RMY BATCHA

Create your own banner at mybannermaker.com!

Showing posts with label கொரநாட்டு கருப்பூர். Show all posts
Showing posts with label கொரநாட்டு கருப்பூர். Show all posts

13 April 2017

கும்பகோணம் அருகே உள்ள திருப்புரம்பியம் என்ற கிராமம் குறித்த காணொளி

சோழ மன்னர்களின் முதன்மைநகரான நமது ஊர் ( கும்பகோணம் ) அருகே உள்ள திருப்புரம்பியம் என்ற கிராமம் குறித்த காணொளி.
 நாம் அறியாத பல சுவாரஸ்யமான வரலாற்றுக் குறிப்புகளைக்கொண்டுள்ளது.
 நமது ஊர்( கொரநாட்டு கருப்பூர் ) அருகில் உள்ள மனஞ்சேரி என்ற அழகிய கிராமத்தில் உள்ளதர்ஹாவை பற்றியவரலாறு தகவல் அறிந்தவர்கள் விரும்பினால் கமெண்ட்ஸ் பகிர்ந்து கொள்ளவும். 
இந்த போரில் கலந்துகொண்டவர்கள் அடக்கஸ்தலம்மாக இருக்க
வாய்பு உள்ளது.ஏன் என்றால் இந்த அடக்கஸ்தலதை காணும் போது
மரணம் அடைந்த பலஉடலை ஒரு இடதத்தில் அடக்கசெய்தது 
போல் உள்ளது.இந்த அடக்கஸ்தலதை கண்டவர்களுக்கு புரியும். திருப்புரம்பியம்

03 May 2012

AIADMK ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணை தலைவர் உதவியால் பல வருடங்களுக்கு பிறகு கிடைத்த எங்கள் பள்ளிஇடம்.

கிடைக்குமா கிடைக்காத என்று எதிர்பார்த்து இருந்த எங்களுக்கு, இந்த நல் உள்ளங்கள் உதவியால் எங்கள் பள்ளிஇடத்தை மீட்டு தந்த நண்பர் ஊராட்சி மன்ற தலைவர்,K பகவதி அவர்களுக்கும், மற்றும் ஊராட்சி மன்றதுணை தலைவர் MS பாரிட் அப்துல் மாலிக் அவர்களுக்கும், மற்றும் எங்கள்பள்ளி இடத்தை மீட்க உதவிய அணைத்து நண்பர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.


17 March 2012

கேரளா சென்ற வாலிபர் மாயம் குடந்தை போலீஸில் தாய் புகார்


கும்பகோணம்: வேலைக்கு செல்வதாகக் கூறி சென்ற வாலிபர் திரும்பி வராததால் கும்பகோணம் போலீஸார் விசாரிக்கின்றனர். கும்பகோணம் அருகேயுள்ள கொரநாட்டு கருப்பூர் ரைஸ்மில் தெருவைச் சேர்ந்தவர் முகம்மதுரபீக். இவரது மனைவி பைரோஜிபானு. இ வர்களது மகன் இதயதுல்லா (26). கொத்தனார் வேலை செய்யும் தொழில் செய்து வந்தார்.

கடந்தாண்டு நவம்பர் 6 ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த சிலருடன் கேரளாவிற்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். பின்னர் 10 நாட்கள் கழித்து கேரளாவிலிருந்து இதயதுல்லா அவரது அம்மாவிற்கு ஃபோன் செய்து பேசினார். அதன்பிறகு ஃபோன் செய்யவில்லை. இந்நிலையில் இதயதுல்லாவுடன் கேரளாவில் வேலைக்காகச் சென்றவர்கள் ஊருக்கு திரும்பி வந்துவிட்டனர். ஆனால், இதயதுல்லா மட்டும் வரவில்லை. அவரின் தாய் கேரளாவிற்கு சென்றவர்களிடம் என் மகன் ஏன் வரவில்லை? என கேட்டபோது அவர் எங்களுடன் ஊருக்கு திரும்பாமல் அங்கேயே இருக்கிறார் என கூறியதாக தெரிகிறது. இதனால் கவலையடைந்த பைரோஜிபானு கும்பகோணம் தாலுக்கா போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து இதயதுல்லா கேரளாவில்தான் இருக்கிறாரா? அல்லது தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.நன்றி-தினமலர் 
16 மார்ச் 2012
கும்பகோணம்: கும்பகோணம் அருகே புதிதாக கட்டப்பட்டுப்பட்டு வந்த கட்டடத்தில் இருந்து 3 நாட்டு வெடி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
கும்பகோணத்தை அடுத்த தராசுரம் எலும்பிச்சங்கா பாளையத்தில் கஸ்தூரி என்பவர் புதிதாக வீடு ஒன்று கட்டி வருகிறார். கடந்த 3 மாதங்களாக அங்கு பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இந்த நிலையில், கட்டடத்தினை பார்வையிடச் சென்ற கஸ்தூரி, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடி குண்டுகளை கண்டுபிடித்தார். இதையடுத்து திருச்சியில் இருந்து வரவழைக்கப்பட்ட வெடி குண்டு நிபுணர்கள் குழுவினர், அந்த கட்டடம் முழுவதும் சோதனை நடத்தினர். பின்னர் கட்டடத்தில் இருந்து எடுக்கப்பட்ட 3 சக்திவாய்ந்த நாட்டு வெடி குண்டுகளையும், செயலிழக்கச் செய்தனர்.
நன்றி - Thoothuonline

20 January 2012

கொரநாட்டு கருப்பூர் வாக்காளர்களின் பெயர் பட்டியல்.

 புதுபிக்கபட்ட நமதுஊர் வாக்காளர்களின் பெயர் பட்டியல்.
  இந்த சுட்டியில் உள்ளது. உங்கள்பார்வைக்கு,
 நமது ஊர்நண்பர்கள்சரிபார்த்து கொள்ளவும்.
1,முஸ்லிம்தெரு வாக்காளர் பெயர் பட்டியல் "சுட்டி"
2,பூம்புகார்சாலை வாக்காளர் பெயர் பட்டியல் "சுட்டி"
3,அம்மன்கோவில்தெரு வாக்காளர் பெயர் பட்டியல் "சுட்டி"
4,சென்னைசாலை வாக்காளர் பெயர் பட்டியல் "சுட்டி"
5,கீழதெரு - மேழதெருவாக்காளர் பெயர் பட்டியல் "சுட்டி"

நம்மதொகுதி எம்.எல்.ஏ,மின்னஞ்சல்முகவரி.

தமிழகஅரசு ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்கு தனித்தனி மின்னஞ்சல்முகவரி உருவாக்கப்பட்டு உள்ளது. உங்கள்குறைகளை நேரடியாக தெறியபடுத்த நம்மதொகுதி எம்.எல்.ஏ அவர்களின் மின்னஞ்சல்முகவரி."சுட்டி"
தகவல் அறியும் உரிமைச் சட்டம்" என்பது எந்த ஒரு பொதுத்துறைஅதிகாரியிடமிருந்தும் தகவல்அறியும்சட்டம் 2005 இன் படி நமக்கு தேவைப்படும் தகவலைப் அரசு அலுவலங்கள் மற்றும் அரசு உதவிபெரும் அலுவலங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம்வழிகாட்டி கையேடுதமிழில்"சுட்டி"
நமது குறைகளை நேரடியாக நம்மாவட்ட கலக்டரிடம் 
புகார்செய்ய"சுட்டி"
பொதுவாக வங்கியினாள் நமக்கு ஏதாவது குறையோ,பிரச்சனையோ ஏற்பட்டால்
மேலாளர்ரிடம் (எலுத்துபூர்வமாக)புகார்கூருவோம்.அங்கேயும் நமக்கு தீர்வு கிடைக்காவிட்டால்.கீழ்உள்ள
சுட்டியில் புகார் செய்வும்.நமக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புவோம்??
வங்கிக் குறைதீர்ப்பாணையத்திடம் புகார் பதிவுசெய்யும் படிவம்.
தமிழ் "சுட்டி" --ஆங்கிலம் "சுட்டி"

வங்கிக் குறைதீர்ப்பாளர்வலை தமிழ்.
அஞ்சலில்அனுப்ப.
திரு. எஸ். கணேஷ்
C/o இந்திய ரிசர்வ் வங்கி
போர்ட் க்ளேசிஸ்
சென்னை 600 001
தொ. எண் .25399170/25395964
ந.அ. (Fax) எண். 044-25395488
நமதுஊர் வங்கியின் முகவரி.
வங்கி: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
முகவரி: 5/1237-1 MADINA தெரு, KORANATTU KARUPPUR, குறியீட்டு எண்: 612501
மாநிலம்: தமிழ்நாடு
மாவட்டம்: தஞ்சாவூர்
கிளை: KORANATTU KARUPPUR
தொடர்பு: 0435 2442395
IFSC குறியீடு: IOBA0001216


05 January 2012

அரசு மதிப்பீட்டுவிலை.

கொரநாட்டு கருப்பூர் நிலத்தின் அரசு மதிப்பீட்டு விலை!

நிலத்தை வாங்கும்போது பத்திரப்பதிவு அலுவலங்களில் அந்த ஆவணம் பதிவு செய்வது உண்டு. அப்போது அந்த நிலத்தின் வழிகாட்டி மதிப்பீட்டின்படி ( GUIDELINE VALUES ) முத்திரைத்தாள் கட்டணத்தை பத்திரப்பதிவு அலுவலங்களில் அந்த நிலத்தை வாங்குபவர் செலுத்த வேண்டும்.
தமிழ் நாடு முழுவதும் நிலத்தின் தற்போதைய மதிப்பீட்டுக்கு ஏற்ப வழிகாட்டும் மதிப்பீட்டை மாற்றி அமைக்கும் பணி நடைபெற்றது . இதற்காக பத்திரப்பதிவு அதிகாரிகள் அவர்களுக்கு உரிய பகுதிகளுக்கு சென்று வழிகாட்டும் மதிப்பீட்டை.
அறிந்து புதிய பட்டியல் தயாரித்துள்ளனர் அவ்வாறு தயாரிக்கப்பட்ட பட்டியலில் கொரநாட்டு கருப்பூரில் உள்ள ஒவ்வொரு தெருவின் மதிப்பீடுகளும் பல மடங்குகளாக உயர்த்தி நிலத்தின் ஒரு சதுரஅடியின் விலை கீழ்க்கண்டவாறு நிர்ணயம் செய்துள்ளார்கள்.
Zone   : TANJORE    SRO   : Kumbakonam Joint I    Village: Koranattukarupur
 
 RevnueDistName:THANJAVUR     TalukName:Kumbakonam 
                         List All Streets 
Total No. Of Streets With The Guideline Value : 54
STREET NAME
GUIDELINE VALUE (SqFt/Acre)
GUIDELINE VALUE (SqMt/Hect.)
Category
ANGALAMMAN KOVIL STREET
30.00
325.00
Residential Area - Most Backward area
ASHOK NAGAR
40.00
440.00
Residential Area - Class I
CAUVERY NAGAR
40.00
440.00
Residential Area - Special type of Land - Class I
CAUVERY NAGAR
50.00
540.00
Industrial Area - Class II
CHETTI STREET
40.00
435.00
Residential Area - Class III
EDATHERU(YATHAVAR THERU)
40.00
435.00
Residential Area - Class III
GOLDEN CITY NAGAR
40.00
440.00
Residential Area - Class I
GOLDEN CITY NAGAR EXTENSION
40.00
440.00
Residential Area - Class II
KEELA THERU
40.00
435.00
Residential Area - Class III
KILAKU VASAL
50.00
540.00
Residential Area - Class II
KIRASANT NAGAR
60.00
650.00
Residential Area - Class I
LOTUS NAGAR
53.00
580.00
Residential Area - Class I
M.S.V.NAGAR
60.00
650.00
Residential Area - Class I
MALIK NAGAR
80.00
865.00
Residential Area - Special type of Land - Class I
MALIK NAGAR EXTENSION
80.00
865.00
Residential Area - Special type of Land - Class I
MATHINA STREET
60.00
650.00
Residential Area - Class I
MELA THERU
40.00
435.00
Residential Area - Class III
MUNUSAMY NAGAR
80.00
865.00
Residential Area
MUNUSAMY NAGAR EXTENSION
80.00
865.00
Residential Area
MUSLIM SOUTH STREET
40.00
435.00
Residential Area - Class III
NETHAJI NAGAR
80.00
865.00
Wet - Channel Irrigation Single Crop - Class I
NETHAJI NAGAR
80.00
870.00
Residential Area - Class I
NORTH STREET(A)ARISIKKAARA STREET
30.00
325.00
Residential Area - Most Backward area
O.S.J.NAGAR
60.00
650.00
Residential Area - Class I
O.S.J.NAGAREXTENSION NAGAR
60.00
650.00
Residential Area - Class I
PALLIVASAL STREET
50.00
540.00
Residential Area - Class II
PANNEER NAGAR
80.00
870.00
Residential Area - Special type of Land - Class I
PLOT AREA
50.00
540.00
Residential Area - Most Backward area
PLOT AREA MANAIPERIVU
30.00
325.00
Residential Area
PLOT AREA MANAIPERIVU
30.00
325.00
Residential Area
PLOT AREA MANAIPERIVU
40.00
435.00
Residential Area - Class III
POOMBUKAR ROAD
50.00
540.00
Residential Area - Class II
PUTHU THERU(SANTHANAL PURAM)
40.00
435.00
Residential Area - Class III
R.K. NAGAR
50.00
540.00
Residential Area - Class II
RAHMANIYA STREET
133.00
1440.00
Residential Area - Class I
RAJA COLONY
50.00
540.00
Residential Area - Class II
RENGA NAGAR
30.00
325.00
Residential Area - Most Backward area
RICE MILL STREET
30.00
325.00
Residential Area - Most Backward area
SANGAM NAGAR
53.00
580.00
Residential Area - Class I
SATHIRAM KARUPPUR CHETTI STREET
30.00
325.00
Residential Area - Most Backward area
SIVA SIVA NAGAR
80.00
870.00
Residential Area - Class I
SOUTH STREET
50.00
540.00
Residential Area - Class II
SOWMIYA NAGAR
40.00
435.00
Residential Area - Class III
SRI ISHWARYA NAGAR
133.00
1440.00
Residential Area - Class I
SRI SRI NAGAR
80.00
870.00
Residential Area - Class II
SUBASRI NAGAR
50.00
540.00
Residential Area - Class I
THANIMANAI 228/1B
80.00
870.00
Residential Area - Class I
THIRUMANJANA VEETHI
30.00
325.00
Residential Area - Most Backward area
UN NAMED NAGAR
30.00
325.00
Residential Area - Most Backward area
UN NAMED PLOT (267/1B, 267/1C, 267/2PART)
80.00
870.00
Residential Area - Class I
VANUVAR STREET
40.00
435.00
Residential Area - Class III
VASANTHAM NAGAR
80.00
865.00
Residential Area - Special type of Land - Class I
VEDATHRI NAGAR
60.00
650.00
Residential Area - Class I
YAJITH NAGAR
60.00
650.00
Residential Area - Class I

18 November 2011

கொரநாட்டு கருப்பூர் பெயர் உண்டான வரலாறு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

திருப்பாடலவனம்(கருப்பூர்)
இறைவன் : ஸ்ரீசுந்தரேசர்
இறைவி : அபிராமி
தலவிருட்சம் : பாதிரிமரம்
தீர்த்தம் : பிரம்மதீர்த்தம்
பாடலம் - பாதிரிமரம். பாதிரி மரங்கள் அடர்ந்த காடாக இருந்ததால் பாடலவனம் எனப்பெயர் பெற்றது.
சுந்திரம் - அழகு. இத்தலத்தில் உமாதேவியும், சிவபெருமானும் அழகிய கோலத்தில் வீற்றிருப்பதால் சுந்தரேசர் என்று பெயர் பெற்றார் இறைவன். இத்தலம் பழம்பெருமை கொண்டது.
தமிழ் முனிவரான அகத்தியர் இத்தலத்தில் நீராடி சுந்தரேஸ்வரரை பூசித்து பல வரங்களைப் பெற்றார் என்றும் வாக்கில்லியர் என்னும் முனிவர் சுந்தரேஸ்வரை வழிபட்டு இறைவனோடு கலந்தார் என்றும் இத்தலபெருமை கூறப்படுகிறது. குபேரனும், சுரதன் என்ற மன்னர்களும் வழிபட்டு பல்வேறு பலங்களைப் பெற்றனர் என குடந்தைப் புராணம் கூறுகிறது.
ஞான உபதேசம் பெற விரும்பிய பிரம்மன் சிவலிங்கத்தை நிறுவி இறைவனை வழிபட்டு, இறுதியில் இறைவனிடம் ஞான உபதேசம் பெற்ற இடம் இந்தத் திருப்பாடலவனம் என்னும் கொரநாட்டுக் கருப்பூர்.
இந்த ஆலயத்தில் கிழக்கு நோக்கிய சன்னிதானத்தில் மூலவர் ஸ்ரீசுந்தரேஸ்வர சுவாமியும், தெற்கு நோக்கிய சன்னிதானத்தில் அபிராமி அம்மையும் வீற்றிருக்கின்றனர்.
பெட்டிகாளியம்மன் :
இக்கோயிலில் சக்தி மிக்க காளியம்மன் உள்ளது. அதை பெட்டியில் வைத்துள்ளனர். காளி உத்தரவு கொடுக்கும் போது அதற்கு விழா எடுக்கிறார்கள். இதற்கு பெட்டிகாளியம்மன் என்று பெயர். கருப்புநிற மகாகாளியம்மன் இடுப்பு வரை மட்டுமே உள்ள திருவுருவத்தோடு ஒரு பெட்டியில் காவிரியில் மிதந்து வந்து இத்தலத்தில் எழுந்தருளினாள். குறைந்த கருப்புக் காளி ஊர் என்றழைக்கப்பட்டு பின்னர் பேச்சு வழக்கில் குறைநாட்டு கருப்பூர் என்று மருவி இறுதியில் கொரநாட்டு கருப்பூர் என்ற பெயரே நிலைத்துவிட்டது.
காளியம்மன் வரலாறு
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் காவிரியில் மிதந்து வந்த பெட்டி ஒன்று திருபாடலவனம் என்ற இவ்வூரின் காவிரிக் கரையில் ஒதுங்கியது. காவிரிப் படித்துறையில் பெட்டியைக் கண்ட மக்கள் திறந்து பார்த்த பொழுது அதில் மேல்பாதி மட்டும் உள்ள காளியின் சிலை இருக்க கண்டனர். மரத்தால் செய்யப்பட்ட பழமையான, நேர்த்தியான, அற்புதமான சிலை ஊர் மக்களும் ஆலய அர்ச்சகரும் கூடி என்ன செய்வது என திகைத்து நிற்க, அப்பொழுது அக்கூட்டத்தில் இருந்த ஒரு சிறுபெண் மேல் காளியின் அருள் வந்தது. அச்சிறு பெண் வாயிலிருந்து மலையாளமும், பிராகிருத மொழியும் கலந்த சொற்களில் மாகாளி தன்னை எப்படி எந்த வகையில் பூசிக்க வேண்டும் என்ற வழிமுறைகளைக் கூறி அந்த சிறுபெண்ணை விட்டு நீங்கினாள்.
அதன்படியே அவ்வூர் மக்களும் மகாகாளியை பெட்டியில் வைத்து பூட்டி ஊரின் தென் பகுதியில் ஒரு ஓலைக் கொட்டகையில் வைத்து பூசித்தனர். பெட்டகத்தை திறக்கும் முன் அம்மனின் அருள் வாக்கின்படி அஷ்டோத்ர அர்ச்சனை செய்து அன்னம் முதலிய பிரசாதங்களை பெட்டி முன் வைத்து, பள்ளயம் போட்டு மகாகாளிக்கு அர்ப்பணித்த பின்னரே பெட்டித் திறக்கப்படும். இவ்வாறே இன்றும் நடைமுறையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஒரு வருடம் முடிவில் மகாகாளி பெட்டகம் இருந்த ஓலைக்கொட்டகை தீப்பிடித்து எரிந்து விட்டது. ஊர்மக்களும் பக்தர்களும் காளியிருந்த பெட்டகத்தை காப்பாற்றிவிட்டனர். பின்னர் என்ன செய்வது என்று காஞ்சிபுரம் காமகோடி பீடத்தில் அன்று பட்டத்திலிருந்த பரமாச்சாரியாரைக் அணுகிக்கேட்க அவரது ஆலோசனையின் பேரில் திருபாடலவனம் ஸ்ரீசுந்தரேஸ்வரசுவாமியின் ஆலயத்தில் சுவாமி சன்னிதிக்கு அருகில் அபிராமி அம்மை சன்னிதிக்கு கிழக்குப் பகுதியில் அருள்மிகு சுந்தரமகாகாளியம்மன் பெட்டகம் வைக்கப்பட்டுள்ளது. வருடத்திற்கு ஒருமுறை உத்தராயண காலத்தில் மகாகாளி பெட்டியினுள் இருந்தபடியே பல்லக்கில் புற்ப்பட்டு திருமஞ்சனவீதி உலா வருவாள். பல்லக்கு எப்பொழுதும் ஆடிக் கொண்டும், ஓடிக்கொண்டும் வரும். உக்கிர காளியின் ஆவேச வெளிப்பாடு அதுவாகும்
நன்றி-சுட்டி
பெட்டிகாளியம்மன் எனும் ஸ்ரீ சுந்தர மாகாளி
திருக்கோவில் அமைவிடமும், சிறப்புகளும்
கும்பகோணத்தில் இருந்து அணைக்கரை செல்லும் சாலையில் சுமார் 3 கி.மீ. தொலைவில் கொரநாட்டு கருப்பூர் எனும் ஊரில் உள்ளது அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோவில். அபிராமி அம்மை சமேதராய் சுந்தரேஸ்வரர் அருளும் திருத்தலம். ஊரின் புராணப் பெயர் திருப்பாடலவனம். ஒரு காலத்தில் இங்கு பாதிரி மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் இப் பெயர் உண்டானது. 

இத் திருக்கோவிலில், தனி சந்நதியில் ஒரு பெட்டியின் உள்ளே குடிகொண்டிருக்கின்றாள் ஸ்ரீ சுந்தர மாகாளி. பெட்டி ஒன்றின் உள்லே இருப்பதால் காளி அம்மன் என்றும் வணங்கப்படுகின்றாள். சாதாரண நாட்களில் பெட்டியினை மட்டுமே வணங்க முடியும். செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ராகு கால வேலைகளில் மட்டுமே பெட்டிக்கு நைவேத்யம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து பெட்டி திறக்கப்பட்டு உள்ளே குடி கொண்டுள்ல ஸ்ரீ சுந்தர மாகாளியின் திரு உருவத்தினை தரிசன் செய்ய முடியும். அதுவும் சிறிது நேரம் மட்டுமே. பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்து முடித்த உடன் திரும்ப பெட்டி மூடப்படும். இத் திருக்கோவில் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் கோவில் என்பதைவிட பெட்டி காளி அம்மன் கோவில் என்றே எல்லோராலும் அழைக்கப்படுகின்றது.

திருத்தல பெருமைகளும் வழிபாட்டு பலன்களும்
முப்பத்து முக்கோடி தேவர்களும் வணங்கிய திருத்தலம் இது. இத் திருக்கோவிலில் உள்ள சுந்தரேஸ்வரரை வழிபட்டே குபேரன் நவநிதிகளையும் காக்கும் பெரும் பேற்றினை பெற்றான். திசை ஒன்றின் அதிபதியுமானான் என்கின்றன நமது புராணங்கள். எனவே, இத் தல அபிராமி அம்மை சமேத சுந்தரேஸ்வரரை வழிபட்டால் பொன், பொருள், நல் மனைவி, மக்கட்பேறும் கிடைக்கும் என்பது திண்ணம். இத் திருத் தலத்தில் லஷ்மி குபேர யாகம் செய்வது பெரும் சிறப்பு. சகல ஐஸ்வர்யங்கலையும் வழங்கிடும். தேவர்கள் வந்து இங்கு வழிபட்ட பொழுது அம்மை சமேதராய் முக்கண்ணன் அழகு மிளிர காட்சி தந்ததால் சுந்தரேஸ்வரர் என்ற திருநாமம் கொண்டார். அகத்திய மாமுனி வணங்கிய தலம் இது. வாலகீல்யர் என்ற முனிவர் ஒரு சித்ரா பௌர்ணமியன்று சுந்தரேஸ்வரரை வழிபட்டு அவரில் ஐக்கியமானார் என்பது ஐதீகம். சோமகேது என்ற மன்னனுக்கு புத்திரப் பேறு அளித்திட்ட திருக்கோயில் இது. இத்தல இறைவனை வணங்குபவர்கள் அனைத்து குறைகளும் நீங்கி, வளமான வாழ்வு பெற்றிடுவர் என்கின்றது திருக்குடந்தை புராணம். பெட்டி காளி அம்மனை வழிபட சகல் விதமான தோஷங்களும் நீங்கும் என்பது அனைவரும் கண்ட உண்மை. 

அபிராமி அம்மை சமேத சுந்தரேஸ்வரரை வழிபட பொன், பொருள், நல் மனைவி, மக்கட்பேறும் கிடைக்கும். இங்கு லஷ்மி குபேர யாகம் செய்வது சகல ஐஸ்வர்யங்களையும் வழங்கிடும். இத்தல இறைவனை வணங்குபவர்கள் அனைத்து குறைகளும் நீங்கி, வளமான வாழ்வு பெற்றிடுவர் என்கின்றது திருக்குடந்தை புராணம்
பெட்டிகாளியம்மன் திருத்தலம் வந்த வரலாறு
ஒரு சமயம் காவிரி நதியில் பெட்டி ஒன்று மிதந்து வந்து இன்றைய கொரநாட்டு கருப்பூரில் கரை ஒதுங்கியது. அப்பொழுது அங்கு இருந்த மக்கள் அனைவரும் ஒன்று கூடி அப் பெட்டியினை ஆற்றில் இருந்து எடுத்து கரையின் மீது வைத்தனர். அச் சமயம் அங்கிருந்த சிறுமி ஒருத்தியின் மீது அம்மன் வந்து, ' தானே இஷ்டப்பட்டு ஊரின் நன்மைக்காக இங்கு தாமாகவே வந்ததாகவும், தம்மை இங்கு வைத்து வழிபடவேண்டும்' என்றும் கட்டளை இட்டாள். அம்மனின் அருள் கண்ட மக்கள் ஆனந்தக் கண்ணீர் விட்டனர். அனைவரும் ஒன்று கூடி பெட்டியினை வைத்து வழிபட வேண்டி, குடிசை ஒன்றினை உருவாக்கி அதில் பெட்டியை வைத்து நித்தம் நித்தம் பூஜைகள் செய்து வழிபட்டு வந்தனர். ஆனால் அடிக்கடி அந்த குடிசை தீப்பிடித்தது. வேறு கூரை மாற்றினாலும் மீண்டும் தீப்பிடித்து கூரை சாம்பலாகும். என்ன செய்வது என்று தெரியாது ஊர் மக்கள் செய்வதறியாது திகைத்தனர். மனம் கலங்கினர்.

அச் சமயம், காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதியாய் இருந்த சங்கராச்சார்யார் கும்பகோணத்தில் உள்ள சங்கர மடத்திற்கு வருகை புரிந்திருந்தார். இதனை கேள்வியுற்ற ஊர் மக்கள் ஒன்று குடி, காஞ்சி மகானிடம் சென்று தங்கள் குறைகளை கூறினர். இதனைக் கேட்ட காஞ்சி மகான் ஊர் மக்களுடன் கருப்பூர் வந்தார். பெட்டியினை திறந்து பார்த்தார். இடுப்பு வரையான உருவம் கொண்டு எட்டு கரங்களுடனான காளியின் திருவுருவம் கண்டார். மெய் சிலிர்த்தார். அம்மனை வணங்கினார். பின்னர் ஊர் மக்களிடம் " காளி மிக உக்கிரமாக இருக்கின்றாள், இவளை இந்த குடிசையில் வைத்து வணங்குவது தவறு. எனவேதான் குடிசைகள் தீப்பிடிக்கின்றன. இவளது உக்கிரம் தணிக்க, பெட்டியுடன் அம்மனை எடுத்து சென்று சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் வைத்து வணங்குங்கள். ஊர் செழிக்கும் " என நல்லாசி கூறினார். ஊர் மக்களும் அவ்வாறே காளியினை பெட்டியுடன் சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் வைத்து ஸ்ரீ சுந்தர மாகாளி என்ற திருநாமத்துடன் வணங்கி வருகின்றனர்.

பெட்டி காளி அம்மனை வழிபட சகல வித தோஷங்களும் நீங்கும். அஷ்ட நாக கன்னியரை, பெட்டிகாளிக்கு உகந்த, செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமை ராகு கால வேளைகளில் பாலாபிஷேகம் செய்து வழிபட்டு, பின்னர் பெட்டி காளிக்கு நெய் தீபம் ஏற்றி வணங்கினால் நாக தோஷம் உள்ளிட்ட சகல தோஷங்களும் தீர்கின்றன.
இத் திருத்தலம் பல பெருமைகளை கொண்டது என்கிறது தல புராணம். பிரம்ம தேவர் இங்கு சிவ லிங்கம் ஒன்றினை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகவும், குபேரன் இங்குள்ள திருத்தல புஷ்கரணியில் திருநீராடி, கடும் தவம் செய்து, அம்மையப்பனாய் சிவ தரிசனம் கண்டதாகவும் கூறுகின்றது தல புராணம். உட் சுற்று பிரகாரத்தில் குரு பகவானுக்கு நேர் எதிரில் தனி சந்நதியில் வீற்றருளும் அஷ்ட நாக கன்னியரை, பெட்டிகாளிக்கு உகந்த நேரமான செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமை ராகு கால வேளைகளில் பாலாபிஷேகம் செய்து வழிபட்டு, பின்னர் பெட்டி காளிக்கு நெய் தீபம் ஏற்றி வணங்கினால் நாக தோஷம் உள்ளிட்ட சகல தோஷங்களும் தீர்கின்றன. குபேரன் சிவபெருமானை வழிபட்டு நவநிதிகளையும் நிர்வகிக்கும் பொறுப்பினை பெற்றதால், இங்கு லஷ்மி குபேர பூஜைகள் செய்வது சிறப்பு. தீபாவளிக்கு மறுநாள் லஷ்மி பூஜைக்கு உகந்த நாளாகும். இதனை கேதார கௌரி நோன்பு என்பர். அன்றைய தினம், இத் திருத்தலத்தில் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் செய்து சிவனையும், அம்பளையும், பெட்டி காளியையும் வழிபட்டால் சகல விதமான செல்வங்களும் வந்து சேர்ந்திடும் என்பது நிச்சயம்.கும்பகோணம் சுற்றி உள்ள நவக்கிரக கோவில் பற்றிதேறிந்துகொள்ள.
சுட்டியை காணவும்
நன்றி-சுட்டி

07 November 2011

இரண்டு பெண்களிடம்15 பவுன் நகை பறிப்பு

கும்பகோணம்: கும்பகோணம் டாக்டர் மூர்த்தி ரோட்டைச் சேர்ந்தவர் சிவநேசன் மனைவி காந்திமதி (56). இவர் நேற்றுமுன்தினம் அதிகாலை 5.45 மணிக்கு துர்க்காதேவி என்ற பெண்ணுடன் வாக்கிங் சென்றார். அவர் ரோட்டில் நடந்து சென்றபோது டூவீலரில் வந்த இருவர் கத்தியை காட்டி மிரட்டி காந்திமதி கழுத்தில் இருந்த ஐந்து பவுன் பட்டை தாலி செயினை பறித்துக் கொண்டு தலைமறைவானார்கள்.கும்பகோணம் கிழக்கு போலீஸார் விசாரிக்கின்றனர்.

கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூர் தெற்கு வீதியைச் சேர்ந்தவர் செல்லப்பன் மனைவி நாகரெத்தினம் (49). மின்வாரியத்தில் கணக்குப்பிரிவில் கண்காணிப்பாளராக பணிபுரிகிறார். நேற்றுமுன்தினம் காலை நாகரெத்தினம், அவரது தோழி ஜமீலாபீவியும் கொரநாட்டு கருப்பூரில் இருந்து சென்னை ரோட்டில் வாக்கிங் சென்றார். அவர்கள் கொரநாட்டு கருப்பூர் நத்தம் பிரிவு சாலை அருகே நடந்து வந்தபோது இரண்டு டூவீலரில் ஹெல்மெட் அணிந்து வந்த மூன்று பேர் கத்தியை காட்டி நாகரெத்தினம் அணிந்திருந்த 10 பவுன் நகையை அறுத்துச் சென்றனர்.
பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2010,03:30 IST
நன்றி தினமலர்