RMY BATCHA

Create your own banner at mybannermaker.com!

23 June 2012

தமிழனை ஏமாளியாக்கும் புதுதிட்டம்! காஸ் லைன் பதிப்பு திட்டம்.


நதிநீர், மின்சாரம், மீனவர் பாதுகாப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் என்று எல்லாவற்றிலும் இரண்டாம்தர குடிமக்களாய் நடத்தப்படும் தமிழகத்தின் ஏமாளிதனத்தின் இன்னொரு அடையாளம் கெயில் (கெயில்) காஸ் லைன் பதிப்பு திட்டம்.

கேரளா - கொச்சியில் இருந்து கர்நாடக - பெங்கலூருவிற்கு தமிழ்நாடு வழியாக காஸ்லைன் செல்கிறது. இதனால் விவசாயிகள் பெரிய அளவில் பாதிப்படைகின்றனர். காஸ் விற்பதால் வரிப்பயன் & வேலை பெறுவது கேரளா, அதை வாங்கி பயன்படுத்துவது கர்நாடகா இருந்தும் நம் நிலங்களுக்குள் பைப்லைன் வர காரணம் அம்மாநில விவசாயி / அரசு எதிர்பா? இல்லை தமிழர் என்ற இளக்காரமா??

ஏழு மாவட்ட (!) விவசாய நிலங்களுக்குள் இந்த பைப் செல்வதால் அந்த நிலத்தில் விவசாய கட்டுப்பாடு வரும். அதாவது தண்ணீர் பாய்ச்சகூடாது; மழை பெய்தால் அதைக்கொண்டு பயிர் செய்யலாம்; உழுதல் கூடாது; மரம், வீடு, ரோடு கூடாது. அந்த பைப்லைனுக்கு பாதிப்பென்றால் அந்த விவசாயிதான் பொறுப்பு! எப்படி நியாயம்? இதற்கு அவர்கள் தரும் இழப்பீடு ஏக்கருக்கு ஆயிரம் ரூபாய்! அது மட்டும் அல்ல விவசாய நிலத்துக்குள்தான் ரோடு, ரயில், ரியல்எஸ்டேட், காஸ்லைன், தொழிற்சாலை அனைத்தும் வருமா?

ஒரு வயதான விவசாயி, நில உரிமையாளர், நிலத்தில் அத்துமீறி நுழைந்து குழி பறிப்பதும் நிலம் அளப்பதும் கண்டு கேள்வி கேட்டவரை "திஹார் ஜெயிலுக்கு போறியா?? XXX, ஓடீறு ..!". கூலிக்கு இருக்கும் ஒரு கடைநிலை ஊழியனுக்கே இவ்வளவு துணிச்சல் எனில் அந்த நிர்வாகத்துக்கு தமிழ்விவசாயி என்றால் எவ்வளவு அலட்சியம் கற்பிக்கபட்டிருக்கும்?

தமிழகம் வழியாக வரகூடாது என்ற கழுதை கோரிக்கை தேய்ந்து, ரயில் தட ஓரத்திலும், நெடுஞ்சாலை ஓரங்களிலும் கொண்டு செல்லுங்கள். விவாசயத்தை அழிக்காதீர்கள், விவசாயிகளுக்கான கட்டுபாடுகளை தளர்த்துங்கள் என்ற கட்டெறும்பு கோரிக்கை வைத்தாலும் ஏற்க மறுக்கிறார்கள். இவர்கள் சொல்லும் காரணம் தமிழகம் வழியாக வந்தால் 310 கிமீ; கேரளா, மைசூரு வழியாக வந்தால் 470 கிமீ. ஆனால் வரைபடத்தை பார்த்தால் எது குறைந்த தூரம் என்பது விளங்கும். (தமிழகம் வழியாக வந்தால் 470 கிமீ; கேரளா, மைசூரு வழியாக வந்தால் 310 கிமீ) அந்த பாதையைவிட தமிழக பாதையில் மலைகளும் வனப்பகுதியும் அதிகம்.

மலையாளிகள் அவர்களது நிலத்தில் விட மாட்டார்கள். அதனால்தான் சுற்றி தமிழ் நாடு வழியாக கொண்டு போகின்றார்கள். தமிழ் நாட்டில் மட்டும் இத் திட்டத்தால் முப்பதாயிரம் ஏக்கர்கள் விவசாய நிலம் நேரடியாக பாதிக்கப்படும். அனைவரும் இதை எதிர்த்து போராட வேண்டும். இதற்கான போராட்டம் வலுத்து வரும் நிலையில் அனைத்து தரப்பு மக்களும் ஆதரவளிக்க வேண்டும் இப்படியாய் விட்டால் உழவனின் நிலைமை இன்னும் மோசம் ஆகும். எல்லா மாவட்ட விவசாயிகளும் வேறுபாடுகள் மறந்து ஓரணியில் நிற்க வேண்டும். கோவையில் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் முதன் முதலாக எதிர்ப்பு குரல் கொடுக்கப்பட்டது ... அகவே தமிழக முதல்வர் இத்திட்டத்தால் பாதிக்கப்படும் ஏழு மாவட்டத்தின் ஆட்சியர்களை தொடர்புகொண்டு பேசியுள்ளார், மிகவிரைவில் ஓர் தீர்வினை எதிர்பார்க்கலாம் ..
இதில் கொடுமைஎன்னஎன்றாள் இந்த காஸ் லைன் போவது பெங்கலூருவுக்குதான் ... தமிழ்நாட்டில் எந்த நகரத்துக்கும் எரிவாயு சப்ளை இதுவரை அறிவிக்கபடவே இல்லை ... அப்படியே தமிழ்நாட்டுக்கு பிற்காலத்தில் சப்ளை இருந்தாலும், இந்த பைப்பை நெடுஞ்சாலைகள் ஓரத்திலோ, ரயில் தட ஓரத்திலோ பதிக்கலாம். அதற்கும் உடன்பட மறுக்கிறார்கள். (தமிழர் என்ற இளக்காரமா) அப்படி கொண்டு சென்றால் யாரும் ஏதும் சொல்லபோவதில்லை. இந்த போராட்டதிற்கு இணைய தமிழர்களும் தங்கள் ஆதரவை காட்ட வேண்டும்.

1 comment:

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

புதிய வரவுகள்:கொடூரத்தின் மறுபெயர் இஸ்ரேல்(மனதை பிழியும் புகைப்படங்களுடன்)