RMY BATCHA

Create your own banner at mybannermaker.com!

Showing posts with label முல்லை பெரியார்.. Show all posts
Showing posts with label முல்லை பெரியார்.. Show all posts

02 June 2012

பெரியாறு அணையின் துளைகளை அடைக்கும் பணி நடந்து வருகிறது.

தேனி: பெரியாறு அணையில், சுப்ரீம் கோர்ட் உயர்மட்டக் குழு ஏற்படுத்திய துளைகளை அடைக்க, தமிழக அரசு பயன்படுத்தும் தொழில் நுட்பம், கேரள அதிகாரிகளை வியப்படையச் செய்துள்ளது மற்றும் அங்கே இருக்கும் அரசியல் வாதிகளை வயிற்றெரிச்சலும் அடைய செய்து உள்ளது.பெரியாறு அணையில் ஆய்வு செய்த சுப்ரீம் கோர்ட் உயர்மட்டக் குழு, 9 இடங்களில் துளைகளை போட்டது. ஒவ்வொன்றும், 140 முதல் 180 அடி ஆழத்தில் போடப்பட்டன. துளைகளை அடைக்க, முதலில் அனுமதி மறுத்த கேரளா, தமிழக முதல்வர் பிரதமருக்கு எழுதிய கடிதத்திற்கு அதில் இருந்த எச்சரிக்கைக்குகம் பின் ரொம்ப மரியாதையுடன் துளைகளை அடைக்க தமிழக அரசுக்கு அனுமதி அளித்தது. தற்போது, திரு. சம்பத்குமார் தலைமையிலான அர்ப்பணிப்பு உணர்வு மிக்க பொதுப்பணித் துறை அதிகாரிகளை கொண்ட குழுவினர் மேற்பார்வையில், துளைகளை அடைக்கும் பணி நடந்து வருகிறது. பணி முடிவடைய, இன்னும் 15 நாட்களுக்கு மேல் ஆகும். ஒவ்வொரு துளையும், ஒரு நாளைக்கு 10 அடி ஆழம் வரை அடைக்கப்படுகிறது. உயர் தொழில் நுட்பத்தில், சிமென்ட், கான்கிரீட் கலக்கப்பட்டு, கலவையை கம்ப்ரஷரில், அதிக வேகத்தில் துளைக்குள் செலுத்தி அடைக்கின்றனர்.இவ்வாறு, உயர் தொழில் நுட்பத்தில் துளைகள் அடைக்கப்படும் போது, அடிப்பகுதியில் உள்ள துளைகள் மட்டுமின்றி, பக்கவாட்டிலும் உள்ள சிறு துளைகளும், அடைபட்டு விடுகின்றன. இத்தொழில் நுட்பத்தில் துளைகள் அடைக்கப்படும் போது, அணை முன்பை விட வலுவாகிவிடும். இதை கண்காணித்து வரும் கேரள அதிகாரிகள், தமிழக தொழில் நுட்ப மேம்பாடு குறித்து, வியப்பு தெரிவித்துள்ளனர். எதிர்காலத்தில், இது குறித்து எந்த புகாரும் சொல்ல முடியாது. தற்போது பயன்படுத்தப்படும் தொழில் நுட்பத்தை, யாரும் குறை சொல்லவே முடியாது என, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பெரியாறு அணையில் தமிழக வழக்கறிஞர்கள்: வழக்கு விசாரணைக்காக முல்லைப்பெரியாறு அணையை, தமிழக வழக்கறிஞர்கள் குழு பார்வையிட்டது.சுப்ரீம் கோர்ட் பரிந்துரையின் பேரில் முல்லைப்பெரியாறு அணையில், ஐவர் குழு ஆய்வுப்பணிகள் நடந்து முடிந்துள்ளன. இதற்கான அறிக்கைகளை இக்குழு ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்து விட்டது. அறிக்கை நகல்கள் இரு மாநில அரசுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு விட்டன. தற்போது சுப்ரீம் கோர்டில், இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. சில தினங்களில் விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாக உள்ளது. இந்நிலையில், விசாரணைக்கு தேவையான தகவல்களை சேகரிக்க சென்னை ஐகோர்ட் வக்கீல்கள் நவநீத கிருஷ்ணன், உமாபதி ஆகியோர் கொண்ட குழு நேற்று முல்லைப்பெரியாறு அணைக்கு சென்றது. மெயின் அணை, பேபி அணை, ஆய்வுக்காக தோண்டப்பட்ட துளைகளை அடைக்கும் பணிகளை பார்வையிட்டனர். மேலும், தற்போது வரை உள்ள நிலவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்ரமணியன், மதுரை தலைமை பொறியாளர் சம்பத்குமார், பெரியாறு அணை உதவி செயற்பொறியாளர் கல்யாணசுந்தரம், உதவி பொறியாளர் ராஜகோபால், தொழில்நுட்ப உதவியாளர் பாலமுருகன் உடன் இருந்தனர்..

29 January 2012

முல்லைப்பெரியாறு - துரோகங்களின் தொடர்ச்சி:சில வரலாற்றுக் குறிப்புக்கள்



Picture of Madras Presidency
thanks to Edgar Thurston from Wikimedia Commons and Ookaboo!

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகம் திடீர் என தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டதை போல இன்று நடந்து கொள்கிறது. ஆனால்மலையாளிகளும், மலையாள அரசில்யல்வாதிகளும் கடந்த 30 ஆண்டுகளுக்குமேலாக மிகப்பெரிய துரோக வரலாற்றை படிப்படியாக செய்து வந்திருக்கிறார்கள் என்பதே உண்மை.
முல்லைப்பெரியாறு பிரச்சனையில் முதல்பெரும் வரலாற்று தவறு அணை கட்டி முடிக்கப்பட்டு அணை திறக்கப்பட்ட போதே தொடங்குகிறது.
1895 அக்டோபர் 10 ம் தேதி அணை திறக்கப்பட்டது. தமிழகத்தில் மலை மறைவு பகுதிகளாக இருந்த இன்றைய தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நம்பிக்கையின் கீற்று விதைக்கப்பட்டது. அந்த நேரத்தில் திருவனந்தபுரத்தை தலைமையிடமாக கொண்ட திருவாங்கூர் அரசின் எல்லை பெரியாறு அணை கட்டிய இடத்திலிருந்து 62 கி. மீ தொலைவில் உள்ள அடூர் கிராமத்தில் முடிகிறது. சமஸ்தானத்தின் எல்லைக்குள் இந்த அணை இருப்பதாகக் கற்பனை செய்து இந்த ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டது. அணைவிரகாரத்தில் நடந்த முதல் வரலாற்று தவறு இது.

இந்திய சுகந்திரத்திற்கு பிறகு 1956 ல் மொழிவாரிய மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. தமிழக, கேரள எல்லைப்பிரச்சனை உருவானது. பீர்மேடு, தேவிகுளம் தாலுகாக்களில் 90 சதம் தமிழர்கள் வசித்தனர். பெரியாறு அணை இந்த இரு தாலுகாக்களில்தான் இருக்கிறது. எந்த மொழி பேசும் மக்கள் ஒரு பகுதியில் அதிகம் வசிக்கிறார்களோ அந்த பகுதியியை சம்பந்தப்பட்ட மாநிலத்துடன் சேர்ப்பதுதான் விதி. ஆனால் அப்போழுதே பெரியாறு அணையைக் கருத்தில் கொண்டு இந்த இரு தாலுகாக்களையும் விட்டுத்தர மறுத்தது கேரளம். பீர்மேடு, தேவிகுளம் இல்லாத கேரளம் தலையில்லாத முண்டம் போலாகிவிடும் என இந்தியாவின் அன்றைய பிரதமர் நேரு கேரளாவுக்கு வக்காலத்து வாங்கினார். அதற்கு வாய்மூடிப் பணிந்து போனார் காமராஜர்.
அடுத்து 1976 ஆம் ஆண்டு கேரள அரசு இடுக்கி அணையை கட்டியது. அதன் உயரம் 555 அடி, அதன் நீர்த்தேக்கப் பரப்பு 16,000 ஏக்கர், பெரியாறு அணையைப்போல 7 மடங்கு பெரியது. இந்த அணை கட்டப்பட்டதிலிருந்து இது வரை முழுமையாக நீர் நிரப்பப்பப் படவேயில்லை. அதிலிருந்து 8000 மேகாவாட் மின்சாரம் தயாரிக்க வேண்டிய அவர்களின் எந்திரங்கள் தூசுபடிந்தன. அதனால் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைத்து அந்த நீரை அப்படியே இடுக்கிக்கு எடுத்து வந்தால் அணை ஒரளவு நிறையும் மின்சார உற்பத்தியை தொடங்கலாம் என்பது கேரள அரசின் அன்றைய திட்டம்.
அந்த வேளையில் கேரளத்தின் முக்கிய ஊடகமான மலையாள மனோரமா இரண்டு மாதங்களில் அணை உடையப்போவதாக செய்து வெளியிட்டது. பீர்மேடு எம்.எல்.ஏ. அணை பலவீனமாகிவிட்டதாக தனது பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது எம்.கே. பரமேஸ்வரன் நாயர் வெளிப்படையாகவே கூறினார், நம் சகோதரர் எம்.ஜி. ஆரிடம் சொன்னால் உடன் அணையின் நீர்மட்டத்தை குறைத்துவிடுவார் என்று.
இந்த திட்டத்தின் படி 25.11.1979 ல் தமிழக, கேரள அதிகாரிகள் அமைச்சர்கள் அளவில் திருவனந்தபுரத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சு வார்த்தையில் தமிழகம் சார்பில் கலந்து கொண்டவர்களில் முதல்வர் எம்.ஜி. ஆரிலிருந்து, அன்றைய மதுரை மாவட்ட கலெக்டர் மக்கரா வரை அணைவரும் மலையாளிகள், பேச்சுவாத்தை மலையாளத்திலேயே நடைபெற்றதாம். இந்தக் குழுவில் இடம்பெற்ற ஒரு தமிழர் பொதுபணித்துறை அமைச்சர் ராஜாமுகமது மட்டுமே, அவர் தமிழர்களுக்கு எதிரான அணை நீர்மட்டத்தை குறைப்பதை கண்டித்து பேச்சுவார்த்தையிலிருந்து வெளிநடப்பு செய்தார். ஆனாலும் எம்.ஜி. ஆர் தலைமையிலான மலையாளிகள் குழு அணை நீர்மட்டத்தை 136 அடியாக குறைப்பது, அணையை பலப்படுத்தியதும் மீண்டும் பழைய நிலைக்கே உயர்த்தலாம் என ஒப்பந்தம் செய்து கொண்டது. அணை பலமுறை பலப்படுத்தபட்டும் இது வரை நீர்மட்ட உயரம், அன்று குறைக்கப்பட்ட 136 அடியில் தான் உள்ளது.

1954 ல் ராஜபாளையத்தில் தமிழக வனத்தறை, செண்பகவல்லி அணையைக் கட்டியது. இடுக்கி அணைக்குத் தண்ணீர் இல்லை என்பதால் கேரள வனத்தறையினர் 1981 ல் தமிழகத்திற்குள் நுழைந்து செண்பகவல்லி அணையைத் தகர்த்து எறிந்தனர். உடைத்தவர்களிடமே தமிழக அரசு ரூ .5 லட்சத்தை வழங்கிக் கட்டித்தரும்படி மன்றாடியது. இன்று வரை அணை கட்டப்படவில்லை.

இவை போக இதுவரை கேரள ஊடகங்களும், அரசியில்வாதிகளும் அவிழ்த்துவிட்ட பொய்கள் ஏராளம் ....

1980 களில் அணையில் யாணைஅளவுக்கு ஒட்டை இருக்கிறது என்றார்கள்.

அணையின் நீர்த்தேக்கத்தை உயர்த்தினால் யாணை, புலிகள், மான்கள் நீர்குடிக்க இயலாது என்றார்கள்.

அணை உடைந்தால் கேரளவில் 5 மாவட்டங்கள் இல்லாமல் போகும் எனும் அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில், கேரளாவின் வரைபடத்தில் 5 மாவட்டங்களை நீக்கி இணையத்தில் வரைபடத்தை வெளியிட்டார்கள்.

8 ஆண்டுகள் நடந்த கடும் நீதிமன்ற வழக்கிகளுக்குப் பின் 27.2.2006 ல் இந்திய உச்சநீதமன்றம் ஒரு வரலாற்றுத் தீர்ப்பினை வழங்கியது. பெரியாறுஅணை முழுபலத்துடன் இருப்பதால் மீண்டும் 142 அடி வரை தமிழகம் அதில் தண்ணீரைத் தேக்கலாம் என்பதே அந்த தீர்பின் சாரம். அந்த தீர்ப்பு வெளிவந்த 10 நாட்களில் கேரள அரசு உடனே கேரளத்தில் உள்ள மிக ஆபத்தான அணைகள் தொடர்பாக ஒரு சட்டத்தை நிறைவேற்றியது.

தீர்ப்பு வெளியாகி கடந்த ஆறு ஆண்டுகளாகியும் தீர்ப்பை நிறைவேற்ற வைக்கும் எந்த முயற்சியையும் தமிழக அரசும், அதன் ஆட்சியாளர்களும் செய்யவில்லை என்பது மிக பெரிய கூத்து. குறைந்தபட்சம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கூட போடவில்லை. மேலும் 2009 ல் தமிக அரசு ஏன் மீண்டும் கேரளா போட்ட வழக்கிற்கு ஒப்புதல் அளித்தது என்பது போன்ற கேள்விகள், தமிழர்களை மலையாளிகள் மட்டுமல்ல தமிழர்களும் ஏமாற்றுகிறார்களோ என நினைக்க தோன்றுகிறது.

இன்றைக்கு கேரளத்தின் உணவுத்தேவையின் பெரும் பகுதியை பூர்த்தி செய்பவர்கள் தமிழர்களே. உணவு மட்டுமல்ல அவர்கள் பயன்படுத்தும் மலையாள மொழியின் எழுத்தும், தமிழின் மூத்த எழுத்துவடிவமான வட்டெழுத்தாகும், அவர்கள் பேசுகிற மொழி கொடுந்தமிழ் என்று சொல்லப்படுகிற தமிழின் பழைமையான பேச்சு வடிவம், இன்றைய கேரளமே பண்டைய தமிழகத்தின் சேரநாடு, இப்படி எல்லாவிதத்திலும் தமிழகத்திலிருந்து எடுத்துக்கொண்ட மலையாளிகள், அடுத்தவனைக்கெடுத்த தான் வாழ நினைக்காத தமிழரின் பரந்த மனப்பாண்மையையும் எடுத்துக்கொள்ளவில்லையே.
"இப்புவியில் நான் வந்து செல்வது ஒருமுவை தான். எனவே நான் இங்கே ஒரு நற்செயல் புரிந்திடவேண்டும். இதை தள்ளிவைப்பதோ, தவிர்பதற்கோ இடம் இல்லை, ஏனெனில் மீண்டும் ஒருமுறை நான் இப்புவியில் வரப்போவது இல்லை .." முல்லைபெரியாறு அணை கட்டும் போது ஏற்பட்ட துன்ப, துயரங்களின் போது, அந்த அணையைக் கட்டிய பென்னிகுயிக்கின் டைரிக்குறிப்பில் எழுதப்பட்ட வாசகங்கள் இவை. இதனை மலையாளிகளுக்கு யாரேனும் மொழிபெயர்த்துச் சொன்னால், புரிந்து கொள்வார்களா ..?





26 December 2011

தமிழா நீயா இப்படி?


தமிழா நீயா இப்படி?
எழுந்திரு தமிழா எழுந்திரு.
தமிழன் தோற்றால் தமிழனே சிரிப்பான்
மற்றவன் தோற்றால் மனமெல்லாம் பதைப்பான்
அந்நியன் வெற்றிக்கு ஆளாய் பறப்பான்
தன்னவன் எழுந்தால் தலை மேல் அடிப்பான்
தமிழர்களே உங்கள் கடைகளை அடைத்து, உங்கள் எதிர்ப்பை தெரிவித்து, உங்கள் வருமானம் பாதிப்பதால் கேரளா மலையாளிக்கு என்ன நட்டம் .
நீங்கள் உண்ணா நிலை, சாலை மறியல், தொடர் வண்டி மறியல், என்று உங்களை நீங்களே வருத்தி கொள்வதால் அவனுக்கு என்ன நட்டம்.
இதுவரை கடையைப்பு என்று நடத்தியதில் இதுவரை 2000 கோடிக்கு மேல் தமிழர்களுக்கு தமிழக அரசுக்கு நட்டம் ஏற்படுதிருக்கிறோம் .
போராட்ட வடிவத்தை மாற்றுங்கள் நட்டத்தை இங்குள்ள மலையாளிகளுக்கு ஏற்படுத்துங்கள்.நீங்கள் கடையை திறந்து வணிகம் செய்யுங்கள்.அவன் கடையை அடைக்கட்டும். 
தமிழர்களே மாபெரும் சதி வேலை உங்களை சுற்றி நடக்கிறது. 
மக்கள் புரட்சியே முல்லை பெரியாரின் மீட்சி. 
கேரளாவில் காய்கறி விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதாக இங்குள்ள ஊடகங்கள் பொய் செய்தியை பரப்பி வருகின்றன .
கேரளாவில் தக்காளி முதற்கொண்டு அனைத்தின் விலையும் 20 ற்குள் அடக்கம் .
மூணாறு போன்ற தமிழர் வாழும் பகுதிகளில் மட்டுமே சிறிது விலை உயர்ந்துள்ளது .
தமிழர்கள் பொருட்களை, கேரளாவிற்கு அனுப்ப வேண்டாம் என்றே அங்குள்ளவர்கள் கூறுகிறது.ஆனால் மாற்று ஏற்பாடுகளை அவர்கள் செய்து விட்டார்கள்.
இங்குள்ள அரசியல் தலைவர்கள், ஊடகங்கள், இதை மறைத்து கேரளா மீது பொருளாதார தடை என்ற பாதையை நோக்கி மக்களை திசை திருப்பிகிறது .
இயல்பாக மலையாள மக்கள் மீது தமிழர்களுக்கு வர வேண்டிய சினத்தை திசை திருப்பி தமிழர்கள் தாக்குதல் தொடுக்காமல் இருக்க அங்கு விலைகள் கடுமையாக உயர்ந்து விட்டது.நம் உதவி இல்லாமல் அவர்களால் வாழ முடியாது என்று கூறி நம் போராட்டதை மழுங்கடிக்க மாபெரும் சதி வேலை நடக்கிறது .
இடுக்கி மாவட்டத்தை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்று கேரளா மாவட்ட ஆட்சியரிடம் அங்குள்ள தமிழர்கள் மனு கொடுத்தனர் .அது அனைவருக்கும் தெரிந்த செய்தி.
அந்த மாவட்ட ஆட்சியர் தமிழர்.
அவர் மனு வாங்கியதற்காக அவர் பணி இட மாற்றம் செய்யப்பட்டார்.
அப்போது அவர் கூறியது என்னை தமிழன் என்பதற்காக பணி மாறுதல் செய்கிறார்கள்.அவர்கள் இருப்பது ஐந்து ஆண்டு காலம் மட்டுமே.நான்50 வயது ஆகும் வரை இருப்பேன் ங்கு சென்றாலும் நியாத்தின் பக்கம்மே இருப்பேன் என்றார்.

எம் ஜி ஆர் அவர்கள் தமிழ் இனத்தின் நண்பனா?

கலைஞர்கருணாநிதி அவர்கள் இவரை மலையாளி என்று அவ்வப்போது குறிப்பிட்டதால் எம் ஜி ஆர் நாமெல்லாம் திராவிடர்கள் எனவே அதி மு க தொண்டர்கள் அழகான படித்த திராவிட பெண்களை திருமணம் செய்ய வேண்டும் என்று பொது குழுவில் தீர்மானம் போட்டார் 
அவர் மறை முகமாக சொன்னதை புரிந்து கொண்ட தமிழர்கள், தொண்டர்கள் மலையாள பெண்களை ஏராளமானவரை திருமணம் செய்த்தனர்.
தமிழக அரசு துறைகளில் மலையாள மக்களை கொண்டு வந்தவர் எம் ஜி ஆர்.அப்பொழுது அரசு துறையில் கொண்டு வந்த ஆயிரக்கணக்கான மலையாளிகள் இன்று வரை ஒய்வு பெறவில்லை அவர்கள் பெற்ற பிள்ளைகள் இன்று அரசு துறை ஊழியாராக உள்ளனர்.
இங்குள்ள தேநீர் கடைகள் மற்றும் தொழில் துறைகளில் அவர் காலத்தில் மலையாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழர் நாட்டில் லட்சக்கணக்கில் குடியேறினர் . 
136
அடி நீரை தேக்கினால் போதும் என்று ஒப்பந்தம் போட்டவர் யார்? எம் ஜி ஆர் தானே! அது தானே இன்று வரை கேரளா அரசு சொல்லுகிறது. 
நல்ல வேலை எம் ஜி ஆர் இன்று உயிரோடு இல்லை இருந்திருந்தால் இங்குள்ள தமிழர்கள் முல்லை பெரியாரையும் விட்டு கொடுதிருப்ப்பர்.
கேரளாவிற்கு செல்லும் 13 வழித்தடங்களை அடைக்கும் போராட்டத்தில் ஒரு தடமாக, பொள்ளாச்சி அருகே உள்ள வளத்தியா மரம் என்னும் இடத்தில் ஐயா தியாகு தலைமையில் முற்றுகை போராட்டம் நடை பெற்றது. இதில் 1000 க்கும் மேற்பட்டோர் கைதாகி மாலை விடுவிக்கப் பட்டனர் .
சென்னையில் இருந்து தமிழர் முன்னேற்ற கழகம் அதியமான் தலைமை ஏற்க, நாங்கள் தமிழர்கள் விழிப்புணர்வு இயக்கத் தோழர்களும் கலந்து கொண்டனர். 

இது வரை எந்த விதமான அரசியல் போராட்டங்களாக இருந்தாலும் அந்த அரசியில் கட்சியை சார்ந்த தலைவர்கள் தலைமையில் மட்டுமே நடை பெரும் .
வை கோ நடத்திய இந்த போராட்டம் மக்கள் சார்ந்த போராட்டமாக அமைந்தது .ஒவ்வொரு வழி தடங்களிலும் பல்வேறு அரசியைக் கட்சி தலைவர்கள், மற்றும் இயக்கங்களை சேர்ந்த தலைவர்கள் தலைமை தாங்கினார்.
ம தி மு க மாவட்ட பொறுப்பாளர்களும் உட்பட ஏராளமான தொண்டர்களும் மாற்று தமையின் கீழ் போராடியது அரசியலில் நல்ல மாற்றம்.
முல்லை பெரியாறு அணையை காப்பாற்றுவது மட்டுமே இலக்கு என்ற அடிப்படையில் வை கோ அவர்களின் இந்த கூட்டு போராட்டமும், மாபெரும் மக்கள் சக்தியும் இணையும் பொழுது, வெற்றி தமிழர்களுக்குத்தான் என்பதில் மாற்று கருத்தில்லை
நமக்கு திராவிடண் என்றவார்த்தைவேண்டாம்.
தமிழன்அழித்தது எல்லாம் தோல்வியால் அல்ல,துரோகதால்தான்

14 December 2011

இந்த கொடுமையை கேட்க ஆளில்லையா.


நாம்ம ஊரில் நம்ம ஆள்கடைவச்சால் யாரும்போக மாட்டான். ஆனால்
வெலியாலுவச்சா அங்கதான்போவாங்க.ஏனா திராவிடண் என்றவார்த்தை நம்ம மனசுல ஆழமாகபதுஜிடுசி,
சிந்திக்கவேண்டிய தருணம் இது
இனி நாம் தமிழனாக இருப்போம்,
நமக்கு திராவிடண் என்றவார்த்தை வேண்டாம்,
தமிழன்அழித்தது எல்லாம் தோல்வியால் அல்ல,துரோகதால்தான்
நாம் அவர்களுக்கு இனாமாக கொடுத்தஇடத்தில் நாம்இனம் வாழமுடியவில்லை.
கட்சதீவுவை  இனாமாக கொடுத்தோம்.அங்கு போகமுடியவில்லை.
இந்த கொடுமையை கேட்க ஆளில்லையா.
இடுக்கி : முல்லை பெரியாறு பிரச்னை காரணமாக தமிழக கேரள எல்லையில் பிரச்னை அதிகரித்து வரும் நிலையில் இடுக்கி மாவட்டத்தில் வசித்து வந்த 40 தமிழர்களின் குடும்பங்கள் கேரள மாநிலத்தவரால் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். 

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை தற்போதைய 136 அடியிலிருந்து 120 அடியாக குறைக்க வேண்டும் என்ற கேரள அரசின் மனு உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதையடுத்து தமிழர்கள் மீதான வன்முறை கேரளாவில் அதிகரித்துள்ளது. 

இச்சூழலில் இடுக்கி மாவட்டத்தில் காரித்தோடு, நெடுங்கண்டம் ஆகிய பகுதிகளில் வசித்த 40 தமிழ் குடும்பத்தினர் துரத்தியடிக்கப்பட்டனர். இதனால் பயந்துபோன அவர்கள், உயிருக்கு பாதுகாப்பு தேடி தமிழக எல்லைக்கு வந்து சேர்ந்தனர். இதில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 15 பேர் போடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தனர். மற்றவர்கள் போடி அருகே கோணாம்பட்டி கிராமத்தில் உள்ள தங்கள் உறவினர்கள் சிலர் வீட்டில் தஞ்சம் புகுந்தனர்
நன்றி-இந்நேரம்...

08 December 2011

வடிகட்டிய அயோக்கியத்தனம்.

                                                                            படம் -Thamizha Namathu Anai Kaapom (முல்லைபெரியார் )  
படம் - Google
முல்லைப் பெரியாறு -தமிழ் நாடு ஏமாந்து கொண்டிருக்கிறது

முல்லைப் பெரியாறு பற்றி அகில இந்திய அளவில்
புயலைக் கிளப்பிவிட்டு – தமிழ் நாட்டை 
பைத்தியக்காரர்கள் வசிக்கும் இடம் என்று பேச 
வைப்பதில் வெற்றி பெற்று விட்டனர் கேரளத்தவர்.

மீடியாக்களில்,டெல்லியில், அகில இந்திய அளவில்
கேட்கிறார்கள் -பலமாகக் கேட்கிறார்கள் !

“116 வருட சுண்ணாம்பு அணை – இன்னும்
எவ்வளவு நாள் தாங்கும் ?

தங்கள் இடத்திலேயே -
தங்கள் செலவிலேயே -
புதிய அணையைக் கட்டி,
தமிழ் நாட்டிற்கு அதே அளவு தண்ணீரைத் தருவதாக
கேரளா சொல்கிறதே – ஒப்பந்தம் எழுதிக் 
கொடுக்கிறோம் என்கிறார்களே.
இதை ஏற்றுக் கொள்ள தமிழ் நாடு ஏன் மறுக்கிறது ?
இது என்ன வீண் பிடிவாதம் ?
இது என்ன பைத்தியக்காரத்தனம் ?”



இங்கு தான் தமிழ்நாடு ஏமாந்து கொண்டிருக்கிறது.
கேரளா இதுவரை செய்த அநியாயங்கள்,
புதிய அணை கட்டி இனி செய்ய
உத்தேசித்திருக்கும் அயோக்கியத்தனங்கள் -

இவை எதுவுமே வெளி உலகுக்குத் தெரியவில்லை.
ஏன் தமிழ் நாட்டிலேயே – சென்னையிலேயே கூட,
படித்தவர்கள் பலருக்கு கூட தெரியவில்லை !

புதிய அணை கட்டுவதில் என்ன தவறு ? -அதான்
அதே அளவு தண்ணீர் தருகிறேன் என்கிறார்களே 
என்று தமிழர்களே கேட்கிறார்கள்.
தமிழ் நாளிதழ்களும், அரசியல் கட்சிகளும்
தொலைக்காட்சிகளும் கூட தமிழ் மக்களை
தயார் படுத்துவதில் தவறி விட்டன என்று தான்
சொல்ல வேண்டும்.
இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும்.

புதிய அணை கட்டுவதாகச் சொல்வதில் இருக்கும்
சதி பற்றி விவரமாக அகில இந்திய அளவில்
எடுத்துச் சொல்ல வேண்டும்.

இந்த வலைத்தளத்தைப் படிப்பவர்களுக்காக -
நான் எனக்குத் தெரிந்ததை சுருக்கமாக 
கீழே தருகிறேன்.

முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது
பிரிட்டிஷ் ஆண்ட காலத்தில் - 1895ல்.
அப்போது இந்த அணை கட்டும் இடம் திருவாங்கூர்
சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததாக
கருதப்பட்டது (உண்மை அது அல்ல.தமிழ் நாட்டின்
வரையரைக்குள் தான் இருந்தது)
எனவே பிரிட்டிஷார்- திருவாங்கூர் மஹாராஜாவுடன்
இந்த அணை கட்டப்படும், மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு 
பகுதியான சுமார் 8000 ஏக்கர் நிலத்தை 
999 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து (ஆண்டுக்கு
ரூபாய் 40,000/- குத்தகைப் பணம் ) இந்த 
அணையை 1887ல் கட்ட ஆரம்பித்து 1895ல் 
கட்டி முடித்தனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இதில்
அடிப்படையான பெரியாறு உற்பத்தியாவது 
தமிழ் நாட்டில் தான். அணையும் தமிழ் நாட்டிற்கு
சொந்தமானது. அதை நிர்வகிப்பதும் தமிழ் நாடு தான்.
ஆனால் இடம் மட்டும் கேரளாவிற்கு சொந்தம்.
அதிகாரம் செலுத்துவதும் அவர்களே !

இந்த அணையின் உயரம்-கொள்ளளவு -152 அடி.
இதன் மூலம் பாசனம் பெறும் நிலம் – 
சுமார் 2,08,000 ஏக்கர்.
மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய
4 மாவட்டங்களைச் சேர்ந்த 10 லட்சம் விவசாயிகள்
பாசனத்திற்கும், 60 லட்சம் மக்கள் குடிநீருக்கும்
இந்த அணையை நம்பி இருக்கிறார்கள்.
இந்த அணை பறிக்கப்பட்டால் – இத்தனை இடங்களும்
பாலைவனங்கள் ஆகும். இத்தனை ஜனங்களும்
பிழைப்பு பறிபோய் – பிச்சைக்காரர்கள் ஆவார்கள்.

பிரச்சினை ஆரம்பித்தது எப்படி ? எப்போது ?

கேரளா, இதற்கு சுமார் 50 கிலோமீட்டர் கீழே,
இடுக்கியில் 1976ல் ஒரு அணையும் நீர் 
மின்நிலையமும் கட்டியது. பின்னர் தான்
ஆரம்பித்தன அத்தனை தொல்லைகளும்.

பெரியாறு அணையின் மொத்த கொள்ளளவே
15.66 டிஎம்சி தான்.அதிலும் சுமார் 10 டிஎம்சியை
தான் பயன்படுத்த முடியும். 
(104 அடி வரை டெட் ஸ்டோரேஜ் .)

ஆனால் இடுக்கி இதைப் போல் 7 மடங்கு பெரியது. 
கொள்ளளவு 70 டிஎம்சி.
பெரிய அணையைக் கட்டி விட்டார்களே தவிர அது
நிரம்பும் வழியாகக் காணோம். 3 வருடங்கள் 
பொறுத்துப் பார்த்தார்கள். பெரியாறு வருடாவருடம்
நிரம்பிக் கொண்டு இருந்தது. ஆனால் இடுக்கி 
நிரம்பவே இல்லை. 

அப்போது போடப்பட்ட சதித்திட்டம் தான் -
பெரியாறு அணைக்கு ஆபத்து என்கிற 
குரல் -கூக்குரல்.
சுண்ணாம்பு அணை உடைந்து விடும்.
அதிலிருந்து வெளிவரும் நீரால் 35 லட்சம் 
மக்கள் செத்துப் போவார்கள். எனவே
உடனடியாக புதிய அணை கட்டுவதே தீர்வு !

புதிய அணையினால் அவர்களுக்கு என்ன லாபம் ?
மேலே இருக்கும் பழைய அணையை இடிப்பதால், 
நீர்பிடிப்பு பகுதியிலிருந்து அத்தனை நீரும் நேராக 
இடுக்கிக்கு வந்து அதை நிரப்பும்.

சரி நிரம்பட்டுமே. நல்லது தானே !
அதான் தமிழ்நாட்டுக்கு இதே அளவு
தண்ணீர் தருகிறேன் என்று சொல்கிறார்களே
என்று உடனே மக்கள் கேட்கிறார்க்ள்.

அங்கே தான் இருக்கிறது அவர்கள் சாமர்த்தியம்.
பெரியாறு அணை இருப்பது கடல் மட்டத்திலிருந்து 
2709 முதல் 2861 அடி உயரம் வரை. இதிலிருந்து
மலையைக் குடைந்து குகைப்பாதை வழியாக 
தண்ணீர் தமிழ் நாட்டை நோக்கி கொண்டு வரப்படுகிறது.

புதிய அணையை கட்டப்போவது 1853 அடி 
உயரத்தில்.இந்த அணை கட்டப்படும் உயரத்திலிருந்து
தமிழ் நாட்டிற்கு தண்ணீரைத் திருப்பி விட முடியாது.
நமக்கு பெரியாறு அணையிலிருந்து நீர் எடுத்து வரும்
பாதை இதை விட உயரத்தில் ஆரம்பித்து, ஒரு கிலோ
மீட்டர் பயணத்திற்கு பிறகு 5704 அடி நீளமுள்ள -
மலையைக் குடைந்த குகை வழியாக திசை மாறி
வந்து பின்னர் கீழே வைகையில் கலக்கிறது.
அணையைக் கட்டிய பிறகு,
இவர்கள் உண்மையாகவே விரும்பினாலும் நீரைத் 
திருப்ப முடியாது. மேலும் புதிய அணையிலிருந்து
ஆண்டு முழுவதும் நீர்மின்சாரம் உற்பத்தி செய்ய 
நீரை வெளியேற்றிக் கொண்டே இருக்கப் போகிறார்கள்.
எனவே அணை எப்போதுமே முழுவதுமாக நிரம்பி
இருக்காது.தமிழ் நாட்டிற்கு தண்ணீர் நிச்சயமாக
கிடைக்காது.

புதிய அணையினால் தமிழ் நாட்டிற்கு பயன் இல்லை -
புரிகிறது.

ஆனால் பழைய அணை சுண்ணாம்பு அணை -
எப்போது வேண்டுமானாலும் உடைந்து விடும்.
35 லட்சம் மக்கள் செத்து விடுவார்கள் என்கிறார்களே -
பயம் உண்மையானது போல் தோன்றுகிறதே ?

அயோக்கியத்தனம்.
வடிகட்டிய அயோக்கியத்தனம்.

முதலாவதாக -
பெரியாறு அணை உடைந்தால் தண்ணீர் -
மலைப் பள்ளத்தாக்குகள் வழியாகப் பாய்ந்து -
நேராக கீழே உள்ள இடுக்கி அணையைத் தான் 
வந்தடையும்.
பெரியாறு அணையிலிருந்து அதன் முழு நீரும்
(10 டிஎம்சி) ஒரே நேரத்தில் வெளியேறினாலும்,
நேராக அதைப்போல் 7 மடங்கு கொள்ளளவு
உடைய இடுக்கி அணையைத் தான் வந்தடைய
போகிறது. இடையில் எந்த நாடு, நகரமும் இல்லை.
வாதத்திற்காக இடுக்கி அணை ஏற்கெனவே நிரம்பி
இருந்தாலும் – வெளியேறும் நீர் பெரியாறு 
அணையிலிருந்து இடுக்கி வந்து சேர 4 மணி நேரம்
ஆகும். அதற்குள்ளாக இடுக்கியிலிருந்து 
தேவையான நீரை வெளியேற்றி விட முடியும் !
எனவே வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள்
என்கிற பேச்சே அபத்தமானது.

இரண்டாவதாக -

1976ல் இடுக்கி அணையை கட்டினார்கள்.
1979ல் பெரியாறு அணை உடையப்போகிறது
என்று குரல் எழுப்பினார்கள்.
பயத்தைக் கிளப்பினார்கள்.
சுப்ரீம் கோர்ட் வரை போனார்கள்.
2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் நிபுணர் குழுவை
அமைத்தது. நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி
அணை அனைத்து விதங்களிலும் பலப்படுத்தப்பட்டது.

கேரளா சொல்வது போல்
இது வெறும் சுண்ணாம்பு அணை அல்ல.
ஏற்கெனவேயே முதல் தடவையாக 1933ல்
40 டன் சிமெண்ட் கலவை சுவரில் துளையிட்டு உள்ளே
செலுத்தப்பட்டது. மீண்டும் 1960ல் 500 டன் சிமெண்ட்
உள் செலுத்தப்பட்டது.

2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் சென்ற பிறகு -
நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி -
லேடஸ்ட் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி,
கேபிள் ஆன்கரிங் முறையில் அணையுள் கான்க்ரீட்
கலவை செலுத்தப்பட்டது. வெளிப்புறமாக -
ஒரு கவசம் போல், கிட்டத்தட்ட புது அணையே போல்,
கான்க்ரீட் போடப்பட்டு, ஒரு புத்தம்புதிய கான்க்ரீட்
அணையே உருவாக்கப்பட்டு விட்டது.

இதன் பிறகு தான், 27/02/2006 அன்று,
சுப்ரீம் கோர்ட், இனி அணைக்கு எந்த ஆபத்தும் இல்லை
என்பதை நிபுணர் குழுவின் மூலம் உறுதி செய்துகொண்டு -
156 அடிவரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் 
என்று அனுமதியே கொடுத்தது.

விட்டார்களா நமது கேரள சகோதரர்கள் ?
மீண்டும் சதி. ஒரு மாதத்திற்குள்ளாக,
கேரள சட்டமன்றத்தில் புதிய சட்டம்
இயற்றி, சுப்ரீம் கோர்ட் உத்திரவையே செல்லாததாக்கி
விட்டார்கள்.

வழக்கம் போல் தமிழன் இளிச்சவாயன் ஆகி விட்டான்.

மீண்டும் கோர்ட் பின்னால் அலைகிறோம்.
இப்போது, இன்னும் வழக்கு சுப்ரீம் கோர்ட்டின்
பரிசீலனையில் இருக்கும்போதே -
தீர்ப்பு அவர்களுக்கு பாதகமாக 
இருக்குமோ என்கிற தவிப்பில் - மீண்டும் நாடகம்
ஆடுகிறார்கள். அணைக்கு ஆபத்து -புதிய அணை
கட்ட வேண்டும் என்று.

பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கிறார்கள்.
பிரதமரை போய்ப் பார்க்கிறார்கள்.
உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.
பந்த் நடத்துகிறார்கள்.
இப்போதைக்கு அவர்கள் குரல் தான் பலமாகக் 
கேட்கிறது. வெளிமக்கள் அவர்கள் பக்கம் நியாயம்
இருக்கிறது என்று நினைக்கத் தொடங்கி விட்டார்கள்.

தமிழ் நாடு ஏமாந்தது போதும்.
உடனடித் தேவை பலமான பதில் தாக்குதல்.
தமிழகம் முழுவதும் சேர்ந்து பதிலடி கொடுக்க வேண்டும்.
ஒரே குரலில் பேச வேண்டும்.
உண்மையை உரக்கச் சொல்ல வேண்டும்.
அகில இந்தியாவிற்கும் தெரியும்படி சொல்ல வேண்டும்.
நம் தரப்பு நியாயம் அனைவருக்கும் புரியும்படி – 
சுப்ரீம் கோர்ட்டுக்கு புரியும்படி சொல்ல வேண்டும் !
நல்ல தீர்ப்பு விரைவில் கிடைக்கும்படி செய்ய வேண்டும்
நன்றி.Mohamed Fazurudeen