RMY BATCHA

Create your own banner at mybannermaker.com!

Showing posts with label முஸ்லிம். Show all posts
Showing posts with label முஸ்லிம். Show all posts

16 December 2016

மனிதநேயம்

மனிதனிடத்தில் அவசியம் இருக்கவேண்டிய பண்புகளில் மிக முக்கியமானப் பண்பு மனிதநேயம். மனிதநேயம் என்றால் மனிதன் மற்ற மனிதர்களை ஆடுமாடுகளைப் போன்று எண்ணாமல் மனிதர்களாக நடத்துவதாகும். தனக்கு விரும்பும் நன்மைகளை பிறருக்கு விரும்புவதும் தான் விரும்பாததை பிறருக்கும் விரும்பாமல் இருப்பதுமாகும். இப்பண்பு இல்லாவிட்டால் மனிதன் மிருகத்தை விட மோசமான நிலையை அடைவதை அன்றாட வாழ்வில் அதிகம் அதிகமாக கண்டுவருகிறோம். இறைவன் மனிதனுக்கு பயன்படக்கூடிய உறுப்புகளை ஏற்படுத்தி வெறும் உடலாக மட்டும் அவனைப் படைக்கவில்லை. உலகம் இயங்க வேண்டும் என்பதற்காக உடலுடன் பல நல்ல குணங்களையும் தன்மைகளையும் சேர்த்தே மனிதனை உருவாக்கியுள்ளான்.

:நன்மையும், தீமையும் சமமாகாது. நல்லதைக் கொண்டே (பகைமையை) தடுப்பீராக! எவருக்கும், உமக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகி விடுவார். அல்குர்ஆன் (41 : 34)



25 April 2012

சாதி வாரியாக கணக்கெடுப்பில் முஸ்லிம்கள் 'இஸ்லாம்' என்று குறிப்பிடவும்.



தமிழகம் முழுவதும் சமூக பொருளாதார மற்றும் சாதி வாரி கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது இதற்கென நியமிக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பாளர் மற்றும் புள்ளி விவர பதிவாளர் ஆகிய 2 பேரும் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

கணக்கெடுப்பின் போது குடும்ப தலைவர், தொழில், ஜாதி, மதம், வீடு, வீடுகளில் உள்ள வசதிகள் உள்ளிட்ட 20 வகையான கேள்விகளை வீட்டின் உரிமையாளரிடம் கணக்கெடுப்பாளர் கேட்பார். அந்த கேள்விகளுக்கான பதிலை அருகில் அமர்ந்து இருக்கும் புள்ளி விவர பதிவாளர் தன்னிடம் உள்ள மினி லேப்டாப்பில் பதிவு செய்து கொள்வார்.
தற்போது தமிழகம் முழுவதும் நடைபெற்றுவரும் சாதிவாரி கணக்கெடுப்பில் முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் பெயர்களை சேர்க்க வேண்டும். முஸ்லிம்களில் சாதிகள் இல்லை. ராவுத்தர், தக்கினி லப்பை, மரைக்காயர் என்பது எல்லாம் சாதிகள் இல்லை. எனவே, முஸ்லிம்கள் அனைவரும் 'இஸ்லாம்' என்ற மதத்தை மட்டும் குறிப்பிட வேண்டும்.
வெளிநாடுகளில் வேலை செய்கின்ற தங்கள் உறவினர் பெயர்களையும் தெரிவிக்க வேண்டும்.

இதற்காக, அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் நிர்வாகிகள், உதவிசெய்வது நல்லது.
முஸ்லிம்களில் சாதிகள் இல்லை. ராவுத்தர், தக்கினி லப்பை, மரைக்காயர் என்பது எல்லாம் சாதிகள் இல்லை. எனவே, முஸ்லிம்கள் அனைவரும் `இஸ்லாம் 'என்ற மதத்தை மட்டும் குறிப்பிடவும். கணக்கெடுப்பில் நம் பெயர்களை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான், நம் உரிமைகளைப் பெற முடியும்.
வெளிநாடுகளில் வேலை செய்கின்ற நமது ஊர் நண்பர்கள் இந்தசெய்தியை
தங்கள் வீடுகளுக்கு தெரிவிக்கவும்
சாதி வாரியாக கணக்கெடுப்பில் முஸ்லிம்கள் 'இஸ்லாம்' என்று
குறிப்பிடவும்.

13 April 2012

தாய் தந்தையரின் முக்கியத்தும்.


(நபியே!) உமதிறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். (17 :23).
தாய் தந்தையரின் முக்கியத்துவத்தைத் தெளிவாக விளக்கும் மிக ஆழமான வசனம்.
ஆனால் இன்று மனிதர்களில் பெரும்பாலோரும் ஏன்! ஓர் இறைவனை வணங்கும் நிலையில் முதன்மை தரத்தை உடைய மக்களில் பெரும்பான்மையினோரும் பெற்றோர்கள் விஷயத்தில் தான் தாழ்ந்து நடந்து கொள்கின்றனர். இவ்விசயம் அவர்களை சுவனத்திற்கு செல்லும் நிலையை தடுக்கும் சக்தி கொண்ட மிக முக்கியமான ஒரு அம்சம் என்று அவர்கள் அறியாததினாலே! அல்லது அறிந்தும் அசட்டையாக  இருப்பதே!
நம்மைப் போலவே அவர்களும் இளவயதுகளைக் கடந்து இன்று காலத்தின் வேகத்தால் முதுமையை அடைந்திருக்கின்றனர். அவர்களுடைய இளம் வயதில் நம்மை, அதாவது அவர்களுடைய பிள்ளைச் செல்வங்களை நன்றாக வளர்த்து நல்ல ஒரு நிலைக்கு ஆளாக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளையே கொண்டு வாழ்ந்தனர். அவர்களின் முயற்ச்சிக்கு தக்கவாரோ அல்லது கூடுதல், குறைவாகவோ இறைவன் அவர்களுக்கு அருளியதைக் கொண்டு நம்மை வளர்த்து நமது இன்றைய நிலைக்கு முக்கியமான கருப்பொருளாக இருக்கின்றனர். இதை நாம் ஒவ்வொருவரும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
இன்று பெரும்பான்மையோரின் கூற்றுக்களை ஆராய்வோமேயானால் மிகப் பெரும் ஆச்சரியமாக இருக்கும்; அதாவது:-
“எங்களுடைய பெற்றோர்கள் எங்களுக்கு எதையுமே விட்டு வைக்கவில்லை,” அதனால் தான் நாங்கள் இவ்வளவு கஷ்ட்டப்படுகிறோம்”
என்பதே அக்கூற்று இக்கூற்றுக்காரர்கள் ஒரு முக்கியமான விசயத்தை மறந்து விடுகின்றனர். அதாவது இவர்களுடைய பிள்ளைகளும் நாளைக்கு இதே கூற்றைத் தானே மொழிவார்கள்! இதன் பின்னணி என்ன என்பதைக் காண்போம்.
எந்த ஒரு மனிதனாயினும் அவனுடைய முயற்சிகள் அத்தனையும் பிரயோகித்து எப்படியாகிலும் நாம் ஒரு நல்ல நிலையை அதாவது ஒரு வசதியான வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்றே முயற்சி செய்கிறான். அப்படி முயற்சி செய்யும்பொழுது இறைவனின் நாட்டப்படி சிலர் நல்வழியில் சம்பாதித்து முன்னேறுகிறார்கள். சிலர் தீயக் காரியங்களில் முயற்சித்து அந்நிலையை அடைகிறார்கள். சிலர் எந்நிலை முயன்றும், முன்னேறாமல் எப்பவும் போல் ஒரே நிலையில் இருக்கிறார்கள்.
இறைவனின் நாட்டப்படியே அனைத்தும் நடக்கிறது என்பதை அறிகின்ற விசுவாசிகளான மனிதர்கள், மேற்சொன்ன மூன்றாவது நிலையை அடைகின்ற பெற்றோர்கள் எந்நிலையிலும் அவ்வாழ்க்கைக்கு அவர்கள் முழுப் பொறுப்பல்ல என்பதை உணர வேண்டும். இதை மேலும் உணர வேண்டுமாயின் ஒவ்வொருவரும் தத்தமது நிகழ்கால வாழ்க்கையையே உதாரணமாகக் கொள்ளலாம். அதாவது நமது முயற்சி எப்படிப்பட்டது? அதற்காக நாம் செய்கின்ற தியாகங்கள் முதலியன. இதிலிருந்து நாம் எந்த அளவு இன்றைய நிலையில் முயற்சிக்கிறோமோ! அதை போலவே அல்லது அதைவிடக் கூடுதலாகவே நம் பெற்றோர்களும் முயற்சித்து இருக்கலாம். ஆனால் இறைவனின் நாட்டப்படி அவர்களுக்கு உண்டானதை அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். இதை நாம் முற்றிலும் நன்கு ஆராய்ந்து உணர்ந்தவர்களாக பெற்றோர்களை குற்றஞ்சாட்டுவதை முழுமையாக தவிர்க்க வேண்டும். மேலும் இறைவன் நமக்கு அருளிய இவ்வாழ்வில் ஒவ்வொருவருடைய தனிப்பெரும் செயலாகவே பொருளீட்டுவதைக் கொள்ள வேண்டும் என்பதை ஆணித்தரமாக கீழ்கண்ட வசன மூலம் அறிகிறோம்.
“தொழுகை முடிவு பெற்றால், பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்; நீங்கள் சித்தியடையும் பொருட்டு அடிக்கடி அல்லாஹ்வை நினைவுகூறுங்கள்.” (62:10)
இதை நினைவுகூர்ந்தவர்களாக பெற்றோரை குறை கூறும் தீய வழக்கத்தை மாற்றி, ஒவ்வொருவரும் நல்வழியில் முயற்சி செய்து முன்னேற முயல வேண்டும்.
தாய் தந்தையரிடம் பிள்ளைகள் அன்பாக நடந்து கொள்வது, பின்னவர்களின் இரு உலக வாழ்க்கைக்கும் மிகப் பெரும் வெற்றியை பெற வழிவகுக்கின்றது. பிள்ளைகளின் மேல் வாழ்க்கைக்காக இருவருமே தங்களைக் கூடுமானவரை அர்ப்பணித்திருக்கிறார்கள். இதை உணர்த்தும் விதமாகவே இறைவன்:
“தனது தாய், தந்தை(க்கு நன்றி செய்வது) பற்றி மனிதனுக்கு நாம் நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய், துன்பத்தின் மேல் துன்பத்தை அனுபவித்து, (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள். (அவன் பிறந்த) பிறகும் இரண்டு வருடங்களுக்கப் பின்னரே அவனுக்கு பால் மறக்கடித்தாள். (ஆகவே. மனிதனே) நீ எனக்கும், உன்னுடைய தாய், தந்தைக்கும் நன்றி செலுத்தி வா, (முடிவில் நீ) என்னிடமே வந்து சேர வேண்டியதிருக்கிறது. (31:14)
இன்று பெரும்பான்மையான இளைஞர்களின் பெற்றோருடைய தொடர்பு மிக ஒரு மோசமான நிலையிலேயே அமைந்துள்ளது. இதற்கு பெற்றோர்களும் முக்கிய காரணமாக அமைகிறார்கள். காரணம், மார்க்க விசயங்களில் அவர்கள் அக்கறை காட்டாததினாலே இந்நிலை அமைகிறது. இறைக் கட்டளைகளை அறிந்து, அதன்படி நடக்க வேண்டும், மேலும் அதில் தான் வெற்றியிருக்கிறது என்று நினைத்து பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை வளர்த்து இருந்தால், இந்நிலைகளை அடைய வாய்ப்பில்லாமல் போயிருக்கும். இதைத் தவிர்த்துத் தங்களின் மனோ இச்சைகளின்படி இறைவனுடையக் கட்டளைகளை மறந்து அல்லது தங்களுடைய வசதிக்குத் தக்கபடி இறைக்கட்டளைகளை ஏற்று நடக்கும்பொழுது, அவர்கள் வளர்க்கும் பிள்ளைகளும் வாழ்க்கையில் ஒரு பற்றுதல் இல்லாமல் அதாவது மறுமையைப் பற்றிய சிந்தனை சிறிதும் இல்லாமல் ஏதோ வாழ்கிறோம் என்ற நிலைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இந்நிலைக்குத் தள்ளப்படும் பிள்ளைகள் காலப்போக்கில் தாய் தந்தையரை மதிக்காமல் அசட்டையாகவே வாழ முற்படுகிறார்கள்.
இதை தவிர்க்க வேண்டுமெனில் ஒவ்வொருவரும் இறைக்கட்டளைகளின்படி வாழ முழு முயற்சி செய்தவர்களாக தாங்களும் நல்வழியில் நடந்து தத்தமது பிள்ளைகளையும் அந்நிலையில் வளர்க்க முயற்சி செய்ய வேண்டும். அப்படியே ஏதோ காரணங்களினால் பெற்றோர்களே தவறுகள் செய்திருந்தாலும் (மனித இயல்புத்தானே!) பிள்ளைகள் அவற்றை மறந்து, அவர்களை அறவணைத்து வாழ முற்பட வேண்டும். இது இரு சாரருக்கும் பொருந்தும். தவறு செய்பவர்களிடம் அல்லது செய்தவர்களிடம் நாம் மென்மையாக எடுத்துச் சொல்லி அவர்களின் தவறுகளைக் களைய முயல வேண்டும். நமது தளராத அரவணைப்பால், காலப்போக்கில் அவர்களே தங்களின் தவறுகளை உணர்ந்து நமக்காக வேண்டி இறைவனிடம் பிரார்த்திக்கும் ஒரு நிலைக்கு ஆளாகிவிடுவார்கள்.
நாம் இவ்வுலகில் வாழும் காலமெல்லாம், பெற்றோர்களுக்கு நம்மால் இயன்றவரை உதவிகளை செய்வதை நமது தலையாயக் குறிக்கோளாக கொள்ள வேண்டும். மேலும் அவர்கள் கூறும் நல்ல ஆலோசனைகளை அது இறைக்கட்டளைக்குட்பட்டதாயின் செவியேற்ற அமுல் நடத்த முற்பட வேண்டும். இதன் தராதரத்தை அறியும் விதமாகவே இறைவன் :
தாய் தந்தைக்கு நன்மை செய்யும் விதமாக நாம் மனிதனுக்கு நல்லுபதேசம் செய்திருக்கின்றோம். (எனினும்) நீ அறியாத (எவ்வித ஆதாரமும் இல்லாத)வைகளை எனக்கு இணையாக்குபடி (மனிதனே!) அவர்கள் உன்னை நிர்ப்பந்திப்பதால், (அவ்விஷயத்தில்) நீ அவ்விருவருக்கும் வழிபடாதே! (என்னிடமே) நீங்கள் திரும்ப வேண்டிதிருக்கிறது. நீங்கள் செய்து கொண்டிருந்தவைகளைப் பற்றி அது சமயம் நான் உங்களுக்கு அறிவிப்பேன்.   (29:8)
மேலும் நபி (ஸல்) கூறுகிறார்கள்.
பெரும்பாவங்களான: அல்லாஹ்வுக்கு இணை வைத்தல், பெற்றோருக்கு இடர் செய்தல், கொலை செய்தல், பொய் சத்தியம் செய்தல் ஆகியவைகளாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். (அப்துல்லாஹ்பின் அம்ரு(ரழி) புகாரீ)
மேற்காண்பவற்றிலிருந்து பெற்றோர்களை அரவணைத்து நடப்பது, நமது இரு உலக வாழ்க்கைக்கு ஒரு முக்கியமான பங்கை வகிக்கிறது என்பதை அறிகிறோம். இதை உணர்ந்தவர்களாக, பெற்றோர்களிடம், அன்பாகவும், கனிவாகவும், மேலும் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை நம்மால் இயன்றவரை செய்து நமது இரு உலக வாழ்க்கையிலும் வெற்றி பெற்றவர்களாக வாழ சகோதர, சகோதரிகள் முன் வருவார்களாக! அல்லாஹ் உதவி செய்ய போதுமானவன்.
நன்றி--காத்தான்குடி.இன்போ

15 February 2012

நீதிமான்களே தயவுசெய்து இந்தவீடியோவை பாருங்கள்,சுட்டி
இந்த முஸ்லிம்சமுதாயதின் நிலம்மையை.

04 February 2012

இலங்கை முஸ்லிம்.

கண்களில்கண்ணீரை தாங்கிநிற்கும் நம் இனசகோதர சகோதரிகள் .
யாஅல்லா இவர்கள் இலந்ததை இவர்கலுக்கு தருவாயாக..
இவர்களிடம் இருப்பதில் பரக்கத்தை அதிகம் ஆக்குவாயாக ...
இவர்கள் வாழ்க்கையை மேன்மையாக்குவாயாக ....
இவர்கள் காத்த பொறுமைக்கு இவர்களை இன்மையிலும்
மறுமையிலும் மேன்மை படுத்துவாயாக ....

11 January 2012

பெண்களின் புதிய சுதந்திரக் குறியீடு 'நிகாப்' தான். நீச்சலுடை அல்ல. - முன்னாள் அமெரிக்க நடிகை ஸாரா போக்கர்



[ நான் 'நிகாப்' அணிந்து கொண்ட செய்தி வெளியானதுதான் தாமதம் அமெரிக்காவில் ஏதோ பூகம்பமே வெடித்துவிட்டதுபோல் அங்குள்ள அரசியல்வாதிகளும், வாடிகனைச்சேர்ந்த மதகுருமார்களுடன், (போலியான) பெண் விடுதலைக்காக போராடக் கூடியவர்களும், உலக மனித உரிமைக்கழகமும் குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்தனர்.
உலகெங்கிலுமுள்ள எல்லா ஊடகங்களிலும், விருப்பத்துடனோ, விருப்பமின்றியோ, 'ஸ்டைல்' என்ற பெயரில் மிகமிகக் குறைவாக, ஏறத்தாழ உடையே இல்லை என்று சொல்லுமளவுக்கு அணிவதற்கு பெண்கள் வற்புறுத்தப்படுகிறார்கள். ஹிஜாபை நான் அணிந்து கொண்டதால் எனக்குக் கிடைத்ததுபோன்று, ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் நிம்மதி, மகிழ்ச்சி ஆகியவைப் பற்றி அறிந்து கொள்ள பெண்களுக்கு உரிமை இருக்கிறது. 
எனக்குத்தெரிந்து ஏராளமான மேற்கத்திய பெண்கள் 'நிகாப்' அணிகிறார்கள். திருமணம் முடிக்காதவர்கள் கூட அதில் அடக்கம். ஒரு விஷயம் மிகத்தெளிவானது, 'நிகாப்' அணியும் பெண்ணுக்கு குடும்பத்தார்களின், சுற்றத்தார்களின், சமூகத்தின் ஆதரவு இருக்கிறதோ இல்லையோ அதைப்பற்றி அவர்கள் கவலைப்படமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் மனதில் ''அந்த உடை அல்லாஹ்வுக்கு பிடித்தமானது'' என்கின்ற நம்பிக்கை அழுத்தமாக பதிந்துவிட்டது. பெண்களின் புதிய சுதந்திரக் குறியீடு 'நிகாப்' தான். நீச்சலுடை அல்ல. - முன்னாள் அமெரிக்க நடிகை ஸாரா போக்கர் 
அமெரிக்காவின் இதயப்பகுதியில் பிறந்த அமெரிக்கப்பெண் நான். மற்றவர்களைப்போல் நானும் அந்தப் பெரிய நகரத்தின் கவர்ச்சிகளுக்கு ஆட்பட்டவளாகத் தான் வளர்ந்தேன். கவர்ச்சிக்கேந்திரமான ஃபுளோரிடாவுக்கு, தெற்கு மியாமி கடர்கரையின் நாகரீக வாழ்வைத்தேடி ஓடினேன்.
ஒரு சாதாரண மேற்கத்திய பெண் எப்படி இருப்பாளோ அப்படியேதான் நானும் இருந்தேன்; ஆம்! என் அழகின்மீது அதிக ஈடுபாடு கொண்டவளாக இருந்தேன். நான் வளர வளர, நாகரீகத்துக்கு அடிமையாகி விட்டேன் என்பதை நன்றாகவே புரிந்து கொண்டேன். எனது அழகான தோற்றமே என்னை பிணைக்கைதியாக்கி விட்டதை உணர்ந்தேன்.
நாகரீக வாழ்வை மேற்கொண்டால் வாழ்க்கையின் தேவைகளுக்கான பொருளாதாரத்துக்கு என்ன செய்வது? இரண்டுக்கும் இடைவெளி அதிகமானது. மதுபானங்கள் பரிமாறப்படும் கேளிக்கை பார்ட்டியை விட்டு விலகி தியானம், சமூக சேவை போன்றவற்றில் கவனத்தை திருப்பினேன். ஆனால் இவைகளால் பெரிய பலன் ஏதும் கிட்டவில்லை. அவ்வப்போது போட்டுக்கொள்ளும் வலி மாத்திரைகள் தற்காலிக நிவாரணத்தைத்தானே கொடுக்கும். அதற்கு மேல் எந்த பலனையும் கொடுக்காது அல்லாவா? என்னுடைய மன வலிக்கு அழுத்தமான தீர்வுதான் என்ன?
செப்டம்பர் 11, 2001. அப்பொழுதுதான் இஸ்லாத்தைப்பற்றி, இஸ்லாமிய கலச்சாரத்தைப்பற்றி, அதன் மதிப்பைப்பற்றி கேள்விப்படுகிறேன். அதுவரை இஸ்லாம் என்றாலே பெண்களை ''கூடாரத்துக்குள்'' அடைத்து வைத்து கொடுமைப்படுத்தும் மதம், மனைவியாக வருபவளை அடித்து உதைக்கும் மதம், பயங்கரவாத மதமாகத்தான் அறிந்து வைத்திருந்தேன்.
அப்பொழுதுதான் ஒருநாள் திருக்குரானை காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஒரே மாதிரியான மேற்கத்திய கருத்துக்களுக்கு மாற்றமான அதன் நடை என்னை மிகவும் கவர்ந்தது. இருப்பு, வாழ்க்கை, படைப்பு, படைத்தவனுக்கும் படைப்புகளுக்கும் உள்ள தொடர்பு ஆகியவற்றைப் பற்றிய விளக்கங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. இதயத்தோடு ஒன்றிப்போகும் அதன் வார்ததைகளை விளக்க எவருமே தேவையில்லை எனும் அளவுக்கு என் ஆன்மாவோடு (அதன் வார்த்தைகள்) ஒன்றிப்போனது என்றுதான் சொல்வேன். இறுதியாக
உண்மை எது என்பதை விளங்கிக்கொண்டேன்.
கடைவீதிக்குச்சென்று நீளமான அழகான 'கவுன்' ஒன்றை வாங்கி வந்தேன். முஸ்லீம் பெண்மணிகள் தலையை மறைக்க அணியும் துணியையும் கட்டிக்கொண்டு நான் தினசரி நடந்து செல்லும் வீதிகளில் நடக்க ஆரம்பித்தேன். அதே வீதியில்தான் நேற்றுவரை கவர்ச்சிகரமான குட்டையான (ஷார்ட்ஸ்) மற்றும் நீச்சலுடைகளுடன் நடந்து சென்றேன். வீதியில் அதே பழைய முகங்கள், அதே பழைய கடைகளைத்தான் பார்க்கிறேன். ஆனால் மிகப்பெரிய வேறுபாட்டை என் உள்ளம் காண்கிறது. ஆம் சுதந்திரப்பெண்மணியாக இப்போது என்னை நான் உணர்கிறேன். மற்றவர்கள் என் கவர்ச்சியான உடலமைப்பை ஆசையோடு நோக்கும் அந்த பார்வையிலிருந்து தப்பித்து நான் விடுதலை அடைந்து விட்டது போல், என்னை சுற்றியிருந்த விலங்குகள் அறுந்து விழுவது போல் உணர்ந்தேன்.
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் கவர்ச்சியான என் உடலமைப்பை வேட்டையாடும் மனிதர்களிடமிருந்து எனக்கு முழு விடுதலை கிடைத்துவிட்டது என்று உள்ளம் குதூகளித்தது. அந்த நேரத்தில் என் மனம் அடைந்த நிம்மதியை எப்படி வர்ணிப்பது என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. 
அதுமட்டுமின்றி எனது தோள்களில் இருந்து 'பெரிய சுமை' கீழிறக்கி வைக்கப்பட்டது போல் உணர்ந்தேன். முன்போல நான் ஷாப்பிங் செய்வதிலும், ஒப்பனை செய்து கொள்வதிலும், கூந்தலைச் சரி செய்து கொள்வதிலும் எனது நேரத்தையெல்லாம் வீணடிப்பது நின்றுபோனது. நான் முழு சுதந்திரம் அடைந்துவிட்டதாக என்று உணர்ந்தேன்.''பெண்களை அவமதிக்கும் மதம்'' என்று சிலரால் வர்ணிக்கப்படுகின்ற இஸ்லாத்தை உளப்பூர்வமாக முழு மனதோடு ஏற்றுக்கொண்டேன். அவர்கள் சொல்லும் காரணமே, இஸ்லாத்தை எனக்கு இன்னும் நெறுக்கமாக்கியது. முஸ்லீமான ஒருவரை நான் திருமணமும் செய்து கொண்டேன். நான் ஹிஜாபை (ஹிஜப்) அணிந்து கொண்டாலும் நிகாபை (ணிஃஅப்) அணிந்து கொள்ள வேண்டும் என்பதிலேயே மிகவும் ஆர்வமாக இருந்தேன். 
எனது முஸ்லீம் கணவரிடம் எனது எண்ணத்தை வெளிப்படுத்தியபோது 'ஹிஜாப்' அணிந்து கொள்வதுதான் பெண்களுக்கு கடமையே தவிர 'நிகாப்' அல்ல, என்றார். (ஹிஜாப் என்பது பெண்கள் முகம் மற்றும் கை கால்கள் தவிர உடம்பின் மற்ற பகுதிகளை மறைப்பது, 'நிகாப்' என்பது முகத்தையும் மறைப்பது கண்களைத்தவிர)
ஒன்றரை ஆண்டுகளுக்குப்பிறகு என் கணவரிடம் மறுபடியும் எனது 'நிகாப்' இன் மீது உள்ள ஆசையை தெரிவித்தேன். இம்முறை நான் சொன்ன காரணத்தை அவரால் மட்டுமல்ல வேறு எவராலும் தட்ட முடியாது. ஆம்! என் பிரியமுள்ள கணவரிடம் சொன்னேன், "நான் 'நிகாப்' அணிவது அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும், அத்துடன் அதிக அடக்கமாக இருப்பதனால் என் மன அமைதியையும் அது அதிகப்படுத்தும் என்று நம்புகின்றேன்'' என்றேன்.
இம்முறை என் இனிய கணவர் என் கருத்துக்கு மறுப்பேதும் சொல்லாமல் உடனே ஏற்றுக் கொண்டார். அதுமட்டுமின்றி என்னை உடனே கடை வீதிக்கு அழைத்துச்சென்று அதனை வாங்கியும் கொடுத்து விட்டார். அல்ஹம்துலில்லாஹ்.
நான் 'நிகாப்' அணிந்து கொண்ட செய்தி வெளியானதுதான் தாமதம் அமெரிக்காவில் ஏதோ பூகம்பமே வெடித்துவிட்டதுபோல் அங்குள்ள அரசியல்வாதிகளும், வாடிகனைச்சேர்ந்த மதகுருமார்களுடன், (போலியான) பெண் விடுதலைக்காக போராடக் கூடியவர்களும், உலக மனித உரிமைக்கழகமும் குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்தனர். அந்த ஒப்பாரியுடன் எகிப்து நாட்டு (!!!) அதிகாரிகளும் சேர்ந்து கொண்டு 'நிகாப்'' அணிவது பிற்போக்குத்தனம் என்று புலம்பித்தீர்த்தனர்.
பெண்களின் உரிமைக்காக போராடுவதில் நானும் சளைத்தவள் அல்ல. ஆனால் தற்போது ஒரு முஸ்லீம் பெண்மணியாக இருந்து பெண்களுக்கு கிடைக்க வேண்டிய உண்மையான உரிமைகளுக்காக போராடுகிறேன். குடும்பத்தில் பெண்களுக்கு உள்ள முக்கியத்துவம் பற்றிய கருத்துக்களை முன்னிறுத்துகிறேன்.
நல்ல முஸ்லிம்களாக இருப்பதற்கும், கணவன்மார்களுக்கு ஆதரவு கொடுத்து பொறுப்புகளை எடுத்துக் கொள்வதற்கும், குழந்தைகளை நல்லவர்களாக வளர்த்து மனித சமுதாயத்திற்கு வழிகாட்டக் கூடியவர்களாக ஆக்குவதற்கு முஸ்லிம் பெண்களுக்கு என்னால் ஆனதைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.
நம்மைப் படைத்த அல்லாஹ்வை திருப்திப் படுத்துவதற்காக, 'நிகாப்' அல்லது 'ஹிஜாப்' அணியும் நமது உரிமைக்காகப் போராடும் அதே வேளையில்; ஹிஜாப், நிகாப் அணியாத பெண்களுக்கு, நாம் இதை ஏன் அணிய வேண்டும், ஏன் இது நமக்கு மிகவும் அவசியம் என்பதை எல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.
உலகெங்கிலுமுள்ள எல்லா ஊடகங்களிலும், விருப்பத்துடனோ, விருப்பமின்றியோ, 'ஸ்டைல்' என்ற பெயரில் மிகமிகக் குறைவாக, ஏறத்தாழ உடையே இல்லை என்று சொல்லுமளவுக்கு அணிவதற்கு பெண்கள் வற்புறுத்தப்படுகிறார்கள். ஹிஜாபை நான் அணிந்து கொண்டதால் எனக்குக் கிடைத்ததுபோன்று, ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் நிம்மதி, மகிழ்ச்சி ஆகியவைப் பற்றி அறிந்து கொள்ள பெண்களுக்கு உரிமை இருக்கிறது. இதை நான் முஸ்லிமல்லாத முன்னாள் பெண்மணியாகவும் உரக்கச்சொல்வேன்.
 எனக்குத்தெரிந்து ஏராளமான மேற்கத்திய பெண்கள் 'நிகாப்' அணிகிறார்கள். திருமணம் முடிக்காதவர்கள் கூட அதில் அடக்கம். ஒரு விஷயம் மிகத்தெளிவானது, 'நிகாப்' அணியும் பெண்ணுக்கு குடும்பத்தார்களின், சுற்றத்தார்களின், சமூகத்தின் ஆதரவு இருக்கிறதோ இல்லையோ அதைப்பற்றி அவர்கள் கவலைப்படமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் மனதில் அந்த உடை அல்லாஹ்வுக்கு பிடித்தமானது'' என்கின்ற நம்பிக்கை அழுத்தமாக பதிந்துவிட்டது. அடித்துச்சொல்வேன் பெண்களின் புதிய சுதந்திரக் குறியீடு 'நிகாப்' தான் என்று.சௌத் பீச்சில் என் நீச்சலுடையையும், கவர்ச்சியான மேற்கத்திய வாழ்க்கை முறையையும் கழற்றி எறிந்து விட்டு, என்னைப் படைத்தவனோடு நிம்மதியாக இருப்பதிலும் சுயமரியாதையுடனும் கண்ணியத்துடனும் வாழும் ஒரு பெண்ணாக என்னைச் சுற்றியிருப்பவர்களோடு வாழ்வதில்தான் எனக்கு அளவிலா மகிழ்ச்சியும் நிம்மதியும் இருக்கிறது. அதனால்தான் நான் 'நிகாப்' அணிவதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். அதை அணியும் உரிமைக்காக நான் உயிரை விடவும் தயார் தான்.நேற்றுவரை நீச்சலுடையை பெண்ணினத்தின் சுதந்திரக் குறியீடாக நினைத்திருந்தேன். ஆனால் அது முற்றிலும் தவறு. பெண் விடுதலையின் குறியீடு 'நிகாப்'தான். அது கொடுக்கும் கண்ணியத்தை விட்டுவிட்டு, அசிங்கமான மேற்கத்திய வாழ்க்கை முறையைத் தேர்வு செய்யும் பெண்களே, ''நீங்கள் எதை இழந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிய மாட்டீர்கள்.'' 
நன்றி- மடவளை நியூஸ் 

01 January 2012

காதல்ஜோடியின் அவலம்!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 

அன்பார்ந்த சகோதர்களே! நாம் ஒருபுறம் நமது சமுதாய மக்களிடம் ஏற்பட்டு கொண்டியிருக்கிற, நடந்த நிகழ்வுகளையெல்லாம் மற்றவர்கள் பார்த்து, படித்து வாழ்வில் படிப்பினைப் பெற்று நேரான வாழ்க்கை வாழவேண்டும் என்றெல்லாம் நல்ல அபிப்ராயத்துடன் இவ்விடம் பிரசுரித்துக்கொண்டு இருக்கிறோம். இதுதொரு பக்கம் நடந்து கொண்டிருக்கிற வேலையில் மறுபக்கம் முஸ்லிம் சமுதாயப் பெண்கள் மாற்றுமதத்த சார்ந்த சகோதரகளிடம் வாழ்க்கை பயணம் மேற்கொள்வதற்கு தயாராகிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான் வருத்தத்திற்குரிய விசயம். 

காதல் என்கிற புனிதத்தை தவறுதலாக பயன்படுத்தி அற்பத்தனமான ஆசைவார்த்தைகளில் மயங்கி அதிகமானோர் மாற்றுமத சகோதர்கர்களின் வலையில் விழுந்தவர்கள் அதிகமானோர் அரைகுறையாக கல்வி படித்த பெண்களல்ல ஆனால் தனது பெண்பிள்ளைகள் நல்லபடியாக கல்வியில் விளங்கவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் உயர்ந்த கல்வி படிக்கவைத்து சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெறவேண்டும் என்கிற நோக்கில் தன்பிள்ளைகளை படிக்க பள்ளி / கல்லூரி அனுப்புகிறார்கள். 

இதுபோன்ற காதல் வழியில் சென்று வழித்தவறிய அதிகமான முஸ்லிம் சமுதாயப்பெண்கள் இன்றுஏன் நாம் அழகான மார்க்கத்தைவிட்டு வழித்தவறி மாற்றுமத சகோதர்களிடம் வாழ்க்கைபயணத்தில் கைகொர்த்தோம் என்ற விரக்தியில் வாழ்ந்துகொண்டு வெளிவரமுடியாத நிலையில் தவிக்கும் பெண்கள் எண்ணிக்கை அதிகமானபேர்கள். நமது சேலை முள்ளில் விழுவதற்கு முன் கவனமாக கண்ணும்கருத்தமாக கவனித்து இருந்தால் நாம் உடுத்தும் சேலைகள் முள்ளில் பட்டு கிழியாமல் இருந்திருக்கும். தமது மெத்தனப்போக்கால் காமத்தை காதல் என்கிற அடிப்படையில் வீட்டின் குடும்ப கவரவம், பெற்றோர்களின் உறவுகளை உதாசீனப்படுத்தி, நல்லவாழ்க்கை, உன்னதமார்க்கத்தை புறக்கணித்துவிட்டு அனைத்து விதமான நன்மைகளின் படியைத் தாண்டும் நிலைக்கு செல்லவேண்டிய நிலையில் நம்மை தள்ளிவிடுகிறது. இது அவசியம்தானா?

இதனடிப்படையில் மார்க்கம் என்கிற அழகான போர்வையை தூக்கி எறிந்துவிட்டு பல மாணவர்களுக்கு ஆசிரியர் என்கிற புண்ணியத்தொழிலை புறக்கணித்து விட்டு, பெற்றவர்களின் இதயத்தை சுக்குநூறாக்கி கண்டவனிடம் கைகோர்த்து தங்க இடமில்லாமல் தவிக்கும்போது வழித்தவறி வந்த காட்டு மிருகங்களைப்போல் சிக்கிக்கொண்ட காதல் ஜோடியின் உண்மை விபரம் இதோ:

மணமேல்குடியில் வகிக்கும் முஸ்லிம் சமுதாயத்தை சார்ந்த திருமணமாகாத முஸ்லிம் பெண் ஆசிரியை மணமேல்குடி பள்ளியில் ஆசிரியையாக வேலைப்பர்க்கிறார். இவருடன் சிதம்பரத்தைச் சார்ந்த வயது மூத்த ஆசிரியையும் வேலைசெய்கிறார். இந்த சிதம்பரத்தை சார்ந்த ஆசிரியரைப் பார்ப்பதற்கு அவருடைய கூடப்பிறந்த சகோதரர் அடிக்கடி மணமேல்குடி வருவார். அவர் அவருடைய சகோதரியை அடிக்கடி பார்ப்பதற்கு மணமேல்குடி வருவார். இந்த முஸ்லிம் சமுதாயப் பெண்மணிக்கு என்ன? உன் வேலையை பார்க்கவேண்டியதுதானே? 

இதனடிப்படையில் முஸ்லிம் ஆசிரியைக்கும், சிதம்பரத்தை சார்ந்த ஆசிரியரின் தம்பிக்கும் நாளடைவில் காதலாகமாறி இதனால் ஒருவாரத்திற்குமுன் வீட்டைவிட்டு வெளியேறி இரண்டுநாட்கள் அந்த மாற்றுமத சகோதரனுடன் தங்கிவிட்டு இருவருக்கும் வழித்தெரியாமல் மல்லிப்பட்டினம் (தஞ்சை மாவட்டம்) அருகிலே வரும்போது அங்குள்ள மனித நேயப்பாசறை (MNP) என்கிற இஸ்லாமிய அமைப்பைச்சார்ந்த இளைங்கர்களிடம் சிக்கிக்கொண்டார்கள். இதற்குமுன் இந்த இஸ்லாமிய ஆசிரியையின் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் தனது மகளைக் கானவில்லைஎன்று புகார் ஒன்றை கொடுத்திருந்தார்கள். இதற்கிடையில் இருவரும் மல்லிப்பட்டினம் MNP சகோதர்களிடம் மாட்டிக்கொண்டதால் அருகிலுள்ள புதுப்பட்டினத்தில் தங்கவைத்து இதன் விபரங்களை அருகிலுள்ள சேதுபாவசத்திரத்தில் அமைந்துள்ள காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்தி இருவரையும் அவரவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைத்து இருக்கிறார்கள். மிக நல்ல விஷயம்.

அதன்பிறகு அந்த முஸ்லிம் ஆசிரியையை அவர்களின் பெற்றோர்கள் மனம் வெறுத்து, அவர்கள் அன்று செய்த நல்லவிசயத்தை இன்று ஏன் செய்தோம் என்று வெறுக்குமளவிற்கு நொந்துபோய் தனது மகளை காவல் நிலையத்தில் இருந்து அழைத்துக் கொண்டு சென்றார்கள் என்பது வேதனைக்குரிய விசயம். 

இருந்தாலும் இருவரையும் திருமணம் செய்துவைத்திருக்கவேண்டும்.ஏனென்றால் இன்று அந்த சிதம்பரத்தை சார்ந்த மாற்றுமத இளைஞரிடம் இழந்ததை திரும்ப பெறமுடியாது. அதன்பிறகு வேறு ஒருவரை திருமணம் செய்தாலும் அத பெண்ணின் மனதுக்குள்ள எலி அறுப்பதுபோல் தனது தவறுகள் உணர்த்திக்கொண்டே இருக்கும். இதனால் எதிர்காலத்தில் வரும் வருங்கால கணவருக்கு தெரிந்துவிட்டால் இந்த பெண்ணின் எதிர்கால வாழ்வு நரகமாகிவிடும் என்பது உண்மை. காமம் காதலை உணர்த்தவில்லை, கற்பை பறிகொடுத்து இன்று பலருக்கு வெட்கி தலைக்குனியும் மூதேவி ஆசிரியையாக ஊரில் இருக்கிறார். நாளை சமுதாயத்தில் இவருக்கு மரியாதையை இருக்குமா? இதனால் இவரின் வாழ்வு மோசமான வழியில் திசைத்திரும்ப அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது. இதுபோன்ற தவறான வழியில் ஏன் உங்களின் வாழ்வை வீணாக்கி கொள்கிறீர்கள். நீங்களே நரகிற்கு நெருப்பை உண்டு செய்ய உங்களையே விறகுகளாக பயன்படுத்திக் கொள்கிறீர்கள் என்பது உண்மை. எல்லாம் வல்ல அல்லாஹ்தான் நாம் அனைவரையும் தவறான வழியில் இருந்து பாதுகாக்கவேண்டும். 

பள்ளியில் பிள்ளைகளுக்கு படிப்பை கற்றுக்கொடுக்க வேண்டிய ஆசிரியை மாற்றுமத சகோதரனிடம் காதலை கற்றுக்கொண்டு கற்பை தொலைத்துவிட்டு நிற்கிறாள்! அன்பார்ந்த சகோதரர்களே, சகோதரிகளே சற்று சிந்தித்து தூய மார்க்கத்தின் அடிப்படையில் வாழ்வதற்கு முயற்சி செய்யுங்கள். தயவுசெய்து அந்நியரிடம் பேசுவதை தடுத்துக் கொள்ளுங்கள். நீங்களே உங்களுக்கு எதிரி என்பதை மறக்க வேண்டாம். 

ஆகவே தயவுசெய்து நாம் எவ்வாறு கண்ணை பாதுகாக்கிரமோ அதுபோல தனது பிள்ளைகள், மானம், மரியாதை, குடும்ப கவரவம் இதைவிட முக்கியமாக அழகிய மார்க்கத்தை பற்றிப்பிடித்து கண்ணியமாக பாதுகாப்புடன்
வாழ்வதற்கு முயற்சி செய்யுங்கள். இன்ஷா அல்லாஹ்...!
நன்றி.

10 November 2011

போலீஸ் பக்ருதீன் கைது இல்லை: ஐகோர்ட்டில் தகவல்

சென்னை, நவ. 10: போலி என்கவுண்டரில் தனது நண்பரை கொலை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாகக் கூறி சென்னையைச் சேர்ந்த ஒப்பந்தக்காரர் எம். அப்துல்லா தாக்கல் செய்த ஆள் கொணர்வு மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
எனது நண்பர் பக்ருதீனை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த நவம்பர் 2-ம் தேதி சென்னை ஆலந்தூரில் கைது செய்தனர்.  எனினும், இதுவரை அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை.
எனது நண்பரை போலீசார் சட்ட விரோதமாக அடைத்து வைத்துள்ளனர்.  அவரை போலி என்கவுண்டரில் கொலை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாக எனக்கு தெரிய வந்துள்ளது.
எனவே,  பக்ருதீனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் அப்துல்லா வலியுறுத்தியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சி. நாகப்பன், டி. சுதந்திரம் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த மனு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதில் மனு தாக்கல் செய்தனர். பா.ஜ.க. தலைவர் அத்வானி ரத யாத்திரை மேற்கொள்ளும் வழியில், அதாவது திருமங்கலம் அருகே ஆலம்பட்டி கிராமத்தில் பாலத்தின் அடியில் பைப் வெடிகுண்டு வைக்கப்பட்டதாகக் கூறி, திருமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய எஸ். அப்துல்லா, ஆர். இஸ்மாத் ஆகியோர் கடந்த நவம்பர் 1-ம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், இந்த சம்பவத்தில் பக்ருதீன் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறினர்.
எனவே, பக்ருதீனை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடி வருகின்றனர். எனினும், இதுவரை அவர் தலைமறைவாகவே உள்ளார்.   
இந்நிலையில், பக்ருதீனை கைது செய்ததாகவும், அவரை சட்ட விரோத காவலில் அடைத்து வைத்துள்ளதாகவும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் அப்துல்லா கூறியுள்ளார். இதில் எவ்வித உண்மையும் இல்லை. இதுவரை நாங்கள் பக்ருதீனை கைது செய்யவில்லை என்று அந்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அப்துல்லா தாக்கல் செய்த ஆள் கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
பக்ருதீனை போலீசார் கைது செய்ததை மனுதாரர் நேரில் பார்க்கவில்லை. மேலும், பக்ருதீன் கைது செய்யப்பட்டதற்கான ஆதாரம் எதையும் மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யவில்லை. அதனால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
நன்றி-----தினமணி