RMY BATCHA

Create your own banner at mybannermaker.com!

Showing posts with label எச்சரிக்கைகள். Show all posts
Showing posts with label எச்சரிக்கைகள். Show all posts

02 March 2012

கூடங்குளம் கரண்டு ஃபேக்டரி... |

கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது - கருணாநிதி சொல்கிறார்
கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனே திறக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கேட்டுக் கொண்டார். இத்தனை காலமாக இது ஏன் திறக்கப்படவில்லை . ஆளும் கட்சி இதை திறப்பதற்கு துணை நிற்பதற்கு பதிலாக அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக தெரிகிறது என்று குற்றம் சாட்டினார். மேலும் கூடங்குளம் அணு உலைகள் செயல்பாட்டிற்கு வந்தால் தமிழ் நாட்டில் இருள் இல்லை , மின் தட்டுப்பாடு இல்லை எனவும் தெரிவித்தார். கல்பாக்கம் அணு உலை இது வரை பாதுகாப்பாக தானே இயங்கிக் கொண்டிருக்கிறது, அதன் மூலம் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லையே . இதிலிருந்து அணு உலைகள் பாதுகாப்பானது தான் என்பது தெரிகிறது என்றார்.
கருணாநிதி சொல்வதில் பல முரண்பாடுகள் இருப்பதாக தெரிகிறது . கூடங்குளத்தின் மூலமாக இறுதியில் எல்லா இழப்புகளும் போக கிடைக்கும் 300 மெகாவாட் மின்சாரத்தை கொண்டு தமிழ்நாட்டில் எப்படி மின்தட்டுபாட்டை போக்க முடியும். தமிழ் நாட்டிக்கு தேவை 4500 மெகாவாட் மின்சாரம். அது கிடைத்தால் தான் தமிழ்நாட்டிற்கு தடையில்லா மின்சாரம் வழங்க முடியும் / அதனால் கூடங்குளம் அணுமின் நிலையம் மூலமாக தமிழ்நாட்டின் மின் தட்டுபாட்டை சமாளித்து விடலாம் என்பது பொய் என்று அணு உலை எதிர்பாளர்கள் மற்றும் ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.
மேலும் கல்பாக்கத்தில் பணிபுரியும் மருத்துவர் புகழேந்தி அணு கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக மருத்துவம் பார்க்கிறார். ஒரு ஆவண படத்திலும் அனுகதிர்வீச்சால் கல்பாக்க மக்கள் எவ்வாறு பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்பதை பல சான்றுகளுடன் விளக்கியிருக்கிறார் . அணு உலைகளின் பயங்கரத்தை அந்த படத்தில் தெளிவாக விளக்கியிருக்கிறார் மருத்துவர் புகழேந்தி.
இப்படி ஒரு நிலையில் , கருணாநிதி ஆராயாமல் அணு உலை பாதுகாப்பானது தான் என்று சொல்வது மக்களுக்கு மீண்டும் ஒரு துரோகம் இழைக்கும் செயலாகவே பார்க்க முடிகிறது என தமிழின ஆர்வலர்கள் கருதுகின்றனர்                                           
                                            கூடங்குளம் கரண்டு ஃபேக்டரி... |
“எங்கள் கணவர் மார்களில் பெரும்பான்மையோர் குடிப்பதை அறவே நிறுத்தி விட்டார்கள். மீதமுள்ள சிலரும் குடிப்பதில் பெரும்பகுதி நிறுத்திக் கொண்டார்கள்.. கூடிய விரைவில் அவர்களும் முற்றாய் நிறுத்திவிடுவார்கள். எங்களை அடித்து துன்புறுத்துவதை நிறுத்திக் கொண்டதோடு வீட்டு வேளைகளில்கூட எங்களுக்கு கூடமாட ஒத்தாசை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்,” என்பதாக நீளும் மகிழ்ச்சியும் குதூகலமும் கலந்து கொப்பளிக்கும் பெண்களின் பேட்டியோடு நகர்கிறது இன்றைய (.28.12.2011) “நியூ இந்தியன் எக்ஸ்ப்ரெஸ்” இன் செய்தி ஒன்று.

யுகம் யுகமாக எது பெண்களை விடாது அழவைத்ததோ அதை முற்றாக அழித்துப் போட்டு அவர்களின் கண்ணீரைத் துடைத்து அவர்களை மலரச் செய்த தலைவன் யார்? அல்லது கடவுள்தான் யார்?

எந்தத் தலைவனாலும், இறைதூதனாலும் ஏன் இறைவனாலும் இது சாத்தியப் படாது. ஒரு மக்கள் போராட்டம் மட்டுமே இத்தகையதொரு மாற்றத்திற்கு காரணமாக அமைய முடியும் என்பது மீண்டுமொருமுறை நிறுவப் பட்டிருக்கிறது.

இடிந்தகரையில் நடைபெறும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தின் 134 வது நாள் நிகழ்வுகளை சேகரிப்பதற்காக சென்ற அந்தப் பத்திரிக்கையின் செய்தியாளர்களிடம் போராடிக்கொண்டிருக்கும் அந்த மண்னின் பெண்கள் கூறியது இது.

எந்தவொரு மகத்தான மக்கள் போராட்டமும் இது போன்ற உப விளைவுகளையும் சேர்த்தே கொண்டு வந்து சேர்க்கும் என்பதுதான் நமக்கு வரலாறு சொல்லும் பாடம்.

உப விளைவே இவர்களது வாழ்க்கையில் இவ்வளவு மாற்றத்தினையும் மகிழ்ச்சியையும் கொடுக்க வல்லது எனில் போரட்டத்தின் இறுதி விளைவு சத்தியமாய் இதைவிட கோடி கோடி மடங்கு மாற்றத்தையும் உறுதியாய் கொண்டு வந்து சேர்க்கும் என்று நம்மால் உணர முடிகிறது.

”எங்கள் வருமானத்தில் பத்தில் ஒரு பங்கினை போராட்ட நிதியாக வழங்கிவிடுகிரோம்” என்று நீளும் அவர்களது நேர்காணலோடு நீள்கிறது அந்த செய்தி. உண்மையை சொல்வதெனில் தினமும் தினமும் செத்து செத்துப் பிழைக்கும் அன்றாடம் காய்ச்சிகளான, அதிலும் அறைகுறை வருமானத்திற்கான உழைப்பின் பெரும்பகுதி நேரத்தையும் போராட்டத்திற்காகத் தியாகித்து விட்ட பனையேறிகளும் மீனவர்களும் கிடைக்கும் தங்கள் சொற்ப வருமானத்திலும் பத்தில் ஒரு பங்கை போராட்டத்திற்களித்து போராடுகிரார்கள் எனில் ஏன் அவர்கள் போராடுகிறார்கள்?

“ஏம்பா கூடங்குளத்து கரண்டு ஃபேக்டரி வரக்கூடாதுன்னு இப்படி வம்படிக்குறீங்களே. நல்லா இருப்பீங்களா நீங்க .?” என்று விஷ்ணுபுரம் சரவணனின் நண்பரிடம் அவரது நண்பர் ஒருவர் கூறினாராம். ஆக, அவரைப் பொறுத்தவரை கூடங்குளம் அணு உலை என்பது சோப்பு ஃபேக்டரி மாதிரி, கார் ஃபேக்டரி மாதிரி மின்சாரம் தயார் செய்யும் ஒரு ஃபேக்டரி. அது உற்பத்தியைத் துவங்கி விட்டால் மின் தடை வராது, ஒரு ஆயிரம் ரெண்டாயிரம் பேருக்கு பிழைப்பு கிடைக்கும். ஒரு பத்து பதினைந்து பேர் கடை வைத்துப் பிழைக்கலாம், சுத்துப் புறம் வளர்ந்து விரிவடையும். இன்னும் சொல்லப்போனால் மின்சாரத்தின் விலைகூடக் குறையும். அதை ஏன் பாழாய்ப் போன இவர்கள் இப்படி மல்லுக் கட்டிக் கொண்டு எதிர்க்கிறார்கள் என்பது அவரது ஆதங்கம். ஆமாம் கூடங்குளத்தில் கரண்டு ஃபேக்டரி ஏன் வரக்கூடாது?

மேலே சொன்ன எதுவும் உண்மை அல்ல என்பதை முதலில் சொல்லிவிட்டு தொடர்வதே சரியாக இருக்கும்.

கூடங்குளத்தில் அணு உலை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில்1988 இல் கோபர்ச்சேவ் மற்றும் ராஜீவ் இருவரும் கையொப்பமிடுகின்றனர் “அணுக்கரு வழங்குவோர் குழுமத்தின்” ஒப்புதல் பெறவில்லை. எனெவே இதை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க் குரெலெடுத்தது அமெரிக்கா. ஏறத்தாழ இந்த நிலையிலேயே இப்பகுதி மக்களும் உலைக்கு எதிரான தங்கள் போராட்டத்தினை ஆரம்பித்திருந்தார்கள். போராடுபவர்களைப் பார்த்து அரசும் இதன் ஆதரவாளர்களும் சொன்னார்கள் “அமெரிக்காவிடம் பணம் பெற்றுக் கொண்டு கூத்தடிக்கும் அமெரிக்க கைக்கூலிகள்” . இப்படிச் சொன்னவர்கள்தான் ஆட்சியே போனாலும் பரவாயில்லை அமெரிக்காவோடு அணு ஒப்பந்தம் செய்தே தீருவோம் என்று அந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட உத்தமர்கள். மக்களின் எதிர்ப்பிற்கும் அமெரிக்காவின் எதிர்ப்பிற்கும் ஒரே காரணம்தான் என்பதை ஒத்துக் கொள்வதற்கு நாம் ஒன்றும் அவர்கள் அளவிற்கு புத்திசாளிகள் இல்லை. ரஷ்யாவோடு ஒப்பந்தம் என்பதைத் தவிர அமெரிக்கா இதை எதிர்ப்பதற்கு வேறு காரணம் எதுவுமில்லை என்பது நமக்கு மட்டுமல்ல அவர்களுக்கும் நன்றாகவே, மிக நன்றாகவேப் புரிகிறது.

”உலைக் கட்டுமானங்கள் மிகப் பாதுகாப்பன முறையில் கட்டமைக்கப் பட்டுள்ளன. மேலும் ரிக்டர் அளவில் ஆறு எண் வரைக்கும் நில நடுக்கம் ஏற்பட்டாலும் எந்த ஆபத்தும் ஏற்படாத வகையில் உலை கட்டமைக்கப் பட்டுள்ளது. எனவே அச்சமே கொள்ளத் தேவையில்லை என்று அப்துல் கலாமே சொல்லியிருக்கிறார். அவரைவிட நீங்கள் என்ன பெரிய அறிவாளியா ?” என்றும் ஒரு புன்னகையோடு ஏளனிக்கிறார்கள் சிலர்.

சத்தியமாக அய்யா கலாம் அளவிற்கு நாம் படித்தவர்களோ அறிவாளிகளோ அல்லதான். ஆனாலும் அவர் சொல்லியிருக்கிற எல்லை அளவைக் கடந்து 6.5 ரிக்டர் அளவில் அந்தப் பகுதியில் எதிர் காலத்தில் ஒரு பூகம்பம் வருகிறது என்று வைத்துக் கொள்வோம் (அதைவிட அதிக அளவில்கூட நிலனடுக்கம் வருவதற்கு வாய்ப்புகள் அதிகமென்றே சொல்கிறார்கள்) அதன் விளைவுகள் புக்சிமா, செர்னோபில் மற்றும் அமெரிக்காவின் மூன்று மைல் அணு உலை விபத்துக்களைவிடக் கொடுமையானதாகத்தானே இருக்கும். ஒருக்கால் அப்படி ஒரு பேரிடரே வராது. நாங்கள் இறைவனிடம் ஐ.எஸ்.டி போட்டு பேசிவிட்டோம் என்று கூட இவர்கள் சொல்லக்கூடும். அவர்களுக்கும் ‘செர்னோபில் மற்றும் மூன்று மைல் அணு உலை விபத்துக்கள் பேரிடர் விபத்துகளால் ஏற்படவில்லை. மனிதத் தவறுகளும் இயந்திரக் கோளாறுகளுமே கூட உலைகள் வெடிக்க காரணமாகக் கூடும்’ என்பதே நமது பாமரத்தனமான பதில்.

ஆயிரம் விமர்சனங்கள் அவர் மீது நமக்கு இருந்தாலும் கலாம் அய்யா மீது நாம் கொண்டிருக்கும் மதிப்பும் மரியாதையும் எந்த ஆக நவீன அளவுகோளையும் தாண்டி நீளும் தன்மை கொண்டவை. ஆனால் அதற்கு சற்றும் பொருத்தமே இல்லாமல் “செர்னோபில் விபத்தில் வெறும் 55 பேர் மட்டுமே இறந்து போனார்கள்.அதை ஏன் இவ்வளவு பெரிது படுத்துகிறார்கள்” என்பது மாதிரி சொல்லி நம்மை சங்கடப் பட வைத்திருக்கிறார்.

அய்யோ அய்யா, 55 பேர் செத்தது பெரிது இல்லையா? இதைச் செய்தால் ஒரே ஒருவன் செத்துப் போவான் என்று தெரிந்த பின்னும் அதை ஒருவன் செய்தால் அவன் மனிதன்தானா அய்யா? விழித்துக் கொண்டே கனவு காணும் பித்துக்குளி கூட இப்படி உளற மாட்டானே. எப்படி இப்படி மாறினீர்கள் என்று நான் கேட்க மாட்டேன். இதுதான் நீங்கள் என்பது நன்றாகவே தெரியும். ஆனால் இவ்வளவு வெளிப்படையாகப் பேசுகிற தைரியம் எப்படி வந்தது? எதற்கு சுற்றி வளைத்து பேசிக் கொண்டு, நேரடியாய் சொன்னால் மட்டும் என்ன செய்துவிடுவார்கள் என்கிற, ஆமாண்டா அப்படித்தான் சொன்னேன் என்ன செஞ்சுடுவ? என்று கேட்கிற திமிர் கலந்த தொனி இருக்கிறது பாருங்கள் அதுதான் நாங்கள் சற்றும் எதிர் பார்க்காதது. அது சரி, எத்தனை பேர் செத்தால்தான் அதை நீங்கள் ஒரு பொருட்டாய் கொள்வீர்கள்? யூனியன் கார்பைடு மாதிரி குவியல் குவியலாய் செத்துத் தொலைத்தால்தான் உங்களுக்கு அதை ஒரு பொருட்டென ஏற்க மனமிரங்குமா?

அது சரி, செர்னோபில் கூட ஒரு விபத்து. செர்னோபில் விபத்தில் கூட 55 பேர்தானே செத்தார்கள் என்பதன் மூலம் எதை எங்களுக்கு உணர்த்த வருகிறீர்கள் அய்யா?. பயப்படாதீர்கள், அப்படியே விபத்து ஏதேனும் நிகழ்ந்தாலும் சொற்ப அளவில்தான் சாவு இருக்கும் என்று சொல்ல வருகிறீர்களா? உங்கள் இடது கால் சுண்டு விரலிலிருந்து உதிர்ந்து விழும் மண்ணளவிற்கும் பொருட்டில்லாத நான் கேட்கிறேன், எதிர்பார்க்கமல் ஏற்படும் உயிரிழப்பை விபத்து என்று கொள்ளலாம். ஆனால் சொற்ப அளவே நிகழும் என்ற அளவில் எதிர் பார்த்துவிட்டாலே அது விபத்தல்ல, கொலையாயிற்றே அய்யா?. உங்களைப் போன்ற சான்றோர்களையும் மேதைகளையும் எதிர்கால சந்ததியினர் கொலையாளிகளாகப் பார்த்துவிடக் கூடாதே என்பதற்குத்தான் இப்படிப் போராடித் தொலைக்கிறார்கள் .

2004 நவம்பர் மாதத்து “current science" இதழில் கேரளப் பல்கலைகழகத்தின் நில இயல் துறையை சேர்ந்த முனைவர் பிஜி அவர்களூம் சென்னை ஐ.ஐ.டி ராம்குமார் அவர்களும் கூடங்குலம் பகுதி எரிமலைக் குழம்புகளால் ஆனது என்று எழுதியிருப்பதை தனது பேட்டி ஒன்றில் மாலதி மைத்ரி மேற்கோள் காட்டியிருப்பதை இப்போது நாம் கவனத்தில் கொள்வது அவசியம்.

"மக்கள் அதிகமாய் நடமாடாத பகுதியில்தானே அணு உலை அமைக்கப் படுகிறது. பிறகு ஏன் இவ்வளவு பதறுகிறீர்கள்?” என்பது மாதிரியான ஒரு கேள்விக்கு, மக்கள் நடமாட்டமே இல்லாதப் பகுதியில்தான் இவை அமைக்கப் படவேண்டும் என்ற 29.04.1991 அன்று வெளியிடப் பட்ட எண் 828 (தமிழ்நாடு பொதுப் பணித்துறை) என்ற அரசாணையை பொருத்தமாக சுட்டிக் காட்டி இது அந்த அரசாணைக்கு புறம்பானது என்று சொல்வதையும், சுற்றுலாத் தளங்கள் மற்றும் புகழ் பெற்ற இடங்களுக்கு 20 கிலோமீட்டர் தொலைவு வரை அணு உலைகளை நிறுவக் கூடாது என்கிற AERA விதிகளையும் இது மீறுவதாக அவர் மிகச் சரியாக கூறுவதையும் நம்மால் உதாசீனப் படுத்திவிட முடியாது.

கல்பாக்கத்தில் இத்தனை ஆண்டுகளாக ஒரு பாதிப்பும் நிகழ்ந்து விடவில்லையே. அப்புறம் ஏன் இவ்வளவு பதட்டம் என்று கூட சொல்கிறார்கள். விபத்து திடீரென்றுதான் வரும் என்று நாம் அவர்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நம்மைவிட அவர்களுக்கு இது மிக நன்றாகவே தெரியும். கல்பாக்கத்தில் பெரிய அளவில் விபத்துக்கள் நிகழவில்லையே தவிர அதன் பாதிப்புகளான கேன்ஸர் , ஆறு விரல் குழந்தைகள், மற்றும் பல்வேறு விதமான எலும்பு சம்பந்தமான வியாதிகள் இருக்கவே செய்கின்றன. கூடவே அவற்றை எதிர்த்து போராட்டங்களும் அந்தப் பகுதியில் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. என்ன சோகம் எனில் அணு உலைக்கு எதிராகப் பேசுபவனை குண்டர் சட்டத்திலே போடு என்று பேசினால் பக்கம் பக்கமாகப் போடும் பத்திரிக்கைகள் அவற்றுக்கெதிரான போராட்டங்களை கண்டு கொள்வதே இல்லை.

மின்சாரம் தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதைத் தவிர வேறு மாற்றே இல்லையே என்கிறார்கள். ஒரு மூன்று மாதங்களுக்கு முன்னால் எந்தப் பத்திரிக்கை என்று சரியாய் நினைவில்லை தினத் தந்தி அல்லது தினகரன் இலவச மலரில் வந்திருந்த ஒரு செய்தி மாற்று சாத்தியமே என்று சொல்கிறது.

ஏழாம்வகுப்பு அளவில் படிக்கும் இரண்டு மாணவர்களுக்கு வழங்கப் பட்ட விருதுகளைப் பற்றியது அது. ஒருவன் வீட்டிலிருக்கும் மின் விசிரியை தொடர்ந்து உற்று நோகியதன் விளைவாக ஒரு ஆய்வுக்கு நகர்கிறான். சக்கரம் சுற்றினால் மின்சாரம் எடுக்கலாம். மின்விசிரிதான் சுழல்கிறதே அதிலிருந்து மின்சாரம் எடுக்கலாமே என சிந்திக்கிறான். விளைவு அதற்கேற்றார்போல் ஒரு டைனமோ தயார் செய்கிறான். மின்விசிறி இயங்கும் போது ஒரு பெல்ட்டால் இணைக்கப்பட்ட
அதன் அருகில் பொருத்தப் பட்டுள்ள டைனமோவின் சக்கரமும் சுழற்றப் பட்டு மிசாரம் தயாராகிறது. ஒரு அரை மணி நேரமானதும் மின் இணைப்பை துண்டித்து விடலாம். அரை மணி நேரம் அந்த டைனமோ உற்பத்தி செய்து சேமித்து வைத்திருந்த மின்சாரத்தைக் கொண்டு அடுத்த அரை மணி நேரம் மின்விசிறி ஓடும். இந்த அரை மணி நேரத்தில் மின் விசிரி இயங்கும் போது மீண்டும் டைனமோ மிசாரத்தை உற்பத்தி செய்யும்.

இன்னொரு மாணவன் சுழலும் ரயில் சக்கரங்களிலிருந்து மின்சாரம் தயாரிக்க இயலும் என்று நிறுவி இருக்கிறான்.

ஒரு நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு மணி நேரம் கூட மின்வெட்டே இல்லை என்ற செய்திக் கட்டுரையை ஜூனியர் விகடனில் பார்த்தேன். அவர்கள் காற்றாலை , சூரிய ஒளி போன்றவற்றால் மின்சாரம் தயாரிப்பதாகவும், தங்கள் தேவைக்கு மிஞ்சிய மின்சாரத்தை அவர்கள் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தருவதாகவும் படித்தேன்.

இப்படியெல்லாம் மாற்றுப் பாதையில் வெற்றிகரமாக பயணிக்க பள்ளிப் படிப்பைத் தாண்டாதவர்களாலேயே முடிகிறது எனில் அணு உலையை அமைத்தே தீருவது என்று ஒற்றைக் காலில் நிற்கும் இந்த மேதைக்ளால் முடியாதா?

வெய்யில் எவ்வளவு மகத்துவமானது என்பதை எஸ்.ரா விடம்தான் கேட்க வேண்டும். வெய்யிலின் தீராக் காதலர் அவர். மகத்துவம் மிக்க வெய்யிலை எப்படி வீணடிக்கிறோம்? ஒவ்வொரு சொட்டு வெய்யிலிலும் எவ்வளவு மின்சாரம் இருக்கிறது என்பது இந்த அணு உலையின் காதலர்களுக்கு ஏன் இன்னும் புரியாமல் இருக்கிறது?.அல்லது ஏன் இன்னும் புரியாத மாதிரி நடிக்கிறார்கள்.அல்லது என்ன செய்தால் இவர்களுக்குப் புரியும். அல்லது புரிந்தேதான் இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்வார்கள்.
தமிழகத்தில் இவ்வளவு மின் தேவையும் இருளும் இருக்கிறபோது என் பாட்டனையும் அப்பனையும் தம்பி தங்கைகளையும் கூண்டோடு கொலை செய்த ராஜபக்‌ஷேவை திருப்தி செய்வதற்காய் கடலிலே குழாய் அமைத்து வழங்க இருக்கும் மின்சாரத்தை நிறுத்தினால் போதாதா?
“செர்னோபில்லில் நடந்ததை ஒரு குறிப்பிட்ட நாட்டில் நடந்த பேரழிவாகக் கொள்ள முடியாது.மாறாக இது மொத்த உலகத்தையேபாதித்துள்ள விஷயமாகக் கொள்ள வேண்டும்” என்று கோபர்ச்சேவ் சொன்னதையும் இங்கு பதிவது சரியாக இருக்கும்.
ஏற்கனவே 14000 கோடிகளுக்கு மேல் கொட்டியாகிவிட்டது . இவ்வளவு செலவு செய்த பிறகு விட்டுவிட முடியுமா?. வீணாக்க முடியுமா? என்றும் அடிக்கடி கேட்கிறீர்கள் சான்றோர்களே?.
1,76,000 கோடிலிருந்து வேண்டுமானால் இந்த 14000 கோடியை கழித்துக் கொண்டு அருள்கூர்ந்து எங்களை விட்டு விடுங்களேன். 14000 கோடி செலவளித்து செய்த சவப் பெட்டி என்பதற்காக செத்துவிடு என்றால் இயலாது என்று போராடுவதற்காக எங்களை மன்னித்து விடுங்கள் பெரியோர்களே. 
நன்றி: “காக்கைச் சிறகினிலே” - இரா. எட்வின்

25 February 2012

திருட்டு வாகனமா..? சில விநாடிகளில் கண்டுபிடிக்கலாம்!



திருட்டு வாகனமா? சில விநாடிகளில் கண்டுபிடிக்கலாம்!
ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம். மத்திய அரசால் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம், சட்ட விரோதமாகப் பயன்படுத்தப்படும் வாகனங்களை உடனே அடையாளம் கண்டுகொள்ள உதவும்.
092123 57123 என்ற எண்ணுக்கு vahan> இடைவெளி <பதிவு எண் - வாகனத்தின் பதிவு எண்ணை இடைவெளியின்றி டைப் செய்து அனுப்பினால், அடுத்த விநாடியே வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை, வரி செலுத்திய விபரம், தகுதிச் சான்று முடிவடையும் தேதி ஆகிய விபரங்கள் தாங்கிய எஸ்எம்எஸ் வந்துவிடும்.
இந்த வசதி 2003 - ம் ஆண்டுக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். அல்லது 2003 - ம் ஆண்டுக்குப் பிறகு ஏதாவது ஒரு காரணத்துக்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வாகனம் சென்றிருக்க வேண்டும்.
நன்றி-விகடன் 


29 January 2012

ஆட்டோ வாங்க கடன் வழங்கும் திட்டம்

ஆட்டோ தொழிற் கூட்டுறவு சங்கங்கள் மூலம்
ஆட்டோ வாங்க கடன் வழங்கும் திட்டம்

தமிழ் நாட்டில் உள்ள சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக இத்திட்டம் தொடங்கப்பட்டு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தால் (டாம்கோ) செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

1 இத்திட்டத்தின் கீழ் கடன் எதற்கு வழங்கப்படுகிறது?

இத்திட்டத்தின் கீழ் இஸ்லாமிய, கிறித்துவ, சீக்கிய, புத்த மற்றும் பார்ஸி சமூகத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சுய தொழில் துவங்கிட கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆட்டோ வாங்க கடன் வழங்கப்படுகிறது.

2 வழங்கப்படும் கடன் தொகை எவ்வளவு?

அ. கேஸ் பொருத்தப்பட்ட (எல்பிஜி) ஆட்டோ வாங்க வழங்கப்படும் கடன் தொகை ரூ 1.21 இலட்சம்

ஆ சரக்கு (கேரியர்) ஆட்டோ வாங்க வழங்கப்படும் கடன் தொகை ரூ 1.28 இலட்சம்

இ பிற ஆட்டோ வாங்க கொடுக்கப்படும் கடன் தொகை ரூ. 1 இலட்சம் இக்கடன் தொகையில் 95 விழுக்காட்டை டாம்கோ நிறுவனம் ஏற்கும் மீதமுள்ள 5 விழுக்காடு தொகையைப் பயனாளி ஏற்க வேண்டும்

3. இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான தகுதிகள் என்ன?

அ. மேற்குறிப்பிட்ட சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

ஆ. ஆட்டோ ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் (உரிமம்) வைத்திருக்க வேண்டும்.

இ. ரூ. 800 / - அல்லது ரூ. 1000 / - தொகையை பங்கு மூலதனமாக ஆட்டோ தொழிற் கூட்டுறவு சங்கத்திற்கு அளிக்க வேண்டும்.

ஈ. தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி லிட். (தாய்கோ) வங்கியில் வைப்பு நிதியாக (நிலையான வைப்பு) ரூ. 5000 / - செலுத்த வேண்டும். (இதற்கு வட்டி தரப்படும்). முற்றும் தொடர் வைப்பு நிதியாக (தொடர் வைப்பு) பிரதி மாதம் ரூ. 500 / - நான்கு வருட காலத்திற்குச் செலுத்த வேண்டும்.

4. கடனுதவி பெற வருமான உச்ச வரம்பு உண்டா?

ஆம். விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம், நகர்புறம் எனில் ரூ. 54.500 / - க்கு மிகாமலும், கிராமப் புறம் எனில் ரூ. 39.500 / - க்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

5. இத்திட்டத்தின் கீழ் டாம்கோ நிறுவனம் வழங்கும் கடனை விட ஆட்டோ விலை அதிகமிருப்பின் என்ன செய்வது?

மீதமுள்ள கடன் தொகையை ஆட்டோ தொழிற் கூட்டுறவு சங்கம் அல்லது தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி லிட். (தாய்கோ) ஆகியவற்றிலிருந்து பெறலாம்.

6. கடன் தொகையில் பயனாளி எத்தனை விழுக்காடு பங்கு தொகை அளிக்க வேண்டும்?

வழங்கப்படும் கடன் தொகையில் பயனாளி 5 விழுக்காடு அவருடைய பங்கு தொகையாக அளிக்க வேண்டும். மீதமுள்ள 95 விழுக்காடு கடன் தொகை டாம்கோ நிறுவனத்தினரால் வழங்கப்படும்.

7. கடனுதவி பெறுவதற்கு பிணையம் (ச்யுரிட்டி) ஏதும் தர வேண்டுமா?

ஆம். பயனாளிகள் ஒவ்வொருவரும் இரண்டு ஆட்டோ ஓட்டுநர்களின் பிணையம் மற்றும் ரூ. 5000 / - வைப்பு தொகை செலுத்த வேண்டும்.

8. கடனுக்கான வட்டி விகிதம் எவ்வளவு?

இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடனுக்கான ஆண்டு வட்டி 6 விழுக்காடு மட்டுமே ஆகும்.

9. கடனைத் திரும்பச் செலுத்துவதற்கான காலம் எவ்வளவு?

இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடனை 4 ஆண்டுகளுக்குள் திரும்பச் செலுத்த வேண்டும்.

10. கடன் எவ்வாறு திரும்ப வசூலிக்கப்படுகின்றது?

ஆட்டோ தொழிற் கூட்டுறவுச் சங்கம் பயனாளியிடமிருந்து பிரதி மாத தவணை தொகையை வசூலித்து தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி லிட். (தாட்கோ) வங்கிக்கு செலுத்தும். தவணை தவறினால் பயனாளி தாய்கோ வங்கிக்கு செலுத்திய வைப்பு நிதியிலிருந்து ஈடுகட்டப்படும்.
நன்றி: நர்கிஸ்
ஜனவரி 2012

04 January 2012

அரசு அலுவலகத்தில் பாக்.கொடி: ஆறு ஹிந்துத்துவா தீவிரவாதிகள் கைது


பெங்களூர்:கர்நாடகா மாநிலம் சிந்தகியில் அரசு அலுவலகத்தின் முன்னால் உள்ள கொடி மரத்தில் பாகிஸ்தான் கொடியை ஏற்றியது தொடர்பாக ஆறு ஹிந்துத்துவா தீவிரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஸ்ரீராமசேனா ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கத்தின் மாணவர் பிரிவை சார்ந்தவர்கள் ஆவர். பிஜாப்பூர் மாவட்ட தலைநகரில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள சிந்தகி நகரத்தில் உள்ள தாசில்தார் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள மினி விதானசவுதா என்று அழைக்கப்படும் வளாகத்தில் புதுவருட தினத்தில் பாக்.கொடி ஏற்றப்பட்டிருந்தது. இச்சம்பவத்தை தொடர்ந்து ஹிந்துத்துவா அமைப்புகள் கண்டனம் தெரிவித்து களமிறங்கின.
பாகிஸ்தான் கொடியை ஏற்றியதன் பின்னணியில் முஸ்லிம்கள் தாம் என குற்றம் சாட்டி கபட வேடதாரிகளான ஹிந்துத்துவா அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மேலும் பாக்.கொடி ஏற்றியதை கண்டித்து அப்பகுதியில் வி.ஹெச்.பி, பஜ்ரங்தள் உள்ளிட்ட ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகள் முழு அடைப்பையும் நடத்தின. இச்சம்பவத்தின் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயன்ற பா.ஜ.க, கொடி ஏற்றப்பட்ட இடத்தை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சிகளையும் நடத்தியது.
பிஜாப்பூர் நகரத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பும் இதைப் போன்றதொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆனால், குற்றவாளிகள் மீது போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஊர்மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மதுரை:பா.ஜ.க தலைவர் எல்.கே.அத்வானியின் ஜனசேதனா யாத்திரை தமிழகத்தில் நடைபெறும் வழியில் பைப் வெடிக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வழக்கில் விசாரணையின் பெயரால் அப்பாவி முஸ்லிம் தம்பதியினரை கொடுமை படுத்திய புகாரில் போலீஸ் அதிகாரிக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளது. தென்காசியை சார்ந்த செய்யித் சுலைமான் சேட் மற்றும் அவரது மனைவி ஷரஃபுன்னிஸா ஆகியோர் அளித்த புகாரின் அடிப்படையில் நீதிபதி கெ.கெ.சசிதரன் சிறப்பு புலனாய்வு குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஜனவரி 18-ஆம் தேதிக்குள் இந்த அதிகாரியை மாற்றவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் தங்களின் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு தடையாக இருக்கிறார் என்றும், சட்டத்தை மீறி கொடுமைப்படுத்துகிறார் என்றும் புகார் அளித்துள்ள முஸ்லிம் தம்பதியினர் அந்த போலீஸ் அதிகாரியை கட்டுப்படுத்தவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

03 January 2012

தகவல் அறியும் உரிமைச் சட்டம்.

அதிரைஎக்ஸ்பிரஸ் என்றதளத்தில் சகோதரர் சேக்கனா M நிஜாம் அவர்கள்எழுதிய,தகவல் அறியும் உரிமைச்சட்டதைபற்றி ஒரு கட்டுரை சமீபத்தில்படிக்கநேர்த்தது,இது மிகவும்பயனுள்ள தகவல்.இதை அனைவரும் தெரித்துவைத்துகொள்ள வேண்டும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005-வழிகாட்டி கையேடுதமிழில்

1. "தகவல் அறியும் உரிமைச் சட்டம்" என்பது எந்த ஒரு பொதுத்துறை அதிகாரியிடமிருந்தும் தகவல் அறியும் சட்டம் 2005 இன் படி நமக்கு தேவைப்படும் தகவலைப் அரசு அலுவலங்கள் மற்றும் அரசு உதவிபெரும் அலுவலங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

2. விண்ணப்ப மனு A4 சைஸ் பேப்பரில் கைகளால் ஆங்கிலம் அல்லது தமிழில் எழுதலாம் அல்லது டைப்பிங் செய்து கொள்ளலாம், மனுவில் பத்து ரூபாய் மதிப்புள்ள கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி நம்முடைய விவரங்களை அதில் தெளிவாக கொடுக்க வேண்டும். குறிப்பாக சம்பந்தப்பட்ட துறையின் பொதுத்தகவல் அதிகாரியின் (PIO) பெயர், மனுவில் எந்த வகையான தகவல்கள் இடம் பெற வேண்டும், அதிகாரியிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் தகவல்கள் என்ன, என்ன? , தேதி, இடம், தந்தை பெயர், இருப்பிட முகவரி, கையொப்பம், இதில் இணைக்கக்கூடிய ஆவணங்களின் பட்டியல் மற்றும் கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி (இவை இரண்டும் கட்டாயமில்லை) ஆகியவைகள் இடம்பெற வேண்டும்.

3. சகோதரர்களே, மனுவில் பதியும் விவரங்கள் முழுவதும் உண்மையானதாக இருக்கட்டும். போலி விவரங்களை கொடுக்க வேண்டாம். நம்முடைய முகவரியும் உண்மையானதாக இருக்க வேண்டும்.

4. மனுக்களை நேரிலோ அல்லது ரிஜிஸ்டர் போஸ்ட் செய்தோ அனுப்பலாம். கூரியர் மூலம் மனுவை அனுப்புவதை தவிர்க்கவும். மனுக்களை அனுப்பும் முன்பு ஜெராக்ஸ் காப்பியும் அனுப்பிய பிறகு அஞ்சல் முத்துரையுடன் கூடிய ஆதார சீட்டை பாதுகாத்துக்கொள்ளவும்.

5. வெளிநாடு வாழ் சகோதரர்கள் தங்களின் மனுக்களை தாங்கள் வசிக்கக்கூடிய அந்தந்த நாட்டில் உள்ள இந்திய தூதரக அலுவலங்களில் அதற்குண்டான முத்தரை கட்டணத்தை செலுத்தி தாக்கல் செய்யலாம்.

6. நமக்கு பொது தகவல் தொடர்பு அதிகாரிடமிருந்து கிடைக்க வேண்டிய சாதாரண தகவல்கள் 30 நாட்கள் கால அவகாசதிலும், தனி மனித வாழ்க்கை சம்பந்தப்பட்ட தகவல்களாக இருப்பின் 2 நாட்கள் கால அவகாசத்திலும் கிடைக்கும். நமது மனுக்கள் நிராகரிக்கப்பட்டால் நாம் மேல்முறையீடும் செய்துகொள்ளலாம்.

7. உரிய காலத்திற்குள் நாம் கோரிய தகவல்கள் மற்றும் தகவல்களின் நகல்கள் வேண்டும் என்றால் பக்கத்திற்கு ரூ 2 வீதம் செலுத்தவேண்டும்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நமது ஊர் பொது நலன் சம்பந்தப்பட்ட என்ன என்ன கேள்விகள் சம்பந்தப்பட்ட பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடம் இருந்து, தகவல்களை கேட்டுப்பெறலாம்?

எடுத்துக்காட்டாக,

1. நமது மாவட்ட எம்.பி. அவர்களுக்கு மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் (5 கோடி ரூபாய்) இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது?

2. அதேபோல் நமது தொகுதி எம்.எல்.ஏ. அவர்களுக்கு மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் (2 கோடி ரூபாய்) இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது?

3. மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நலத்திட்டங்களான 'பசுமை வீடுகள் திட்டம்', இந்திர நினைவு குடியிருப்பு திட்டம், தன்னிறைவு திட்டம் (முந்தைய ஆட்சியில் 'நமக்கு நாமே திட்டம்'), அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நபார்டு உதவியின் கீழ் திட்டம் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை நமது சமுதாயத்தை சார்ந்த ஏழை எளியோர்கள் மற்றும் நமது ஊர் எந்த வகையில் பயன் பெறலாம். இப்பயனை பெற யாரை அணுகுவது? என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும்? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

4. மாநில அரசால் வழங்கப்படுகிற நலதிட்ட உதவிகளான உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் (தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ்இமாம்கள், அரபி ஆசிரியர்கள், மோதினார்கள், பிலால்கள், மற்றும் இதர பணியாளர்கள், தர்காக்கள், அடக்கஸ்தலங்கள், தைக்கால்கள், எத்தீம்கான இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் முஜாவர் ஆகியோர் பயன்பெற தகுதியுடையோர் ஆவார்கள்) நலவாரியம் மூலமாக எவ்வாறு உதவிகள் பெறுவது? இப்பயனை பெற யாரை அணுகுவது? என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும்? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

5. மத்திய அரசால் வழங்கப்படுகிற மானிய தொகையின் கீழ் புனித ஹஜ் பயணம் செய்ய நமது ஊரைச்சேர்ந்த ஏழை எளியோர்கள் எவ்வாறு உதவிகள் பெறுவது? இப்பயனை பெற யாரை அணுகுவது? என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும்? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

6. நமது ஊரில் மின் வினியோக டிரான்ஸ்பார்மர்களில் உள்ள மின் அளவு திறன் எவ்வளவு? இதன் மூலம் ஒவ்வொரு வீட்டிருக்கும் வினியோகிக்கிற மின் திறன் அளவு என்ன? டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் நமது ஊரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நூண்டபட்டுள்ள போஸ்ட் மரங்கள் இவைகளின் தரம் என்ன? பாதுகாப்பானவையா? குடியிருப்பு பகுதியின் மேலே மின் கம்பிகள் செல்கிறதா? இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு உண்டாகுமா?

7. நமதூரைச் சேர்ந்த நபர்கள் காவல் துறையில் கொடுக்கப்பட்ட புகாரின் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

8. நமது அரசு மருத்துவமனையின் தரம் மற்றும் சேவையை உயர்த்த யாருடைய கவனத்துக்கு கொண்டு செல்வது?

9. மேலும் நமதூரில் உள்ள குடி நீர் தொட்டிகள் எவ்வாறு சுத்தம் செய்யப்படுகிறது? மழை காலங்களில் ஏற்படுகிற தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்க அதில் குளோரின் கலக்கப்படுகிறதா?

10. நமதூரில் எத்தனை குளங்கள், வாய்க்கால்கள் உள்ளன? அதில் ஏதும் தூர்வாரப்பட்டு உள்ளதா? ஆக்கிரமிப்புகள் எதுவும் உள்ளதா?

இப்படி நீங்களும் இதே போல் என்னற்ற பல தகவல்களை கீழ் கண்ட சம்பந்தப்பட்ட மாநில, மத்திய பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடம் இருந்து கேட்டுப்பெறலாம்.

மாநில அரசு தகவல்கள் பெற: -

திரு. எஸ். இராம கிருட்டிணன், (இ. ஆ. ப, ஓய்வு)

மாநில தலைமை தகவல் ஆணையர்,

காமதேனு கூட்டுறவு பல்பொருள் அங்காடி கட்டடம், முதல் மாடி,

(வானவில் அருகில்) பழைய எண்: 273, புதிய எண்: 378, அண்ணா சாலை, (தபால் பெட்டி எண்: 6405) தேனாம்பேட்டை, சென்னை - 600 018

தொலைப்பேசி எண்: 044 - 2435 7581, 2435 7580

மின்னஞ்சல்: mailto: sic@tn.nic.in இணையத்தளம்: http://www.tnsic.gov.in/contacts.html

மத்திய அரசு தகவல்கள் பெற: -

ஸ்ரீ சத்யாநந்தா மிஸ்ரா

தலைமை தகவல் ஆணையர்

அறை No.306, இரண்டாம் தளம் ஆகஸ்ட் கிராந்தி பவன்

Bhikaji காமா பிளேஸ் புது தில்லி - 110 066.

தொலைபேசி: - 011 - 26717355

மின்னஞ்சல்: - s.mishra @ nic.in இணையத்தளம்: http://cic.gov.in/

குறிப்பு: மனுக்களை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும்
தாலுக்கா அலுவலகம் ஆகியவற்றில் உள்ள பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடமும் தாக்கல்செய்யலாம்.

சகோதரர்களே! நமது மனுக்களை நேரடியாக மாநில பொதுத்துறை தகவல் அதிகாரிகளுக்கு அனுப்புவதே சிறந்தது.

17 December 2011

தாய் தந்தையரின் முக்கியத்துவம்


“(நபியே!) உமதிறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். (17 :23).
தாய் தந்தையரின் முக்கியத்துவத்தைத் தெளிவாக விளக்கும் மிக ஆழமான வசனம்.
ஆனால் இன்று மனிதர்களில் பெரும்பாலோரும் ஏன்! ஓர் இறைவனை வணங்கும் நிலையில் முதன்மை தரத்தை உடைய மக்களில் பெரும்பான்மையினோரும் பெற்றோர்கள் விஷயத்தில் தான் தாழ்ந்து நடந்து கொள்கின்றனர். இவ்விசயம் அவர்களை சுவனத்திற்கு செல்லும் நிலையை தடுக்கும் சக்தி கொண்ட மிக முக்கியமான ஒரு அம்சம் என்று அவர்கள் அறியாததினாலே! அல்லது அறிந்தும் அசட்டையாக  இருப்பதே!
நம்மைப் போலவே அவர்களும் இளவயதுகளைக் கடந்து இன்று காலத்தின் வேகத்தால் முதுமையை அடைந்திருக்கின்றனர். அவர்களுடைய இளம் வயதில் நம்மை, அதாவது அவர்களுடைய பிள்ளைச் செல்வங்களை நன்றாக வளர்த்து நல்ல ஒரு நிலைக்கு ஆளாக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளையே கொண்டு வாழ்ந்தனர். அவர்களின் முயற்ச்சிக்கு தக்கவாரோ அல்லது கூடுதல், குறைவாகவோ இறைவன் அவர்களுக்கு அருளியதைக் கொண்டு நம்மை வளர்த்து நமது இன்றைய நிலைக்கு முக்கியமான கருப்பொருளாக இருக்கின்றனர். இதை நாம் ஒவ்வொருவரும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
இன்று பெரும்பான்மையோரின் கூற்றுக்களை ஆராய்வோமேயானால் மிகப் பெரும் ஆச்சரியமாக இருக்கும்; அதாவது:-
“எங்களுடைய பெற்றோர்கள் எங்களுக்கு எதையுமே விட்டு வைக்கவில்லை,” அதனால் தான் நாங்கள் இவ்வளவு கஷ்ட்டப்படுகிறோம்”
என்பதே அக்கூற்று இக்கூற்றுக்காரர்கள் ஒரு முக்கியமான விசயத்தை மறந்து விடுகின்றனர். அதாவது இவர்களுடைய பிள்ளைகளும் நாளைக்கு இதே கூற்றைத் தானே மொழிவார்கள்! இதன் பின்னணி என்ன என்பதைக் காண்போம்.
எந்த ஒரு மனிதனாயினும் அவனுடைய முயற்சிகள் அத்தனையும் பிரயோகித்து எப்படியாகிலும் நாம் ஒரு நல்ல நிலையை அதாவது ஒரு வசதியான வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்றே முயற்சி செய்கிறான். அப்படி முயற்சி செய்யும்பொழுது இறைவனின் நாட்டப்படி சிலர் நல்வழியில் சம்பாதித்து முன்னேறுகிறார்கள். சிலர் தீயக் காரியங்களில் முயற்சித்து அந்நிலையை அடைகிறார்கள். சிலர் எந்நிலை முயன்றும், முன்னேறாமல் எப்பவும் போல் ஒரே நிலையில் இருக்கிறார்கள்.
இறைவனின் நாட்டப்படியே அனைத்தும் நடக்கிறது என்பதை அறிகின்ற விசுவாசிகளான மனிதர்கள், மேற்சொன்ன மூன்றாவது நிலையை அடைகின்ற பெற்றோர்கள் எந்நிலையிலும் அவ்வாழ்க்கைக்கு அவர்கள் முழுப் பொறுப்பல்ல என்பதை உணர வேண்டும். இதை மேலும் உணர வேண்டுமாயின் ஒவ்வொருவரும் தத்தமது நிகழ்கால வாழ்க்கையையே உதாரணமாகக் கொள்ளலாம். அதாவது நமது முயற்சி எப்படிப்பட்டது? அதற்காக நாம் செய்கின்ற தியாகங்கள் முதலியன. இதிலிருந்து நாம் எந்த அளவு இன்றைய நிலையில் முயற்சிக்கிறோமோ! அதை போலவே அல்லது அதைவிடக் கூடுதலாகவே நம் பெற்றோர்களும் முயற்சித்து இருக்கலாம். ஆனால் இறைவனின் நாட்டப்படி அவர்களுக்கு உண்டானதை அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். இதை நாம் முற்றிலும் நன்கு ஆராய்ந்து உணர்ந்தவர்களாக பெற்றோர்களை குற்றஞ்சாட்டுவதை முழுமையாக தவிர்க்க வேண்டும். மேலும் இறைவன் நமக்கு அருளிய இவ்வாழ்வில் ஒவ்வொருவருடைய தனிப்பெரும் செயலாகவே பொருளீட்டுவதைக் கொள்ள வேண்டும் என்பதை ஆணித்தரமாக கீழ்கண்ட வசன மூலம் அறிகிறோம்.
“தொழுகை முடிவு பெற்றால், பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்; நீங்கள் சித்தியடையும் பொருட்டு அடிக்கடி அல்லாஹ்வை நினைவுகூறுங்கள்.” (62:10)
இதை நினைவுகூர்ந்தவர்களாக பெற்றோரை குறை கூறும் தீய வழக்கத்தை மாற்றி, ஒவ்வொருவரும் நல்வழியில் முயற்சி செய்து முன்னேற முயல வேண்டும்.
தாய் தந்தையரிடம் பிள்ளைகள் அன்பாக நடந்து கொள்வது, பின்னவர்களின் இரு உலக வாழ்க்கைக்கும் மிகப் பெரும் வெற்றியை பெற வழிவகுக்கின்றது. பிள்ளைகளின் மேல் வாழ்க்கைக்காக இருவருமே தங்களைக் கூடுமானவரை அர்ப்பணித்திருக்கிறார்கள். இதை உணர்த்தும் விதமாகவே இறைவன்:
“தனது தாய், தந்தை(க்கு நன்றி செய்வது) பற்றி மனிதனுக்கு நாம் நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய், துன்பத்தின் மேல் துன்பத்தை அனுபவித்து, (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள். (அவன் பிறந்த) பிறகும் இரண்டு வருடங்களுக்கப் பின்னரே அவனுக்கு பால் மறக்கடித்தாள். (ஆகவே. மனிதனே) நீ எனக்கும், உன்னுடைய தாய், தந்தைக்கும் நன்றி செலுத்தி வா, (முடிவில் நீ) என்னிடமே வந்து சேர வேண்டியதிருக்கிறது. (31:14)
இன்று பெரும்பான்மையான இளைஞர்களின் பெற்றோருடைய தொடர்பு மிக ஒரு மோசமான நிலையிலேயே அமைந்துள்ளது. இதற்கு பெற்றோர்களும் முக்கிய காரணமாக அமைகிறார்கள். காரணம், மார்க்க விசயங்களில் அவர்கள் அக்கறை காட்டாததினாலே இந்நிலை அமைகிறது. இறைக் கட்டளைகளை அறிந்து, அதன்படி நடக்க வேண்டும், மேலும் அதில் தான் வெற்றியிருக்கிறது என்று நினைத்து பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை வளர்த்து இருந்தால், இந்நிலைகளை அடைய வாய்ப்பில்லாமல் போயிருக்கும். இதைத் தவிர்த்துத் தங்களின் மனோ இச்சைகளின்படி இறைவனுடையக் கட்டளைகளை மறந்து அல்லது தங்களுடைய வசதிக்குத் தக்கபடி இறைக்கட்டளைகளை ஏற்று நடக்கும்பொழுது, அவர்கள் வளர்க்கும் பிள்ளைகளும் வாழ்க்கையில் ஒரு பற்றுதல் இல்லாமல் அதாவது மறுமையைப் பற்றிய சிந்தனை சிறிதும் இல்லாமல் ஏதோ வாழ்கிறோம் என்ற நிலைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இந்நிலைக்குத் தள்ளப்படும் பிள்ளைகள் காலப்போக்கில் தாய் தந்தையரை மதிக்காமல் அசட்டையாகவே வாழ முற்படுகிறார்கள்.
இதை தவிர்க்க வேண்டுமெனில் ஒவ்வொருவரும் இறைக்கட்டளைகளின்படி வாழ முழு முயற்சி செய்தவர்களாக தாங்களும் நல்வழியில் நடந்து தத்தமது பிள்ளைகளையும் அந்நிலையில் வளர்க்க முயற்சி செய்ய வேண்டும். அப்படியே ஏதோ காரணங்களினால் பெற்றோர்களே தவறுகள் செய்திருந்தாலும் (மனித இயல்புத்தானே!) பிள்ளைகள் அவற்றை மறந்து, அவர்களை அறவணைத்து வாழ முற்பட வேண்டும். இது இரு சாரருக்கும் பொருந்தும். தவறு செய்பவர்களிடம் அல்லது செய்தவர்களிடம் நாம் மென்மையாக எடுத்துச் சொல்லி அவர்களின் தவறுகளைக் களைய முயல வேண்டும். நமது தளராத அரவணைப்பால், காலப்போக்கில் அவர்களே தங்களின் தவறுகளை உணர்ந்து நமக்காக வேண்டி இறைவனிடம் பிரார்த்திக்கும் ஒரு நிலைக்கு ஆளாகிவிடுவார்கள்.
நாம் இவ்வுலகில் வாழும் காலமெல்லாம், பெற்றோர்களுக்கு நம்மால் இயன்றவரை உதவிகளை செய்வதை நமது தலையாயக் குறிக்கோளாக கொள்ள வேண்டும். மேலும் அவர்கள் கூறும் நல்ல ஆலோசனைகளை அது இறைக்கட்டளைக்குட்பட்டதாயின் செவியேற்ற அமுல் நடத்த முற்பட வேண்டும். இதன் தராதரத்தை அறியும் விதமாகவே இறைவன் :
தாய் தந்தைக்கு நன்மை செய்யும் விதமாக நாம் மனிதனுக்கு நல்லுபதேசம் செய்திருக்கின்றோம். (எனினும்) நீ அறியாத (எவ்வித ஆதாரமும் இல்லாத)வைகளை எனக்கு இணையாக்குபடி (மனிதனே!) அவர்கள் உன்னை நிர்ப்பந்திப்பதால், (அவ்விஷயத்தில்) நீ அவ்விருவருக்கும் வழிபடாதே! (என்னிடமே) நீங்கள் திரும்ப வேண்டிதிருக்கிறது. நீங்கள் செய்து கொண்டிருந்தவைகளைப் பற்றி அது சமயம் நான் உங்களுக்கு அறிவிப்பேன்.   (29:8)
மேலும் நபி (ஸல்) கூறுகிறார்கள்.
பெரும்பாவங்களான: அல்லாஹ்வுக்கு இணை வைத்தல், பெற்றோருக்கு இடர் செய்தல், கொலை செய்தல், பொய் சத்தியம் செய்தல் ஆகியவைகளாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். (அப்துல்லாஹ்பின் அம்ரு(ரழி) புகாரீ)
மேற்காண்பவற்றிலிருந்து பெற்றோர்களை அரவணைத்து நடப்பது, நமது இரு உலக வாழ்க்கைக்கு ஒரு முக்கியமான பங்கை வகிக்கிறது என்பதை அறிகிறோம். இதை உணர்ந்தவர்களாக, பெற்றோர்களிடம், அன்பாகவும், கனிவாகவும், மேலும் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை நம்மால் இயன்றவரை செய்து நமது இரு உலக வாழ்க்கையிலும் வெற்றி பெற்றவர்களாக வாழ சகோதர, சகோதரிகள் முன் வருவார்களாக! அல்லாஹ் உதவி செய்ய போதுமானவன்.
நன்றி--காத்தான்குடி.இன்போ