RMY BATCHA

Create your own banner at mybannermaker.com!

Showing posts with label வீடியோக்கள். Show all posts
Showing posts with label வீடியோக்கள். Show all posts

17 April 2017

சீதனச்சந்தை.

வளைகுடா நாடுகளில் வாலிபத்தை தொலைத்தது யாருக்காக.
உடன் பிறந்த சகோதரிகளை 'கரை' ஏற்றுவதற்கு கடல் கடந்து 
சென்று உழைத்து உருக்குலைந்து வளைகுடா நாடுகளில் 
வாலிபத்தை தொலைத்து நிற்கும் சகோதரர்கள் எத்தனை பேர்?
ஓவ்வொரு வார்த்தையையும் கேட்டுகும்போது........
உண்மைகள் உரைக்கத்தான் செய்யும். உண்மையும் அதுதான்.

பெரியவர்கள் பாதுகாப்போடு பலபேர் சாட்சியாக
கொள்ளைஅடிக்க சிறந்த வழிஇது.
வேட்கப்படவேண்டிய செய்தி.

பணத்திற்காக சீதனச் சந்தையில்
உனது வாழ்க்கையை விற்கும்
ஆண் ஜாதியே ....
நாம் உமக்கு எதிராய் குரல் கொடுப்போம்.

பேரம் பேசி வாழ்க்கையைவிற்கும் நிலையில் இந்த ஆண் மகனா??????????
அவமானம் ... அவமானம் ....
கேவலம் ..... கேவலம் ...
உன் நிலை கேவலம்
பணத்திற்காய் விலை போகிறவள் விபச்சாரி
பணத்திற்காய் வாழ்க்கையை விற்கும்
நீ மட்டும் எந்த வர்க்கம் .....

வைத்திய மாப்பிள்ளைக்கு வரதட்சனை வேண்டாமாம்
செல்வதற்கு கார் பங்களா மட்டும் போதுமாம் ..
எஞ்சினியர் மாப்பிள்ளைக்கு எதுவும் வேண்டாமாம்
இருக்க வீடு வளவு மட்டும் போதுமாம் ....
எதுவும் வேண்டாமாம்
அரசாங்க தொழில் ஒன்றே போதுமாம் ...
அறிவில் உயர்ந்த ஆண் மகன் கேட்கின்றான்
சீதனப் பிச்சை ...
படித்துப் பட்டம் பெற்ற பாமர வர்க்கமா நீங்கள் ...

பெற்றெடுத்த தாய் கேட்கின்றாள் இன்று ...
பெண் மனம் புரியாது
தன் மகனுக்காய் வரதட்சனை ...
தான் ஊட்டிய பாலுக்கு பத்து லட்சம் வேண்டுமாம்
ஆணைப்பெற்ற அம்மாக்களின்
அகங்காரம் - இது
நீங்கள் விலைக்கு வாங்கி விளையாட
 நாங்கள் பொம்மைகள் அல்ல
மானமுள்ள உணர்வுகொண்ட மாதர்கள்
பணம் செலுத்தி பல் இளித்து
பஞ்சனை சுகம் நாங்கள் தேடவில்லை ..

கை நீட்டி பிச்சை வாங்கும்
மானமற்ற ஆண்களே!!
சீதனத்தால் பெண் சமூகம் வடிக்கும்
ஒவ்வொரு கண்ணீர் துளிகளும்
உம் வாழ்வை அழிக்கும்
சாபம் நிறைந்த நெருப்புப் பொறிகள்
என்பதை மறவாதீர்கள் .........

(சீதனம் வாங்கும், வாங்கவிருக்கும் ஆண்களுக்காக எழுதப்பட்டது)
- பிரியமுடன் யஸ்மின் யஹ்யா -



ஒரு பெண்ணை மண மேடையில் அமர்த்துவதற்காக சீதனம் என்னும் மரணப் படுகுழியில் விழும் பெற்றோர்கள் எத்தனை பேர்?

குமர் காரியம் என்று பிச்சைக்காரர்களாக கையேந்தி வரும் முஸ்லிம்கள் எத்தனை பேர்?

வாழ்க்கையில் விரக்தியுற்று வேலி தாண்டி ஓடிய வெள்ளாடுகள் எத்தனை, எத்தனை? என்றேனும் இந்த சமுதாயம் இதனை எண்ணிப் பார்த்து இருக்குமா?

வசதிப்படைத்த பெண்ணின் பெற்றோர் சிலர் தங்களின் மகளுக்கு மனமுவந்து அன்பளிப்பாக வழங்குவதை நாம் குறைகூற இயலாது. அதை திருமணத்தன்று செய்யாமல் பிரிதொரு சமயத்தில் மணமக்களுக்கு செய்யலாமே! திருமணத்தன்று பலர் முன்னிலையில் இப்படி செய்வது மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அல்லவா அமைந்து விடுகிறது. இல்லாதவர்கள் என்ன செய்ய முடியும்?
ஜம்பதாயிரம், ஒரு லட்சம் என்று மணப்பெண்ணிடம் சீதனம் வாங்கிக்கொண்டு அதிலிருந்து சிறு அற்ப தொகை 1001 ரூபாயை மணபெண்ணுக்கு மஹராக வழங்கி மணமுடிக்கும் மகா கெட்டிகாரர்கள் இந்த சமூகத்தில் இருக்கவே செய்கிறார்கள். 'மஹர் வழங்கி மண முடியுங்கள் "என்ற மறை மொழியை அப்படியே பின்பற்றுகிறார்களாம்! அல்லாஹ்வை எமாற்ற நினைக்கும் இந்த அயோக்கியர்கள்.


நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு
மஹர் (திருமணக் கொடை) களை மகிழ்வோடு கொடுத்து விடுங்கள். (4:4)
என்ற அருள்மறையின் கட்டளைகளை மணமக்களும்
அவர்தம் பெற்றோர்களும் எண்ணி பார்க்க வேண்டாமா?

திருமணம் பணத்தினால் நிச்சயிக்கப்படுகிறது என்ற நிலை மாறி இறையச்சத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் என்ற நிலை வர வேண்டும். அப்போதுதான் சீதனம் ஒழிந்து வாடி வதங்கும் வனிதைகளுக்கு வாழ்வு கிடைக்கும். இல்லறமும் நல்லறமாகி இன்பம் பொங்கும். இன்ஷா அல்லாஹ் .....
வரதட்சணை வேண்டாம் என்று சொல்.SAY NO TO DOWRY.
நன்றி,
சீதனம் மற்றும் வரதச்சனைக்கு எதிராக, இன்றைக்கு அவசியமான,
அனைத்து நண்பர்களும் காணவேண்டியஒரு வலைதளம்
 --சுட்டி--


16 April 2017

உலகின் பெரிய வழிபாட்டுத்தளம்.

“விஷ்ணு” கடவுளுக்காக கட்டப்பட்ட இந்த கோயில்தான் உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே ” பெரியது “!
இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும்


                   
                      உலகின் பெரிய வழிபாட்டுத்தளம்

  
    நன்றி-சுட்டி

13 April 2017

கும்பகோணம் அருகே உள்ள திருப்புரம்பியம் என்ற கிராமம் குறித்த காணொளி

சோழ மன்னர்களின் முதன்மைநகரான நமது ஊர் ( கும்பகோணம் ) அருகே உள்ள திருப்புரம்பியம் என்ற கிராமம் குறித்த காணொளி.
 நாம் அறியாத பல சுவாரஸ்யமான வரலாற்றுக் குறிப்புகளைக்கொண்டுள்ளது.
 நமது ஊர்( கொரநாட்டு கருப்பூர் ) அருகில் உள்ள மனஞ்சேரி என்ற அழகிய கிராமத்தில் உள்ளதர்ஹாவை பற்றியவரலாறு தகவல் அறிந்தவர்கள் விரும்பினால் கமெண்ட்ஸ் பகிர்ந்து கொள்ளவும். 
இந்த போரில் கலந்துகொண்டவர்கள் அடக்கஸ்தலம்மாக இருக்க
வாய்பு உள்ளது.ஏன் என்றால் இந்த அடக்கஸ்தலதை காணும் போது
மரணம் அடைந்த பலஉடலை ஒரு இடதத்தில் அடக்கசெய்தது 
போல் உள்ளது.இந்த அடக்கஸ்தலதை கண்டவர்களுக்கு புரியும். திருப்புரம்பியம்

14 December 2016

பெருச்சாளியின் வாலை பிடிக்கப் போய், புலியின் வாலை பிடித்து விட்டோமோ?

பணமில்லா வர்த்தகம் - சாத்தியமா? - ஒரு நடைப்பாதை வியாபாரியின் விளக்கம்.

நமது பிரதமர் திரு. நரேந்திர மோடி,
இந்தியா ஒரு பணமில்லா வர்த்தக நாடாக வேண்டும் என்று தன் விருப்பத்தை வெளியிட்டுள்ளார். 90% சதவித சில்லறை வர்த்தகம் நடைபெறும் ஒரு நாட்டில், அதுவும் மொத்த மக்கள் தொகையில் 50% மேல் சில்லறை வர்த்தகத்தை மட்டுமே நம்பி குடும்பம் நடத்தட்டும் ஒரு நாட்டில் இது சாத்தியமா?
India’s Botched War on Cash.
என்று ஒரு கேள்வி எல்லோரையும் போல என் மனத்தில் எழுந்தது.

எனக்கு தெரிந்த ஒருவர் கடைத்தெருவில் நடைப்பாதையில் கடை வைத்துள்ளார். அவர் நன்றாக படித்திருக்க வேண்டியவர். பிளஸ் 2 வில் 1000 மார்க்குக்கு மேல் எடுத்திருந்தாலும், தன குடும்ப சுமையை சுமக்க, அதன் பின் திருப்பூரில் வேலைக்கு சென்று, தொலைத்தூரக் கல்வியில் B.Com பட்டம் பெற்று, தி சொந்த ஊருக்கு திரும்பி, இப்போது நடைப்பாதை கடையில் பழங்கள் விற்றுக்கொண்டிருக்கிறார். அவரைக் கேட்டபோது, சிரித்துக் கொண்டே, "அதெல்லாம் முடியவே முடியாது சார்" என்றார். எப்படி என்று அவர் விளக்க விளக்க, நான் அதிர்ந்துப் போனேன்.

சார். இப்போது நான் தினமும் ரூபாய் 5000 முதலீடு செய்து, பழம் வாங்கி வந்து ரூபாய் 6000 / -க்கு விற்கிறேன். தினமும் 1000 ரூபாய் லாபம். இதில், நகராட்சி வரி, போலீஸ் லஞ்சம், அழுகிப் போகும் பழங்கள், என் சாப்பாடு செலவு, தள்ளு வண்டி வாடகை, பழங்கள் எடுத்து வர ஆட்டோ வாடகை என தினமும் 500 ரூபாய்கள் செலவு. மிச்சம் 500 ரூபாய்கள் எனக்கு இறுதி லாபம். இதையே நான் பணமில்லா வர்த்தகத்தில் செய்வதாக வைத்துக் கொள்ளுங்கள். என்னுடைய லாபம் அப்படியே பாதியாக குறையும். எப்படி என்று விளக்குகிறேன். இது ஒரு வருடத்திற்கு. . .

பணமில்லா வர்த்தகம்

பிஓஎஸ் மெஷின் வாடகை மாதம் 850 * 12 10,200.00

ஒரு நாளைக்கு 6000 / - ரூபாய்க்கு 0.75% பிஓஎஸ்
பரிவர்த்தனை கட்டணம் 45 / - 365 நாளைக்கு 45 * 365 16,425.00

அடுத்த நாள் வீட்டு செலவிற்கு ஏடிஎம் இல் பணம்
எடுக்க வேண்டும் ஒரு மாதத்திற்கு 5 முறைக்கு மேல்
எடுத்தால் ஒவ்வொரு முறையும் 23 / -சர்வீஸ் சார்ஜ்
மாதத்திற்கு 10 முறை மட்டுமே எடுத்தால் 230 * 12 276.00

எஸ்எம்எஸ் கட்டணங்கள் 30 / -, X 4 காலாண்டு 120.00

வங்கி வைத்து புத்தகத்தை / ஃபோலியோ குற்றச்சாட்டுக்கள், போன்றவை 200.00
--------------
மொத்த வங்கி 27,221.00 கட்டணங்கள்
--------------
இதை தவிர, பிஓஎஸ் மெஷினில் ஸ்வைப் செய்யப்படும் பணம் உடனே என் அக்கௌன்ட்டிற்கு வராது. அடுத்த நாள் தான் வரும். எனவே என்னுடைய அடுத்த நாளுடைய முதலீடு 5000 / - ரூபாய்க்கு நான் வைத்திருக்க வேண்டும். அப்படி என்றால் என்னுடைய முதலீடு இரு மடங்காகிறது. (ரூபாய் 10,000 / -).

இதை விடப் பெரிய காமெடி இருக்கிறது. ஒரு நாளைக்கு 6000 / - வியாபாரம் செய்கிறேன் என்றால், ஒரு வருடத்திற்கு 6000 * 365 = 21,90,000 / -. பத்து லட்சத்திற்கு மேல் வியாபாரம் செய்தால் டின் வேண்டும். மாதாமாதம் நான் வரி செலுத்த வேண்டும் அல்லது 0% வரியுள்ள பொருளாயிருந்தாலும் கணக்கு சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக நான் ஒரு கணினி வாங்க முடியாது. மாதத்திற்கு 100 / - ரூபாய்க்கு ஒரு ஆடிட்டரை வைத்து கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். அதன் செலவு வருடத்திற்கு 1200 / -. வருடத்திற்கு இருபது லட்ச ரூபாய் பரிவர்த்தனை செய்வதால், வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு ஒரு வருடத்திற்கு ஆடிட்டருக்கு ரூபாய் 500 / -. டின் மற்றும் நிரந்தர கணக்கு எண் வாங்க முதலீடு 1000 / -.

இவ்வளவிற்கும் என் லாபம் என்பது ஒரு வருடத்திற்கு 500 * 365 = 1,82,500 / -. வாயை பிளக்காதீர்கள். இது நான்கு பேர் கொண்ட என் மொத்த குடும்பத்திற்கும் ஒட்டு மொத்த வருமானம். வருமான வரிக்கு கீழே வராத என் வருமானத்தில் இருந்து கிட்டத்தட்ட 29000 / - வங்கியும், அரசும் எடுத்துக் கொள்கிறது. கிட்டத்தட்ட 16% .இந்த நஷ்டத்தை நான் யாரிடம் வசூல் செய்ய முடியும். நுகர்வோரிடம் இருந்து தானே. அப்புறம் எப்படி விலைவாசி குறையும். ஏறத்தான் செய்யும். இதனால், நுகர்வோருக்கும் பாதிப்பு தான்.

இதை விட முக்கியம். இந்த பாதிப்புகள் என் வரை மட்டுமல்ல. நான் பழங்களை வாங்கும் வினியோகிஸ்தருக்கும் இதே கதை தான். அவரும் ஒரு மையத்தோடு பரிமாற்ற கட்டணம், நான் பொருளை வாங்கும்போது பிஓஎஸ்
குற்றச்சாட்டுக்கள் என 16% லாபத்தில் நஷ்டம். எனவே அவரும் அவர் விலையை ஏற்றுவார். அப்போது மேலும் 16% அல்லது 20% ஏற்றலாம். ஒட்டு மொத்தமாக பார்த்தால், விலை 150% ஏறும். வங்கிகள் லாபம் கொழிக்கும். ஆளே தேவை இல்லை. சில கணினிகளும், ஒரு சில வேலையாட்களும் வைத்துக் கொண்டு,
வங்கிகள் கோடிக்கணக்கில் லாபம் பார்க்கும்.
அவர் சொன்னது அனைத்தும் சரியே. ஒரு சில பண எண்ணிக்கை வேண்டுமானால் கூடலாம். குறையலாம். மற்றபடி அனைத்தும் சரியே. பணமில்லா வர்த்தகம் இவ்வளவு பாதிப்புகளை, ஒரு நடைப்பாதை வியாபாரிக்கும், நுகர்வோருக்கும் ஏற்ப்படுத்துமெனில் இது சாத்தியமே ஆனாலும், நம் நாட்டிற்கு தேவையா? குறைந்தப் பட்சம் சிறு வணிகத்திற்க்கேனும் இதிலிருந்து கட்டாயம் விலக்கு அளிக்க வேண்டும். இல்லையெனில் தனி மனிதனின் வாங்கும் திறனை அதிகரிக்க, அவனின் தனி மனித வருமானத்தை அதிகரிக்க வேண்டும். இது மீண்டும் ஒரு பண மதிப்பை குறைக்கும் வழியைத் தான் தேடும்.

கறுப்புப் பண பெருச்சாளியின் வாலை பிடிக்கப் போய், புலியின் வாலை பிடித்து விட்டோமோ?என்ற அச்சம் எழாமலில்லை ..
நன்றி--BK Mohideen

09 December 2016

பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் விடும் பிள்ளைகளே

இன்று நமது பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்தால், நாளை நமது பிள்ளைகள் நம்மை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுவர். முதியோர் இல்லங்கள் மூடப்படாமல் நீடித்து இருப்பதற்குரிய காரணம் புரிகிறதா?


ஒருவர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! ஒரு மகன் தன் பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமை என்ன? என்று வினவினார். அதற்கவர்கள், அவ்விருவரும் உன்னுடைய சொர்க்கமும், உன்னுடைய நரகமும் ஆவர் என்றுரைத்தார்கள். (நூல்: 3652)



அதாவது தாயின் காலடி என்பது தாயின் மன திருப்தியை குறிக்கிறது என்பதாக அறிஞர்கள் கருத்துரைக்கிறார்கள்.
நாம் சொர்க்கம் செல்வதற்கு காரணமாய் இருக்கும் பெற்றோர்களையே முதியோர் இல்லம் என்ற நரகத்தில் தள்ளி விடுவது எவ்வளவு பெரிய அபத்தம்!


அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் செல்வமும் குழந்தைகளும் உள்ளனர். என்னுடைய தந்தை என் பொருளை (ப் பணத்தை எனக்குத் தெரியாமல்) எடுத்துக்கொள்கிறார் என்று (தம் தந்தையைப் பற்றி) முறையீடு செய்தார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நீயும் உன் செல்வமும் உன்னுடைய தந்தைக்கே சொந்தம் என்று விடையளித்தார்கள். (நூல்: இப்னுமாஜா -2282)


(நபியே!) உமதிறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். (17: 23)


ஒருவர் சொர்க்கம் செல்ல வேண்டுமென நினைத்தால் அதற்குரியஅடிப்படை தகுதியே பெற்றோரிகளின் மனம் குளிரும் படியாக வாழ்ந்திருக்க வேண்டும். பெற்றோர்களின் உயர்வைப் பற்றி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "பிள்ளைகளாய் இருப்போரே, தாயின் காலடியில் தான் உங்களுக்கானசொர்க்கம் உள்ளது" எனக் கூறுகிறார்கள்

25 February 2012

வாழ்கையில் எல்லா இன்பம்மும் பெற்று நீடூழி பல்லாண்டு வாழ்கஇந்தமணமக்கள்.

தமிழ்க் கலாசாரத்தில் மணப் பந்தலுக்கு மணமக்களை அழைத்துச் செல்லுவதற்குஎன்று ஒரு பாரம்பரியமுறை உள்ளது. ஆனால் இங்கு மணமகனும், மணமகளும் மணமேடைக்கு வரும் முன் குத்தாட்டம் போட்டுக் கொண்டு திருமணத்துக்கு வந்த அத்தனை பேரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி, சிரிக்கவும் வைத்துள்ளனர்.இந்தக் காட்சியை உங்கள் பார்வைக்கு சமர்பிக்கிறோம்.
ஆணுக்கு - பெண், பெண்ணுக்கு - ஆண் குறைந்தவர்கள் அல்ல என்பதை காட்டுகிறது ..
அதேசமயம் பெண்களுக்கே உண்டான அச்சம், மடம், நானம், பகிர்ப்பு என்ற நற்குணங்கள் இல்லாததையும், அதேசமயம் மனமகனுகேஉறியதும் நிர்மூலமாக்கப்பட்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
இந்த மணமக்களின் குத்தாட்டதை காணும் அனைவரும் சிரிப்பிலும் வியப்பிலும் அதேசமயம் அதிர்ச்சியும் ஆழ்த்திஇருக்கும்?
வாழ்கையில் எல்லா இன்பம்மும் பெற்று நீடூழி பல்லாண்டு வாழ்கஇந்தமணமக்கள்.
Click here to get more Marriage Greetings from MasterGreetings.com


நன்றி-youtube

16 February 2012

மனிதாபிமானமற்ற மனிதமனமே தயவுசெய்துஉன்னைமாற்றிக்கொள்ள.


மனிதன் மனம் எவ்வளவு கொடுரமானது, இந்தவீடியோவை
பார்க்கும்போது உங்கலுக்கே புரியும். இயற்கைக்கு மாறாக
மனிதன் செய்யும் செயல்.
மனிதாபிமானமற்ற மனிதமனமே தயவுசெய்து
உன்னை மாற்றிக்கொள்ள.

11 February 2012

காதலர் தினம்மா அல்லது காமுகர் தினம்மா.

மௌலானா ஷம்சுதீன் காசிமி ஜும்மா குத்பா உரை
தலைப்பு: காமுகர் தினம்
தலைப்பு: காதலர் தினம்
நாள்: 10.02.2012
இடம்: மக்காஹ் மஸ்ஜித், சென்னை.

காதலர் தினம் எனும் கலாச்சார சீரழிவு."சுட்டி"
உயிர்கொல்லி காதலுக்கு கொண்டாட ஒரு தினமா?
கிறிஸ்துவ போதகர் வேலன்டைன் என்பரின் நினைவாக ரோம பாரம்பரியத்தின் வாயிலாக உருவானது தான் இந்த வேலன்டைன் தினம். பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாளை வணிகமயாக்குவதற்காகவே மேற்கத்திய நாடுகள் இதை காதலர் தினமாக அறிவித்துள்ளன.

எதற்காக பிப்ரவரி 14 தேர்வு செய்யப்பட்டது என்பதற்கு எந்த சரியான வரலாறும் இல்லாத இந்த நாள், இன்றைக்கு பல பெண்களின் கற்பு பறிபோகும் நாளாக மாறிவிட்டது.

நமது இந்தியா, இலங்கையும் இதற்கு விதிவிலக்கல்ல! மேற்கத்திய கலாச்சாரத்தை இங்கும் கடைபிடிக்கின்றனர்,

இன்றைக்கு உள்ள மீடியாக்கள் காதலை ஊக்கப்படுத்தும் வண்ணம் தனியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும் அளவிற்கு காதல் சாதரண விஷயம் என்பதையும் தாண்டி 'அடப்பாவி உனக்கு கேல் ஃபிரண்ட் இல்லையா? அப்ப நீ வேஸ்ட் என்று கூறும் அளவிற்கு கவுரவமான விஷயமாக மாறி விட்டது.

உங்க லவ்வரோட பேர டைப் பண்ணி அப்டி எஸ். எம் எஸ் அனுப்பு இப்டி எஸ். எம். எஸ் அனுப்பு ஒரு எஸ். எம். எஸ் க்கு 3 ரூபாய் என்று கூறி காதலர் தினம் என்ற பெயரில் இளைஞர்களிடமிருந்து பணத்தை அபகரிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வருடா வருடம் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.

இஸ்லாமிய இளைஞர்களும் இளைஞிகளும் இந்த காதல் எனும் சமூக சீர்கேட்டில் விழுந்து விடுகின்றனர்.

இதற்கெல்லாம் காரணம் காதல் என்ற பெயரில் நடைபெறும் அநாச்சாரங்கள் மற்றும் அசிங்கங்கள் பற்றிய விழிப்புணர்வும் இஸ்லாம் எந்த அளவிற்கு இதை தடை செய்துள்ளது என்ற அறிவும் நம் பெற்றோர்களிடத்திலும் பிள்ளைகளிடத்திலும், இல்லாமையே.

"விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது; அல்லது பொய்யாக்குகின்றது "என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6243

தவறான பார்வையையும், சிந்தனையையும், பாலியல் தொடர்பான பேச்சுக்களையும் விபச்சாரத்தின் ஒரு பகுதி என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

எனவே காதல் என்ற பெயரில் நடந்து வரும் காமக்களியாட்டங்களுக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் அனுமதி இல்லை.

ஒருவர் ஒரு பெண்ணை மணம் முடிக்க விரும்பினால் அந்தப் பெண்ணின் பொறுப்பாளர்களிடம் போய் பேசி, மணம் முடித்துக் கொள்ள வேண்டும். இது தான் இஸ்லாம் கூறும் வழிமுறை.

திருமணத்திற்கு முன்பு பெண்ணைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

முகீரத் இப்னு ஷுஃபா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் வந்து தனக்கு மணம் பேசி முடிக்கப்பட்ட செய்தியைக் கூறினார். நபி (ஸல்) அவர்கள், "நீ அந்தப் பெண்ணைப் பார்த்தாயா?" என்று கேட்டார்கள். அவர் இல்லை என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், "பெண்ணை நீ போய் பார். அது உங்கள் இருவருக்கிடையில் நட்பு வளருவதற்குச் சிறந்ததாக இருக்கும் "என்று கூறினார்கள். (நூல்: நஸயீ 3183)

மேற்கூரிய அறிவுரைகளை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சிறுவயது முதல் கூறி இந்த காதல் எனும் சீர்கேட்டில் பிள்ளைகள் விழுந்து விடாமல் பாதுகாக்க வேண்டும்.

ஆனால் மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தை டி.வி. க்கள் கற்றுக் கொடுக்கின்ற போது. பெற்றோரும் சேர்ந்து கொண்டு தான் அதை பார்க்கின்றனர்.
விளைவு, பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகுவது ஒருபுறமிருக்க யாருடனேனும் ஓடிப்போகும் போது பெற்றோர்கள் அவமானப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சென்று விடுகின்றனர்.

பெற்றோர் செய்கின்ற மற்றொரு பெரிய தவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும்.

செல்போன் பிள்ளைகளின் ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன.
செல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்கள் இளைஞர் மற்றும் இளைஞிகளிடையே இன்றைக்கு சர்வசாதாரமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.

தங்கு தடையற்ற காதல் பேச்சுக்கள் இந்த செல்போன்களில் தான் நடைபெறுகின்றது: எந்த ஓர் ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது, அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன் சமுதாயத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன.

ஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன.

ஆண், பெண் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வழங்கினால் நாமே அவர்களை விபச்சாரத்திற்கு ஊக்குவித்தவர்களாவோம். வாலிப வயது ஆண், பெண் இருபாலரும் செல்போன்களை செக்ஸ் போன்களாகத் தான் பயன்படுத்துகின்றனர்.

பிள்கைளுக்கு செல்போன் வாங்கி கொடுப்பதை நிறுத்தினால் பிப்வரி 14 உங்கள் பிள்ளையின் கற்பு பறிபோகும் நாளமாக மாறாமல் தடுக்கலாம்.

இந்த காதல் எனம் சீர்கேட்டால் சமூகத்தின் ஒழுக்கம் எனும் கட்டமைப்பே சீர் குலைந்து விட்டது. எந்த அளவுக்கென்றால் திருமணததிற்கு முன் இப்போழுதெல்லாம் பெண்களுக்கு கன்னி பரிசோதனை (கன்னி சோதனை) நடத்தபடுகின்றது. இந்த காதல் சமூகத்தில் அவ்வளவு ஒழுக்க சீர்கேட்டை கொண்டு வந்துள்ளது.

இந்த காதலினால் ஒழுக்க கேடான விஷயங்கள் ஒருபுறமிக்க இதையெல்லம் மிஞ்சும் அளவிற்கு இந்த காதல் என்ற சீர் கேட்டால் எத்தனை உயிர்கள் பறிபொகின்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு காதல் விகாரத்தில் நடைபெற்ற கொலைகளின் எண்ணிக்கை 217 (தினமணி 8-5-2010).

என்றாவது அம்மா நேசிக்காததால் மகன் தற்கொலை என்ற செய்தியை கேள்வி பட்டுள்ளோமா? கிடையாது!

ஆனால் காதலி நேசிக்காததால் காதலன் தற்கொலை அல்லது காதலியின் முகத்தில் ஆசி ஊற்றினான் (திருச்சி சம்பவம்) போன்ற செய்திகளை நிறைய கேள்விபட்டிருப்போம். மகள் அல்லது மகன் ஓடிப்போய்விட்டதால் பெற்றோர்கள் அவமானத்தில் தற்கொலை செய்கின்றனர். (உம்: தொழிலதிபர் குடுபத்துடன் தற்கொலை) பிள்ளைகளை ஒழுக்கத்துடன் ஒழுங்காக வளர்த்திருந்தால் இந்த அவல நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா?

வீட்டில் காதலுக்கு சம்மதிக்காததால் காதல் ஜோடி தற்கொலை! இந்த செய்தியும் பத்திரிக்கைகளில் அதிகம் பார்த்திருப்பீர்கள்.

ஆரம்பத்திலேயே காதல் சீர்கேட்டை பிள்ளைகளுக்கு புரிய வைத்திருந்தால் பிள்ளைகளை பரிகொடுக்கும் அவல நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா?

தன் காதலியை காதலித்தவனை ஆத்திரத்தில் கொலை செய்த காதலன். அல்லது இன்னொருத்தவனை காதலித்ததால் காதலியை கொன்ற காதலன். இந்த செய்தியை பத்திரிக்கைகளில் பார்த்திருப்பீர்கள்.

இதில் கள்ளக் காதல் வேறு! அதில் "கள்ளக் காதலன் கொலை" அல்லது "கள்ளக் காதலி கொலை" என்று உயிர் பலி இதை விட அதிகம் என்பது பத்திரிக்கைப்படிப்பவர்களுக்கு தெரியும்.

இப்படி உயிர் கொல்லியாகவும், ஒழுக்கக் கேட்டை கட்டவிழ்த்து விடும் செயலாகவும் இருக்கும் இந்த காதலுக்கு ஒரு தினம் வைத்து உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது.

இதற்கெல்லாம் காரணம் எவன் செத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை எங்களுக்கு பணம் தான் முக்கியம் என்று மீடியாக்கள் கொஞ்சம் கூட சமுதாய அக்கரை இல்லாமல் செயல்பட்டு இந்த காதலை ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பதினால் தான்.

இப்படி காதலை ஆதரிப்பவர்களிடம் போய் 'சார் நான் உங்க பொண்ண லவ் பண்ணிக்கவா' என்று கேட்டால் "டேய்! உன்ன ஈவ்டிசிங்ல போலிஸ்ல புடுச்ச கொடுத்துடுவேன் "என்று தான் கூறுவார்கள்.

ஏன் காதலித்தவர்களே திருமணத்திற்கு பிறகு நம்ம பிள்ளைகள் காதல் கத்தரிக்கான்னு போய்விடக்கூடாது என்று தான் நினைப்பார்கள்.

அவ்வளவு ஏன்?, ஒரு பெண்ணை காதலிக்கும் இளைஞன் தான், தன் அக்காவையோ அல்லது தங்கையையோ யாரேம் காதலித்தால் முதலில் சண்டைக்கு போவான்.

அடுத்தவன் பிள்ளை நாசமா போனா பரவாயில்லை உன் அக்கா தங்கை நாசமாகிவிடக்கூடாது என்று சுய நலத்தோடு யோசிக்கும் இளைஞர்களே சமுதாய அக்கறையோடு நடந்து கொள்ளுங்கள்!

சமுதாய அக்கரையுள்ள இளைஞர்களும், பிள்ளைகள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களும் இந்த பிப்ரவரி 14 ஐ புறக்கணித்தால் உயிர் பலிகளும் சமூக சீர்கேடுகளும் அசிங்கங்களும் மற்றும் திருணமத்திற்கு முன்பே கற்பு பரிபோகும் நிலையும் ஏற்படாமல் நமது சமுதாயத்தை காப்பாற்றலாம்!

பிப்ரவரி 14 ஆம் தேதியும் டிசம்பர் 1 ஆம் தேதியும் நம்மை பொறுத்வரை ஒன்று தான். எய்ட்ஸ் எனும் உயிர்க் கொல்லி நோய்க்காக டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் நாளாக அறிவிக்கப்பட்டு அதில் எஸ்ட்ஸ் பற்றிய விழிப்புர்ணபு பிரச்சாரம் செய்யப்டுகின்றது (தனி நாள் ஒதுக்காமல் அனைத்து நேரங்களிலும் நன்மையை ஏவி தீமையை தடுக்க வேண்டும் என்பதே நமது நிலை).

அதே போன்று தான் பிப்ரவரி 14 ல் காதல் கொண்டாட்டங்கள் நடைபெறாமல் தடுக்க காதல் எனும் உயிர் கொல்லி பற்றி விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட வேண்டும். அன்று மட்டும் இல்லாம் எல்லா நேரங்களிலும் இந்த வழிப்புணர் பிரச்சாரங்கள் மக்களிடையே செய்யப்பட வேண்டும்.

04 February 2012

இலங்கை முஸ்லிம்.

கண்களில்கண்ணீரை தாங்கிநிற்கும் நம் இனசகோதர சகோதரிகள் .
யாஅல்லா இவர்கள் இலந்ததை இவர்கலுக்கு தருவாயாக..
இவர்களிடம் இருப்பதில் பரக்கத்தை அதிகம் ஆக்குவாயாக ...
இவர்கள் வாழ்க்கையை மேன்மையாக்குவாயாக ....
இவர்கள் காத்த பொறுமைக்கு இவர்களை இன்மையிலும்
மறுமையிலும் மேன்மை படுத்துவாயாக ....

02 February 2012

விஜயகாந்த் - ஜெயலலிதா மோதல்



அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்ததாக விஜயகாந்த் உள்பட தே.மு.தி.க. உறுப்பினர்கள் அனைவரும் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
சட்டப்பேரவை இன்று காலை தொடங்கியதும், தேர்தல் தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது, விலைவாசி உயர்வு குறித்து பேசிக்கொண்டிருந்த தேமுதிக உறுப்பினர் சந்திரகுமார், உள்ளாட்சித் தேர்தல் முடிந்த கையோடு அரசு பலவிதங்களில் விலைகளை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்த்தும் முடிவினை அரசு தைரியம் இருந்திருந்தால் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பே எடுத்திருக்க வேண்டும். அப்படி எடுத்திருந்தால், தேர்தல் முடிவுகள் வேறுவிதமாக அமைந்திருக்கும் என்று பேசினார்.
அதற்கு முதல்வர் ஜெயலலிதா, இப்போது சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வரவிருக்கிறது. அப்போது நீங்களும் தைரியமிருந்தால் தனித்துப் போட்டியிட்டுப் பாருங்கள். யார் ஜெயிக்கிறார்கள் என்று பார்ப்போம் என்று கூறினார். அதற்கு விஜயகாந்த் எழுந்து, இடைத்தேர்தல்களில் ஆளும்கட்சிதான் ஜெயிக்கும். அது இயல்புதானே என்று கூறினார்.
அதற்கு முதல்வர், இப்போதே எதிர்க்கட்சித் தலைவர் தனது தோல்வியை ஒப்புக்கொள்கிறார் என்றார். இதனால், இரு தரப்புக்கும் வாக்குவாதம் எழுந்தது.
இந்நிலையில், அவையை அமைதி நிலைக்குக் கொண்டுவர, குழப்பம் ஏற்படுத்திய தேமுதிக உறுப்பினர்களை வெளியேற்றுமாறு அவைத்தலைவர் உத்தரவிட்டார். இதனையடுத்து தே.மு.தி.க. வினர் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
தொடர்ந்து முதல்வர் எழுந்து, தகுதி இல்லாதவர்களுக்கு பெரிய பதவி கிடைத்தால் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதை இவ்வளவு கீழ்த்தரமாக எதிர்க்கட்சியினர் நடந்துகொண்டதை வைத்து தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவித்தார். இந்தச் சம்பவங்களால் இன்று காலையில் தமிழக சட்டமன்றம் பெரும் அமளியானது.
நன்றி-- தமிழன் 

25 November 2011

அப்பட்டமான உண்மை...கூற தைரியம் வேண்டும்.

சினிமா பற்றியும், MGRறை சுட்டதை பற்றியும் , MR ராதாகூறியது .
                                                இஸ்லாமியர் பற்றி  MR ராதாகூறியது .