RMY BATCHA

Create your own banner at mybannermaker.com!

Showing posts with label கும்பகோணம் செய்தி. Show all posts
Showing posts with label கும்பகோணம் செய்தி. Show all posts

13 April 2017

கும்பகோணம் அருகே உள்ள திருப்புரம்பியம் என்ற கிராமம் குறித்த காணொளி

சோழ மன்னர்களின் முதன்மைநகரான நமது ஊர் ( கும்பகோணம் ) அருகே உள்ள திருப்புரம்பியம் என்ற கிராமம் குறித்த காணொளி.
 நாம் அறியாத பல சுவாரஸ்யமான வரலாற்றுக் குறிப்புகளைக்கொண்டுள்ளது.
 நமது ஊர்( கொரநாட்டு கருப்பூர் ) அருகில் உள்ள மனஞ்சேரி என்ற அழகிய கிராமத்தில் உள்ளதர்ஹாவை பற்றியவரலாறு தகவல் அறிந்தவர்கள் விரும்பினால் கமெண்ட்ஸ் பகிர்ந்து கொள்ளவும். 
இந்த போரில் கலந்துகொண்டவர்கள் அடக்கஸ்தலம்மாக இருக்க
வாய்பு உள்ளது.ஏன் என்றால் இந்த அடக்கஸ்தலதை காணும் போது
மரணம் அடைந்த பலஉடலை ஒரு இடதத்தில் அடக்கசெய்தது 
போல் உள்ளது.இந்த அடக்கஸ்தலதை கண்டவர்களுக்கு புரியும். திருப்புரம்பியம்

01 June 2012

கும்பகோணத்தில் முகமூடி கொள்ளை.


கும்பகோணம் டாக்டர் ராமமூர்த்தி ரோடு 2 - வது தெரு செல்லம் நகரில் வசித்து வருபவர் செந்தில் குமார். டாக்டர். தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லலிதாம்பிகை. இவர் டாக்டருக்கு படித்துள்ளார். ஆனால் குடும்பத் தலைவியாக உள்ளார். நேற்று இரவு செந்தில் குமாரும் அவரது மனைவி லலிதாம்பிகையும் வீட்டில் ஏ.சி. அறையில் படுத்து தூங்கி கொண்டு இருந்தனர். நள்ளிரவு 12.30 மணியளவில் டாக்டர் செந்தில் குமாருக்கு கும்பகோணம் ரெயில் நிலையம் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் இருந்து போன் வந்தது. நோயாளி ஒருவருக்கு அவசரமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளது. உடனே புறப்பட்டு வாருங்கள் என போனில் பேசியவர்கள் தகவல் தெரிவித்தனர். செந்தில் குமாரும் தனது மனைவியிடம் தெரிவித்து விட்டு ரெயில் நிலையம் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டு சென்றார். செல்லும் போது வீட்டின் வெளிப்புற கதவை பூட்டி சென்றார். இதனை நோட்டமிட்ட கொள்ளை கும்பலை சேர்ந்த 2 பேர் அங்கு வந்தனர். அவர்கள் முகத்தில் முகமூடி அணிந்திருந்தனர். டாக்டர் செந்தில் குமார் வீட்டின் வெளிப்புற கதவை உடைத்து அக் கும்பல் உள்ளே நுழைந்தது. பெண் டாக்டர் லலிதாம்பிகை ஏ.சி. அறையில் படுத்து இருந்ததால் கொள்ளையர்கள் வெளிப்புற கதவை உடைக்கும் சத்தம் கேட்கவில்லை. உள்ளே புகுந்த அக்கும்பல் லலிதாம்பிகை படுத்திருந்த அறையின் கதவையும் உடைத்து உள்ளே புகுந்தது. திடீரென முகமூடி கொள்ளை கும்பல் வீட்டிற்குள் புகுந்தததை பார்த்ததும் டாக்டர் லலிதாம்பிகை அதிர்ச்சி அடைந்தார். அவர் சத்தம் போட முயன்றார். அவரை கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் கத்தி முனையில் மிரட்டினர். சத்தம் போட்டால் கொன்று விடுவோம் என்றனர். இதனால் லலிதாம்பிகை பயந்து போனார். உடனே கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் வீட்டில் பணம், நகை எங்கு இருக்கிறது என மிரட்டி கேட்டனர். பீரோவில் ரூ. 3 லட்சம் பணம் இருப்பதாக லலிதாம்பிகை தெரிவித்தார். உடனே கொள்ளைக் கும்பல் அந்த பணத்தை எடுத்துக் கொண்டது. மேலும் கத்தி முனையில் லலிதாம்பிகை அணிந்திருந்த 5 பவுன் நகையையும் பறித்தனர். பின்னர் கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. கொள்ளை போன நகை, பணத்தின் மதிப்பு ரூ. 4 லட்சம் ஆகும். கொள்ளையர்கள் தப்பி சென்ற பின்னர் இந்த சம்பவம் குறித்து லலிதாம்பிகை தனது கணவர் செந்தில் குமாருக்கு தகவல் தெரிவித்தார். அவர் உடனடியாக வீட்டிற்கு விரைந்து வந்தார். இது குறித்து கும்பகோணம் கிழக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் கிடைத்ததும் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அனில் குமார் கிரி, டி. எஸ். பிக்கள் சிவபாஸ்கர், இளங்கோவன் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். கைரேகை நிபுணர்கள் மற்றும் போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் கொள்ளையர்களின் ரேகைகளை பதிவு செய்தனர். போலீஸ் மோப்ப நாய் கொள்ளை நடந்த வீட்டை மோப்பம் பிடித்து விட்டு சற்று தூரம் ஓடியது. கொள்ளையர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் அழகேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு கோணங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.கும்பகோணத்தில் இது வரை முகமூடி கொள்ளை சம்பவம் நடைபெற்றதில்லை. தற்போது தான் முதல் முறையாக நடைபெற்றுள்ளது. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நன்றி-மாலைமலர்

23 April 2012

கும்பகோணத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் பரபரப்பு ..


கும்பகோணம் நேற்று காலை நாகர்கோவில் இந்திய உணவுக் கழகத்திலிருந்து அரிசி ஏற்ற கும்பகோணம் ரெயில் நிலையத்திற்கு வந்த சரக்கு ரெயில்இணைப்பு பாதையிலிருந்து சரக்கு கையாளும் இடத்திற்கு ரெயில் பெட்டிகளை கொண்டு செல்வதற்காக ரெயில் இன்ஜினை பின்னோக்கி ஏற்றும் போது இருப்புப் பாதையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புக் கட்டைகளையும், இரயில்வே சிக்னலையும் கவனிக்காமல் இயக்கயதால் இரயில் பாதையில் இருந்து தடுப்புக் கட்டைகளை தாண்டி 100 மீட்டர் தரையில இறங்கி நின்றது. எதிரில் செக்காங்கண்ணி பகுதி மக்கள் வசிப்பிடங்களும் கார் மெக்கானிக் செட்டும் இருக்கிறது. அடிக்கடி மக்கள் நடமாட்டம் உள்ள பகுதி இதனால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரெயில் இன்ஜின் டிரைவர் பார்த்திபன் என்பவர் நாகர்கோவில் சந்திப்பிலிருந்து கும்பகோணம் ரெயில் நிலையம் வரை ஓட்டி வந்தார். இது குறித்து கும்பகோணம் ரெயில்வே போலீசாரும், கும்பகோணம் காவல் துறையும் வழக்கு பதிவு செய்து விபத்து நடந்தது தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தமிழகத்திலேயே இதுவரை இது மாதரி தடம் புரண்ட சம்பவம் இல்லை. ஆதலால் இந்த சம்பவத்தை நேரில் பார்ப்பதற்கு மக்கள் பரபரப்பாக கூடினார்கள். திருச்சி ரெயில்வே மண்டலத்தை சார்ந்த கும்பகோணம் ரெயில் நிலையம் என்பதால் திருச்சி ரெயில்வே மண்டலத்தை சார்ந்த உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு தப்பிச் சென்ற ரெயில் டிரைவரை தேடி வருகிறார்கள் மற்றும் சம்பவம் நடந்த பகுதியல் செக்காங்கண்ணி ரெயில்வே கேட் கீப்பரிடம் திருச்சி உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடததினார்கள்.
சம்பந்தபட்ட ஓட்டுனர் பார்த்திபன் மீது ரெயில்வேகாவல்
அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து டிரைவரை தேடி வருகிறார்கள்.
நன்றி-தினபூமி
கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கம் மீண்டும் மூடல் ...

கும்பகோணம்: அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நோயாளி இறந்ததையடுத்து கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கம் மூடப்பட்டது. 6 மாதங்களுக்கு முன்பு தஞ்சை மருத்துவக்கல்லூரி தொற்றுநோய் பிரிவு நிபுணர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தனர். அறுவை சிகிச்சை அரங்கில் இருந்து சில மாதிரிகளை எடுத்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து, அறுவை சிகிச்சை அரங்கில் தொற்றுநோய் கிருமி பரவியுள்ளதால், இங்கு அறுவை சிகிச்சை எதுவும் செய்ய வேண்டாம் என பரிந்துரை செய்தனர். அதனால் கடந்த 4 மாதமாக இங்கு அறுவைசிகிச்சை நடைபெறவில்லை. தமிழக அரசின் மருத்துவத் துறை இயக்குனர் உத்தரவின்பேரில், குடந்தை அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அரங்கில் உடனடியாக பல்வேறு ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் கடந்த 5 ம் தேதி முதல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அன்று முதல் சிறிய அளவிலான அறுவைசிகிச்சைகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் விரைவீக்க அறுவை சிகிச்சைக்காக கும்பகோணம்
அடுத்த கண்டரமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (40), வில்லியவரம்பல் கிராம த்தை சேர்ந்த கருணாகரன் (30) ஆகியோர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இருவருக்கும் கடந்த 16 ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. அன்று மாலையே இருவருக்கும் காய்ச்சல், மயக்கம், மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இருவரும் உடனடியாக மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத் துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த20 ம் தேதி பாலசுப்ரமணியன் இறந்தார். கருணாகரனுக்கு தொடர்ந்துசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக மருத்துவத்துறை இயக்குனர் உத்தரவின்பேரில் ஒரு கண்காணிப்பு குழு அமைக்கப்பட் டது. இந்த குழுவில் உள்ள மருத்துவ நிபுணர்கள் கும்பகோ ணம் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்து வருகின்றனர். இதையடுத்து கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கு மீண்டும் மூடப்பட் டது.
நன்றி-தினகரன்

07 December 2011

கும்பகோணத்திலும் தாக்குதல்





சென்னை, டிச.7: சென்னை, தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று கேரள மாநிலத்தவரின் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. சென்னை, கோவையில் உள்ள ஜோய்ஆலுக்காஸ் நகைக் கடைகளையும் தமிழர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
முன்னதாக குமுளியில் தமிழர்களின் கடைகளை கேரளத்தினர் அடித்து நொறுக்கியதாக செய்திகள் வெளியானது. இதனால் கோபமடைந்த கம்பத்தில் கேரளாக்காரர்களின் கடைகள், நிறுவனங்களை தமிழர்கள் சிலர் சூறையாடினர். லாரி, வேன் ஆகியவை தீவைத்து எரிக்கப்பட்டன.
இந்த நிலையில் தஞ்சாவூரில் இன்று கேரள வியாபாரிகளின் கடைகளை தமிழ்த் தேச பொதுவுடமைக் கட்சியினர் தாக்கினர். ராயல் காபி பார் மற்றும் ஒரு குளிர்பானக் கடை ஆகியவை தாக்கப்பட்டன.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தஞ்சை முழுவதும் உள்ள கேரள வியாபாரிகள் தங்களது கடைகளை மூடி விட்டனர்.
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், கேரளாவில் தமிழர்களையும், அவர்களது கடைகளையும் தாக்கியதற்கு இது பதிலடி என்று கோஷமிட்டனர்.
இதையடுத்து தஞ்சையில் உள்ள ஜோய்ஆலுக்காஸ் நகைக் கடை முன்பு போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல சென்னையிலும் தாக்குதல் நடந்துள்ளது. சைதாப்பேட்டையில் உள்ள கேரள வியாபாரிக்குச் சொந்தமான ஸ்வீட் ஸ்டாலை ஒரு கும்பல் புகுந்து தாக்கி அங்கிருந்த ஷோ கேஸ்களை அடித்து உடைத்தது. இதில் கண்ணாடி குத்தி கடை ஊழியருக்கு கையில் காயம் ஏற்பட்டது.
இதேபோல சென்னை தி.நகரில் உள்ள ஜோய்ஆலுக்காஸ் நகைக் கடையை தமிழ்த் தேச பொதுவுடமைக் கட்சியினர் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.Link

               -----------------------------------------------------------------------------------------------------------------------------------------
கும்பகோணத்திலும் தாக்குதல்

இதேபோல கும்பகோணத்திலும் கேரளக்காரர்களின் நிறுவனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

அங்குள்ள ஜாய் மற்றும் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடைகள் மீது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் கண்ணாடிகள் உடைந்து நிறஉவன மேலாளர் உள்பட 2 பேர் காயமடைந்தனர்.
Link

22 November 2011

வேப்பத்தூர் வங்கியில் கொள்ளை முயற்சி


கும்பகோணம், நவ. 21: கும்பகோணம் அருகே தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கொள்ளை முயற்சி நடைபெற்றது.
திருவிடைமருதூர் காவல் சரகத்துக்குள்பட்ட வேப்பத்தூர் கிராமத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளை இயங்கி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வங்கியில் உள்ள எச்சரிக்கை மணி ஒலித்தது.
இதையடுத்து, சுற்றுப் பகுதி மக்கள் திரண்டு சென்று பார்த்த போது, வங்கியின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீஸôருக்கும், வங்கிக் கிளை மேலாளர் ரவிக்கும் தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் வந்து பார்த்த போது, வங்கியின் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், பாதுகாப்பு பெட்டக அறையை உடைக்க முயற்சி செய்துள்ளதும், அப்போது, வங்கியில் பொருத்தப்பட்டிருந்த எச்சரிக்கை மணி ஒலித்ததால் அவர்கள் தப்பியோடிவிட்டதும் தெரிய வந்தது.
கும்பகோணம் காவல் துணைக் கண்காணிப்பாளர் இளங்கோவன் சம்பவ இடத்ûதைப் பார்வையிட்டார்.
இதுகுறித்து திருவிடைமருதூர் போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
நன்றி

20 November 2011

கும்பகோணத்தில் ஆறரை இலட்சம் கொள்ளை.

கும்பகோணம் அருகே பணப்பரிமாற்ற நடுவத்தில் இன்று காலை மர்ம நபர்கள் ரூபாய் ஆறரை லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளார். 
கும்பகோணம் அருகே ஆடுதுறை பிரதான சாலையில் தனியார் பணப்பரிமாற்ற நடுவம் இயங்கி வருகிறது. இன்று காலை அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள் திடீரென அதன் நிர்வாகியை கட்டிப்போட்டுவிட்டு கண்ணில் மிளகாய் பொடியை தூவிவிட்டு ரூபாய் ஆறரை லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த நிர்வாகி திருவிடை மருதூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். துணை காவல் கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையிலான காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.

கும்பகோணத்தில் சுகாதார வசதிகள் மேம்படுத்த நடவடிக்கை.கும்பகோணம் அருகே புதிய கால்நடை மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் விரைவில் கட்டப்படும் என்று ஒன்றியப் பெருந்தலைவர் தமிழரசன் தெரிவித்துள்ளார்.
கும்பகோணம் திருவாடுதுறை பகுதியைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு ஒன்றியப் பெருந்தலைவர் தமிழரசன் நன்றி தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மழையால் சேதமடைந்த சாலைகள் புதுப்பிக்கப்படும் என்றும், புதியதாக கால்நடை மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் விரைவில் கட்டப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரமுயர்த்தவுள்ளதாகவும் தெரிவித்தார். 


மேலும் செய்தி அறிய---Link

18 November 2011

குடந்தையில் சாலை, குடிநீர்ப் பணிகளுக்கு ரூ. 15 கோடி: நகர்மன்றத்தில் தீர்மானம்

கும்பகோணம், நவ. 16: கும்பகோணம் நகரில் சுமார் ரூ. 15 கோடியில் சாலை, குடிநீர் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வது என புதன்கிழமை நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
 நகர்மன்ற சாதாரண கூட்டத்திற்கு அதன் தலைவர் ரத்னா சேகர் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ராஜா நடராஜன், ஆணையர் வரதராஜன் மற்றும் அலுவலர்கள், நகராட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
 கூட்டத்தில் பேசிய நகர்மன்றத் தலைவர் ரத்னா சேகர், உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்தார்.
 தொடர்ந்து பேசிய நகர்மன்ற காங்கிரஸ் உறுப்பினர் கோவிந்தராஜன், நகராட்சி பகுதிகளில் தூய்மைப் பணியை விரைவாக மேற்கொண்டதற்கு பாராட்டு தெரிவித்தார்.
 திமுக உறுப்பினர் சு.ப. தமிழழகன் பேசும்போது, திமுக உறுப்பினர்கள் சார்பில், மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் தமிழக அரசு பணிக்கு சேர்க்க வலியுறுத்தி கொடுக்கப்பட்ட தீர்மானத்தை நகர்மன்றம் எடுத்துக்கொள்கிறதா இல்லையா? எனக் கேள்வி எழுப்பினார்.
 அப்போது பேசிய துணைத் தலைவர் ராஜாநடராஜன், தமிழக அரசு எடுத்த முடிவிற்கு நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதால் பயன் இல்லை என்றார்.
 தொடர்ந்து, அந்தப் பொருளை நகர்மன்ற விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வழிவகை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, திமுக உறுப்பினர்கள் 18 பேரும் வெளிநடப்பு செய்தனர்.
 இதையடுத்து, நகர்மன்றத் தலைவரால் கொண்டுவரப்பட்ட, சுற்றுலா நகரமாக விளங்கும் கும்பகோணத்திலிருந்து ஜெயங்கொண்டம் - விருத்தாசலம் வழித்தடத்தில் அகல ரயில் பாதை அமைத்து கொடுக்க தீர்மானம் நிறைவேற்றி, தமிழக முதல்வருக்கும், மத்திய ரயில்வே அமைச்சகத்திற்கும் அனுப்பி வைப்பது, கும்பகோணத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காகவும், சுற்றுலாவை மேம்படுத்தும் வகையிலும் நகராட்சியால் வசூல் செய்யப்படும் நுழைவுக் கட்டணம் ரத்து செய்யப்படும் எனவும், இதைத்தொடர்ந்து, 10 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
 தொடர்ந்து நடைபெற்ற நகர்மன்ற அவசரக் கூட்டத்தில், நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் ரூ. 5.70 கோடியில் 62 சாலைப் பணிகளும், ரூ. 9.25 கோடியில் 7.5 கி.மீ. தொலைவிற்கு குடிநீர் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 இதையடுத்து நடைபெற்ற விவாதத்தில், திமுக உறுப்பினர் குட்டி தட்சிணாமூர்த்தி பேசும் போது, பழுதடைந்துள்ள சாலைகள் மேம்பாட்டுத் திட்டப் பணியில் எடுக்கப்படவில்லை என்றார்.
 திமுக உறுப்பினர் கண்ணன் பேசும் போது, 45-வது வார்டில் உள்ள இளங்காநகர் சாலை பல ஆண்டுகளாக மிகவும் மோசமாக உள்ளது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 திமுக உறுப்பினர் சுப்பிரமணியன் பேசும் போது, 15-வது வார்டு குடிசைத் தெருவுக்கு சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என்றார்.
நன்றி தினமணி.,