RMY BATCHA

Create your own banner at mybannermaker.com!

02 August 2012

காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை - 22 ம் ஆண்டுகள் நினைவு தினம்.

"நான் சாகத் தயாராக இருக்கிறேன், ஆனால் நான் கொல்வதற்கு தயாராகவிருப்பதற்கான காரணம்தான் இல்லை"(I am prepared to die, but there is no cause for which I am prepared to kill"-Mahatma Gandhi)

1990 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 ம் திகதி மட்டக்களப்பில் உள்ள காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும் ஆ பள்ளிவாசல் மற்றும் ஹுஸைய்னியா பள்ளிவாசல் ஆகியவற்றில் இரவு நேரம் இஸாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது நடத்தப்டப்ட இந்த தாக்குதலில் முதியவர்கள் சிறுவர்கள் உட்பட 103 பேர் கொல்லப்பட்டார்கள். 140 க்கும் மேற்பட்டோர் காயப்டப்டிருந்தார்கள்
இலங்கையிலுள்ள பெரும்பான்மை முஸ்லிம் மக்களிடையே இன்னமும் ஒரு கருப்பு தினமாகவே கருதப்படுகின்ற இந் நாளை காத்தான்குடி பிரதேச முஸ்லிம்கள் வருடாந்தம் சுகதாக்கள் தினமாக நினைவு கூர்ந்து அனுஷ்டித்து வருகின்றார்கள்.
ஷுஹதாக்கள் தினத்தையொட்டி காத்தான்குடியில் பல் வேறு வைபவங்கள் நடைபெறவுள்ளன.காலை 9 மணிக்கு காத்தான்குடி முதலாம் குறிச்சி ஹுஸைனிய்யா பள்ளிவாயலில் குர் ஆண் ஓதும் நிகழ்வும் அத்தோடு ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஷுஹதாக்கள் குடும்பத்திற்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.
இதையடுத்து நாளை பிற்பகல் அஸர் தொழுகையின் பின்னர் காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும் ஆ பள்ளிவாயலில் குர் ஆண் ஓதும் நிகழ்வும் அத்தோடு துஆ பிராத்தனை மற்றும் விஷேட உரையும் இப்தார் நிகழ்வும் நடைபெறவுள்ளது.

No comments: