பது ஒரு கருதுகோள். இரண்டாவது, சற்று வேறுபட்டு ஆதியில் ஆபிரிக்காவில் இருந்து அரேபிய கடல் ஊடாக தென்னிந்தியா வந்தோரின் வழித்தோன்றல்களே தமிழர் என்கிறது. தமிழர் நடு ஆசியா, வட இந்தியா நிலப்பரப்புகளில் இருந்து காலப்போக்கில் தென் இந்தியா வந்தனர் என்பது மற்றைய கருதுகோள். தமிழர்களின் தோற்றம் மற்ற திராவிடர்களைப் போலவே இன்னும் தெளிவாக அறியப்படவில்லை. எனினும் அவர்கள் கி. மு. 6000-ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவிற்கு வந்திருக்கலாம் என்று தொல்லியல் மற்றும் மரபியல் ஆய்வுகள் கருதுகின்றன. (கேட்கில் 1997). பண்டைய ஈரானின் இலாமைட் மக்களுடன் தமிழர்கள் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறப்பட்டாலும் அதனை நிரூபிக்க வலுவான ஆதாரங்கள் இல்லை. சிந்து சமவெளி நாகரிக மக்கள் தமிழர்களோ அல்லது திராவிடர்களோ தான் (உதா. பர்போலா 1974; 2003) என்னும் கருத்தும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது.எப்படி இருப்பினும் தமிழினம் தொன்மை வாய்ந்த மக்கள் இனங்களில் ஒன்று.
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில், குறிப்பாக ஆதிச்சநல்லூரில், அகழ்ந்தெடுக்கப்பட்ட கிமு 1000 - ஆம் ஆண்டு காலத்து புதையுண்ட மண்பாண்டங்கள் தற்காலத் தமிழ்நாட்டில் தமிழர்கள் வாழ்ந்ததற்கு சான்றாக விளங்குகின்றன. அப்புதை பொருட்களில் உள்ள குறிப்புகளும் பண்டைய தமிழ் இலக்கியங்களில் உள்ள குறிப்புகளும் ஒத்துப் போவதால், அக்கால கட்டத்தில் தென்னிந்தியாவில் தமிழர்கள் வாழ்ந்ததை இது உறுதி செய்கிறது. இவ்விடங்களில் சமீபத்தில் மேற்கொள்ளப் பட்ட அகழ்வுகளில் கிடைத்த பழைய தமிழ் எழுத்துக்கள் குறைந்தது கிமு 500 - ஆம்ஆண்டைச் சேர்ந்தவையாகும்.

தமிழர்கள் இறை நம்பிக்கை உடையவர்களாகவே பெரும்பாலும் இருந்து வந்திருக்கின்றார்கள். சங்கத் தமிழர்கள் உலகாயுத போக்கு அல்லது இயற்கை வழிபாட்டையே கொண்டிருந்தனர் என அறிஞர் சிலர் வாதிட்டாலும், தமிழர்கள் முற்காலம் தொட்டே பல்வேறு சமய மரபுகளை அறிந்தும் பின்பற்றியும் வந்துள்ளார்கள். பெளத்தம், சமணம், இந்து, இசுலாம், கிறித்தவம் ஆகிய பெரும் சமய மரபுகளைத் தமிழர்கள் பல்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு போக்குகளுடன் பின்பற்றி வந்துள்ளார்கள். பெரும்பாலான தமிழர் தமது கடவுளாக முருகனை வணங்குகின்றனர். முருகனை விட அய்யனார், மதுரை வீரன், கண்ணகி (கடவுள்), இசக்கி அம்மன், கறுப்புசாமி, சுடலை மாடன் ஆகிய காவல் தமிழ்க் கடவுள்கள் வழிபாடும் பரவலாக இருக்கின்றது.
நாயன்மார்கள் மற்றும் ஆழ்வார்களின் பக்தி இயக்கம், வள்ளலார் இராமலிங்க அடிகளைப் பின்பற்றிய மனிதநேய இயக்கம், அய்யாவழி ஆகியவை தமிழ்ச் சூழலில் தோன்றி சிறப்புற்றவைதான்.
இன்று திருக்குறளைப் பொது அற மறையாகவும், இறை நம்பிக்கையை ஏற்றும், அனைத்து சமயங்களுக்கு இடமளிக்கும் பண்பைப் பேணியும் தமிழர் சமய சிந்தனை, நடைமுறைப் போக்குகள் அமைகின்றன. அதே வேளை, (இறைமறுப்பு (நாத்திகம்), அறியாமைக் கொள்கை (அறியாமை), உலகாயதக் கொள்கை, இயற்கை நம்பிக்கை கொண்ட பல தமிழர்களும் உள்ளார்கள்.
ன்றையதினத்தில் ன்று..... ஜனவரி 14

1539 - ஸ்பெயின் கியூபாவை இணைத்துக் கொண்டது.
1690 - கிளாரினெட் இசைக்கருவி ஜெர்மனியில் வடிவமைக்கப்பட்டது.
1724 - ஸ்பெயின் மன்னன் ஐந்தாம் பிலிப் முடி துறந்தான்.
1761 - இந்தியாவில் பானிப்பட் போரின் மூன்றாம் கட்டம் ஆப்கானியர்களுக்கும் மராட்டியர்களுக்கும் இடையில் இடம்பெற்றது. ஆப்கானியர்களின் வெற்றி இந்திய வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
1784 - அமெரிக்கப் புரட்சிப் போர்: ஐக்கிய அமெரிக்கா இங்கிலாந்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.
1814 - நோர்வேயை டென்மார்க் மேற்கு பொமிரானியாவுக்காக சுவீடனுக்கு விட்டுக்கொடுத்தது.
1858 - பிரான்ஸ் மன்னன் மூன்றாம் நெப்போலியன் கொலைமுயற்சி ஒன்றிலிருந்து தப்பினான்.
1907 - ஜமெய்க்காவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
1913 - கிரேக்கம் துருக்கியரை பிசானி என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் வென்றனர்.
1943 - இரண்டாம் உலகப் போர்: பிராங்கிளின் ரூசவெல்ட், வின்ஸ்டன் சேர்ச்சில் கசபிளாங்காவில் சந்தித்து போரின் அடுத்தகட்ட நகர்வுக்கான தீர்மானங்களை எடுத்தனர்.
1950 - சோவியத் ஒன்றியத்தின் மிக்-17 போர் விமானம் வெள்ளோட்டம் விடப்பட்டது.
1969 - ஹவாயிற்கு அருகில் அமெரிக்கக் கடற்படைக் கப்பல் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 27 பேர் கொல்லப்பட்டனர்.
1974 - திருச்சி, தஞ்சை மாவட்டங்களிலிருந்து பிரித்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது.
1994 - ஐக்கிய அமெரிக்கத் தலைவர் பில் கிளிண்டன் மற்றும் ரஷ்யத் தலைவர் போரிஸ் யெல்ட்சின் கிரெம்ளினில் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டனர்.
1995 - சந்திரிகா அரசு - விடுதலைப் புலிகள் 3ம் கட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.
1996 - உலகின் முதலாவது 24 மணி முழு நேர தமிழ் வானொலி ஒலிபரப்பு, "கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்" என்னும் பெயரில் கனடாவின் டொராண்டோ நகரில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப் பட்டது.
1998 - ஆப்கானிஸ்தானின் சரக்கு விமானம் ஒன்று பாகிஸ்தானில் மலை ஒன்றில் மோதியதில் 50 பேர் கொல்லப்பட்டனர்.
2005 - சனிக் கோளின் டைட்டான் என்ற நிலாவில் ஐரோப்பாவின் இயூஜென் விண்கலம் இறங்கியது.





No comments: