RMY BATCHA

Create your own banner at mybannermaker.com!

Showing posts with label அரசியல்.. Show all posts
Showing posts with label அரசியல்.. Show all posts

14 December 2016

பெருச்சாளியின் வாலை பிடிக்கப் போய், புலியின் வாலை பிடித்து விட்டோமோ?

பணமில்லா வர்த்தகம் - சாத்தியமா? - ஒரு நடைப்பாதை வியாபாரியின் விளக்கம்.

நமது பிரதமர் திரு. நரேந்திர மோடி,
இந்தியா ஒரு பணமில்லா வர்த்தக நாடாக வேண்டும் என்று தன் விருப்பத்தை வெளியிட்டுள்ளார். 90% சதவித சில்லறை வர்த்தகம் நடைபெறும் ஒரு நாட்டில், அதுவும் மொத்த மக்கள் தொகையில் 50% மேல் சில்லறை வர்த்தகத்தை மட்டுமே நம்பி குடும்பம் நடத்தட்டும் ஒரு நாட்டில் இது சாத்தியமா?
India’s Botched War on Cash.
என்று ஒரு கேள்வி எல்லோரையும் போல என் மனத்தில் எழுந்தது.

எனக்கு தெரிந்த ஒருவர் கடைத்தெருவில் நடைப்பாதையில் கடை வைத்துள்ளார். அவர் நன்றாக படித்திருக்க வேண்டியவர். பிளஸ் 2 வில் 1000 மார்க்குக்கு மேல் எடுத்திருந்தாலும், தன குடும்ப சுமையை சுமக்க, அதன் பின் திருப்பூரில் வேலைக்கு சென்று, தொலைத்தூரக் கல்வியில் B.Com பட்டம் பெற்று, தி சொந்த ஊருக்கு திரும்பி, இப்போது நடைப்பாதை கடையில் பழங்கள் விற்றுக்கொண்டிருக்கிறார். அவரைக் கேட்டபோது, சிரித்துக் கொண்டே, "அதெல்லாம் முடியவே முடியாது சார்" என்றார். எப்படி என்று அவர் விளக்க விளக்க, நான் அதிர்ந்துப் போனேன்.

சார். இப்போது நான் தினமும் ரூபாய் 5000 முதலீடு செய்து, பழம் வாங்கி வந்து ரூபாய் 6000 / -க்கு விற்கிறேன். தினமும் 1000 ரூபாய் லாபம். இதில், நகராட்சி வரி, போலீஸ் லஞ்சம், அழுகிப் போகும் பழங்கள், என் சாப்பாடு செலவு, தள்ளு வண்டி வாடகை, பழங்கள் எடுத்து வர ஆட்டோ வாடகை என தினமும் 500 ரூபாய்கள் செலவு. மிச்சம் 500 ரூபாய்கள் எனக்கு இறுதி லாபம். இதையே நான் பணமில்லா வர்த்தகத்தில் செய்வதாக வைத்துக் கொள்ளுங்கள். என்னுடைய லாபம் அப்படியே பாதியாக குறையும். எப்படி என்று விளக்குகிறேன். இது ஒரு வருடத்திற்கு. . .

பணமில்லா வர்த்தகம்

பிஓஎஸ் மெஷின் வாடகை மாதம் 850 * 12 10,200.00

ஒரு நாளைக்கு 6000 / - ரூபாய்க்கு 0.75% பிஓஎஸ்
பரிவர்த்தனை கட்டணம் 45 / - 365 நாளைக்கு 45 * 365 16,425.00

அடுத்த நாள் வீட்டு செலவிற்கு ஏடிஎம் இல் பணம்
எடுக்க வேண்டும் ஒரு மாதத்திற்கு 5 முறைக்கு மேல்
எடுத்தால் ஒவ்வொரு முறையும் 23 / -சர்வீஸ் சார்ஜ்
மாதத்திற்கு 10 முறை மட்டுமே எடுத்தால் 230 * 12 276.00

எஸ்எம்எஸ் கட்டணங்கள் 30 / -, X 4 காலாண்டு 120.00

வங்கி வைத்து புத்தகத்தை / ஃபோலியோ குற்றச்சாட்டுக்கள், போன்றவை 200.00
--------------
மொத்த வங்கி 27,221.00 கட்டணங்கள்
--------------
இதை தவிர, பிஓஎஸ் மெஷினில் ஸ்வைப் செய்யப்படும் பணம் உடனே என் அக்கௌன்ட்டிற்கு வராது. அடுத்த நாள் தான் வரும். எனவே என்னுடைய அடுத்த நாளுடைய முதலீடு 5000 / - ரூபாய்க்கு நான் வைத்திருக்க வேண்டும். அப்படி என்றால் என்னுடைய முதலீடு இரு மடங்காகிறது. (ரூபாய் 10,000 / -).

இதை விடப் பெரிய காமெடி இருக்கிறது. ஒரு நாளைக்கு 6000 / - வியாபாரம் செய்கிறேன் என்றால், ஒரு வருடத்திற்கு 6000 * 365 = 21,90,000 / -. பத்து லட்சத்திற்கு மேல் வியாபாரம் செய்தால் டின் வேண்டும். மாதாமாதம் நான் வரி செலுத்த வேண்டும் அல்லது 0% வரியுள்ள பொருளாயிருந்தாலும் கணக்கு சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக நான் ஒரு கணினி வாங்க முடியாது. மாதத்திற்கு 100 / - ரூபாய்க்கு ஒரு ஆடிட்டரை வைத்து கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். அதன் செலவு வருடத்திற்கு 1200 / -. வருடத்திற்கு இருபது லட்ச ரூபாய் பரிவர்த்தனை செய்வதால், வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு ஒரு வருடத்திற்கு ஆடிட்டருக்கு ரூபாய் 500 / -. டின் மற்றும் நிரந்தர கணக்கு எண் வாங்க முதலீடு 1000 / -.

இவ்வளவிற்கும் என் லாபம் என்பது ஒரு வருடத்திற்கு 500 * 365 = 1,82,500 / -. வாயை பிளக்காதீர்கள். இது நான்கு பேர் கொண்ட என் மொத்த குடும்பத்திற்கும் ஒட்டு மொத்த வருமானம். வருமான வரிக்கு கீழே வராத என் வருமானத்தில் இருந்து கிட்டத்தட்ட 29000 / - வங்கியும், அரசும் எடுத்துக் கொள்கிறது. கிட்டத்தட்ட 16% .இந்த நஷ்டத்தை நான் யாரிடம் வசூல் செய்ய முடியும். நுகர்வோரிடம் இருந்து தானே. அப்புறம் எப்படி விலைவாசி குறையும். ஏறத்தான் செய்யும். இதனால், நுகர்வோருக்கும் பாதிப்பு தான்.

இதை விட முக்கியம். இந்த பாதிப்புகள் என் வரை மட்டுமல்ல. நான் பழங்களை வாங்கும் வினியோகிஸ்தருக்கும் இதே கதை தான். அவரும் ஒரு மையத்தோடு பரிமாற்ற கட்டணம், நான் பொருளை வாங்கும்போது பிஓஎஸ்
குற்றச்சாட்டுக்கள் என 16% லாபத்தில் நஷ்டம். எனவே அவரும் அவர் விலையை ஏற்றுவார். அப்போது மேலும் 16% அல்லது 20% ஏற்றலாம். ஒட்டு மொத்தமாக பார்த்தால், விலை 150% ஏறும். வங்கிகள் லாபம் கொழிக்கும். ஆளே தேவை இல்லை. சில கணினிகளும், ஒரு சில வேலையாட்களும் வைத்துக் கொண்டு,
வங்கிகள் கோடிக்கணக்கில் லாபம் பார்க்கும்.
அவர் சொன்னது அனைத்தும் சரியே. ஒரு சில பண எண்ணிக்கை வேண்டுமானால் கூடலாம். குறையலாம். மற்றபடி அனைத்தும் சரியே. பணமில்லா வர்த்தகம் இவ்வளவு பாதிப்புகளை, ஒரு நடைப்பாதை வியாபாரிக்கும், நுகர்வோருக்கும் ஏற்ப்படுத்துமெனில் இது சாத்தியமே ஆனாலும், நம் நாட்டிற்கு தேவையா? குறைந்தப் பட்சம் சிறு வணிகத்திற்க்கேனும் இதிலிருந்து கட்டாயம் விலக்கு அளிக்க வேண்டும். இல்லையெனில் தனி மனிதனின் வாங்கும் திறனை அதிகரிக்க, அவனின் தனி மனித வருமானத்தை அதிகரிக்க வேண்டும். இது மீண்டும் ஒரு பண மதிப்பை குறைக்கும் வழியைத் தான் தேடும்.

கறுப்புப் பண பெருச்சாளியின் வாலை பிடிக்கப் போய், புலியின் வாலை பிடித்து விட்டோமோ?என்ற அச்சம் எழாமலில்லை ..
நன்றி--BK Mohideen

07 December 2016

தமிழகமுதல்வர் மறைவையொட்டி கும்பகோணம்



நேற்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவைத் தொடர்ந்து கும்பகோணம் பேருந்து நிலையத்தில் பேருந்து இல்லாமல் மக்கள் பலர் தவித்து வந்தனர், இஸ்லாமியர்கள் உணவு பொட்டலங்கள் வழங்கி, பயணிகள் இரவு தங்குவதற்கு பெரிய பள்ளிவாசலில் இடம் ஏற்பாடு செய்யபட்டதை அதை பேருந்து நிலையத்தில் மைக்கிலும் அறிவிப்பு செய்யபட்டது இஸ்லாம் காட்டித்தந்த வழி இதுதான்,.

06 December 2016

அவமானப்பட்டவரை அமைச்சராக்கி அழகுபார்த்த ஜெ ...




ஒரு தாழ்த்தப்பட்ட வேட்பாளரை தனது கட்சிக்குள்ளே மதிப்பு குறைவாக நடத்துகிறார்கள் என்ற செய்தி கேட்டு வருந்திய முன்னாள் ஜெயலலிதா அவரை அமைச்சராக்கி அழகு பார்த்த உருக்கமான சம்பவம் நடந்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம், 2001 சட்டப்பேரவை தேர்தலின் போது ஒரு அ.தி.மு.க வேட்பாளர் தேர்தல் வேலை செய்யும் கட்சி ஆட்களுக்கு சரியாக உணவு கூட வாங்கி தருவதில்லை என்று அவரிடம் கட்சிக்கள் சில உறுப்பினர்கள் புகார் கூறினர். உடனே அந்த குறிப்பிட்ட அந்த வேட்பாளர் போயஸ் கார்டன் அழைக்கப்படுகிறார்.


"என்னப்பா உன் மேல நிறையா புகார் வருதே, கட்சிக்காரர்களுக்கு சாப்பாடு கூட வாங்கி தர முடியாத உன்னால ??" என்று அந்த வேட்பாளரை ஜெயலலிதா கண்டித்துள்ளார்.

"அம்மா, நான் தாழ்த்தப்பட்ட ஜாதிய சேர்ந்தவன், என் வீட்ல சாப்பாடு செஞ்சு போட்டா யாரும் சாப்பிட மாட்டேங்கிறாங்க, செஞ்சதெல்லாம் வீணா கொட்ட வேண்டி இருக்கு, எல்லாருக்கும் வாங்கி கொடுக்க எனக்கு வசதியும் இல்ல, என்னை மன்னிச்சுருங்க என்று அந்த வேட்பாளர் கதறுகிறார்.

"அப்படியா விஷயம், சரி நீ போய் கவலைப்படாம தேர்தல் வேலைகளை கவனி" என்று ஜெயலலிதா தெரிவித்தார்.

அந்த வேட்பாளர் வெற்றி பெற்று சட்டப் பேரவை உறுப்பினர் ஆனார். யாரும் எதிர்பாராத விதமாக அவரை உணவுத்துறை அமைச்சராகப் பொறுப்பு கொடுத்து அழகு பார்த்தார்.

தாழ்த்தப்பட்ட ஒருவருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது வரவேற்பு என்று ஊடகங்களுக்கு செய்தியாகவும், அந்த அமைச்சர் சாந்திருக்கும் சமூகதினருக்கு அது அங்கீகாரம் என மக்கள் தரப்பில் பேசப்பட்டது.


ஆனால், அந்த செயலின் உண்மையான அர்த்தம்

"நீ தாழ்ந்த ஜாதினு சொல்லி உன் வீட்டு சாப்பாடு வேண்டாம் என்று சொன்னார்களா! இனி நாட்டுக்கே நீ தான் சோறு போட போற" என்று ஜெயலலிதா சொல்லாமல் சொன்னார்.

அவரின் ஒவ்வொரு அதிரடியான முடிவிற்கு பின்னால் இப்படி ஓரு தாயுள்ளம் கொண்ட சிந்தனை இருந்திருக்கக்கூடும் ... !!
 இரும்புபெண்மணி ஜே.ஜே.

அந்த அமைச்சர் வேறு யாருமில்லை இப்போதைய சபா நாயகர் தனபால்தான்

நன்றி http://www.newsfast.in/news/jayalalitha-passed-away-5mz2r2

06 August 2012

ஒரு ஏழையின் கண்ணீர் வலி..இன்னொரு ஏழைக்குத்தான் தெரியும்.



இது கட்டுக் கதையல்ல. கண்ணீரால் நிறைந்த நிஜம். நேற்று திருச்சி வேலுசாமி அவர்கள் எழுதிவரும் ஒரு புதிய புத்தகத்தை தொகுக்கும் வேலையில் இருந்தேன். அந்த காலம் இப்படியும் இருந்தது என உறக்கமின்றி தவித்தேன் ... 

"அப்போது காமராஜர் முதல்வர். பழைய சட்டமன்ற விடுதியில் மண்ணாங்கட்டி என்பவர் கீழ்மட்ட ஊழியராக இருந்தார். சட்டமன்ற ஊறப்பினர்கள் கேட்பதை வாங்கிவந்து தருவார். முதல் தளத்தில் முன்பாகவே இருக்கும் முக்கையா தேவர் அறையிலேயே இருப்பார். ஒருமுறை 'ஏம்பா மண்ணாங்கட்டி அவசரமாக வெளியில போறன். 
குளிச்சு முடிச்சு ரெடியாகுறதுக்குள்ள இட்லிய வாங்கி வந்துடு 'என்று 100 - ருபாயை கொடுத்தார் முக்கையா தேவர். சொன்னபடியே அவர் ரெடியாகி காத்திருந்தார். 

ரொம்ப நேரம் ஓடியது. தலையில் சுமையுடன் தட்டுதடுமாறி வந்தார் மண்ணாங்கட்டி. பார்த்ததும் 'ஏன்யா. நான் அவசரமா வெளியில போகனும்னு காத்துகிட்டு இருக்கேன். இட்லி வாங்க இவ்வளவு நேரமா என்று எகிறினார் மாயாண்டி தேவர். மண்ணாங்கட்டிக்கு கோபம். என்னங்கய்யா நீங்க. இங்க ஆஸ்ட்ல அவ்வளவு இட்லி இல்லைன்னு சொல்லிட்டாங்க. மவுண்ட் ரோடெல்லாம் போய் அலைஞ்சு 100 ருபாக்கும் இட்லி வாங்குறது லேசுபட்ட காரியமா 'என்று பதிலுக்கு சத்தம் போட்டார். அதுதான் மண்ணாங்கட்டி என்ற வெகுளி. அப்பாவி. அவ்வளவு வெள்ளந்தி .... 

அப்படியான மண்ணாங்கட்டியின் தலையில் ஒருநாள் இடி விழுந்தது. அந்த உத்தரவை படித்துகாட்டச்சொல்லி வீட்டில் அழுது புரண்டு கதறினார். 'அரசாங்க உத்தியோகத்தில் எழதப்படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் இனி வேலையில் இருக்க கூடாது. பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள் 'என்று காமராஜர் போட்ட உத்தரவுதான் அந்த கடிதம். இரண்டு நாள் கழித்து பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு ஓடிவந்தார். முக்கையா தேவரிடம் தரையில் விழுந்து கதறி அழுகிறார். 

என்னவென்று கேட்கிறார். 'இப்படி ஒரு உத்தரவு வந்திருக்கிறதே. என் குடும்பம் எல்லாம் நடுத்தெருவுக்கு வந்துடுச்சே. எப்படியாவது காப்பாத்துங்க ஐயா 'என்று பித்துப் பிடித்தவராக அழுகிறார். ஏதாவது சமாதானம் சொல்லனுமே என்று 'முதல்வர் ஆபிசுக்கு போன் போடுடா. கேட்டுடலாம் 'என்றார். அப்போது எல்லாம் நேரடியாக தொலைபேசும் வசதி இல்லை. ஆப்ரேட்டரிடம் கூறிவிட்டு காத்திருக்க வேண்டும். முதுல்வர் அலுவலகத்தில் யாராவது உதவியளர் எடுப்பார்கள். 

மண்ணாங்கட்டி புக்செய்த நேரம் உடனே தொடர்பு கிடைத்தது. மறுமுனையில் முதல்வர் காமராஜ். யார் நீங்கள் உங்களுக்கு என்ன வேண்டும் என்கிறார். அய்யா நான்தான் அசம்பிளி ஆஸ்டல் பியூன் மண்ணாங்கட்டி பேசுறங்க ஐயா என்றபடியே அருகில் இருந்த முக்கையா தேவரை பார்க்கிறார். அவருக்கு முதர்வர் அலுவலகத்தில் இருந்து 
யாராவது உதவியாளர்கள்தான் டெலிபோனை எடுத்திருப்பார்கள் என்ற நினைப்பு. 'எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கறப்போ நான் பியூனா இருக்கக்கூடாதான்னு கேளுடா "என்கிறார்.

மறுமுனையில் இருந்த காமராஜரிடம் அதை அச்சுபிசகாமல் 'ஐயா, எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கிறப்போ நான் பியூனா இருக்ககூடாதான்னு' தேவர் ஐயா கேட்க சொல்றாருங்க என்கிறார் மண்ணாங்கட்டி. பிறகு பேச்சில்லை .... 

அடுத்த 30 நிமிடத்தில் உயர் அதிகாரிகள் 3 - பேர் அங்கே வந்துவிட்டார்கள். முதல்வருக்கு போன் செய்தது யார்? என்றார்கள். நான்தான் ஐயா என்று முன்னே வருகிறார் மண்ணாங்கட்டி. உங்களை கையோடு அழைத்துவரச் சொல்லியிருக்கிறார். உடனே புறப்படுங்கள் என்று நிற்கிறார்கள். அப்போதுதான் நாம் பேசியிருப்பது முதல்வரிடம் 
என புரிகிறது. முக்கையா தேவருக்கும் பதட்டம். மண்ணாங்கட்டி 'ஐயா நீங்களும் வாங்க' என்று அழுகிறார். பின்னாடியே வருகிறேன். நீ போப்பா என்று அனுப்பி வைக்கிறார். கோட்டையில் உள்ள முதல்வர் காமராஜை நோக்கி வாகனம் பறக்கிறது. 

முதர்வரின் அறையில் உள்ள ஷோபாவில், கண்ணத்தில் கைவைத்தபடி கவலைதோய்ந்த முகத்தோடு உட்கார்ந்திருக்கிறார் காமராஜர். கதவு திறக்கப்படுகிறது. மண்ணாங்கட்டி முதலில் நுழைய அதிகாரிகள் சற்று ஒதுங்கி கதவோரம் நின்று கொண்டார்கள். நீங்கதான் மண்ணாங்கட்டியா ... என்கிறார். ஆமாங்க ஐயா. நான் 
தெரியாம பேசிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க ஐயா என்றபடியே கீழே விழுந்தார். அந்த கலாச்சாரம் காமராஜருக்கு பிடிக்காது. அதிகாரிகளை பார்க்க உடனே எழுப்பி நிற்க வைக்கிறார்கள். அவரை வா ... வாண்னேன். வந்து பக்கதில உட்காருங்கன்னேன் என்றழைக்கிறார். மண்ணாங்கட்டி தயங்கி நிற்கிறார். காமராஜர் முறைக்க தயங்கி தயங்கி பக்கத்தில் சென்று உட்காருகிறார். 

மண்ணாங்கட்டியை முதுகில் தட்டிக்கொடுத்து முகத்தையே உற்றுப்பார்த்த முதல்வர் காமராஜ், பட்டென்று கையெடுத்து கும்பிட்டு 'நான் தப்புபன்னிட்டன். தெரியாம செய்திட்டன். மன்னிச்சுடு. அந்த தவறை நீதான் புரியவைச்சே ... ரெண்டு நாளா உங்கவீட்ல சோறுதண்ணியில்லியாமே. 
சமைக்கலயாமே .... உங்களுக்கு ரெண்டு பொம்பள புள்ளைங்க ... எல்லாத்தையும் இப்பதான் தெரிஞ்சுகிட்டேன் .. எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கேன் .. நான் அப்படி ஒரு உத்தரவு போட்டிருக்ககூடாது. 'இனிமே புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்' னு போட்டிருக்க வேண்டும். நான் செய்தது 
தவறுதான் என்று தட்டிக்கொடுத்து ஆதறவு சொல்ல மண்ணாங்கட்டி கதறி அழுகிறார். காமராஜருக்கும் பேச்சு இல்லை ... 

அடுத்து அங்கேயே ஒரு உத்தரவு தயாராகிறது. காமராஜர் கையொப்பமிடுகிறார். மண்ணாங்கட்டிக்கு மீண்டும் அரசு வேலை. அதிகாரிகளை பார்த்து 'இவரை அழைத்துக்கொண்டு போங்க. வேலை கொடுத்தாச்சு. இனி கவலைப்பாதீங்கன்னு அவரோட மனைவி, குழைந்தைங்ககிட்ட சொல்லுங்க 'ன்னு அதிகார குரலில் உத்தரவிடுகிறார். பிறகென்ன நினைத்தாரோ சற்று தயங்கி 'போகிறபோது வெறும் கையோட போகாதீங்க. ஓட்டல்ல எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு போய் கொடுங்க. ரெண்டு நாளா அவர்கள் சாப்பிட்டிருக்க மாட்டர்கள்'என கண்டிப்போடு கூறுகிறார் அந்த அதிகாரிகளிடம். 
மண்ணாங்கட்டிக்கு பேச வார்த்தைகளின்றி கையெடுத்து கும்பிட்டபடியே வெளியேற, முதர்வர் காமராஜரும் எழுந்தது கையெழத்து கும்பிட்டபடியே அனுப்பிவைத்தார். 
ஒரு ஏழையின் கண்ணீர் வலி .. இன்னொரு ஏழைக்குத்தான் தெரியும். ஆமாம் காமராஜர் ஏழையாகவே, எழைகளுக்காகவே இருந்தார் .... 
நன்றி-Prabaharan Arunachalam

02 February 2012

விஜயகாந்த் - ஜெயலலிதா மோதல்



அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்ததாக விஜயகாந்த் உள்பட தே.மு.தி.க. உறுப்பினர்கள் அனைவரும் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
சட்டப்பேரவை இன்று காலை தொடங்கியதும், தேர்தல் தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது, விலைவாசி உயர்வு குறித்து பேசிக்கொண்டிருந்த தேமுதிக உறுப்பினர் சந்திரகுமார், உள்ளாட்சித் தேர்தல் முடிந்த கையோடு அரசு பலவிதங்களில் விலைகளை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்த்தும் முடிவினை அரசு தைரியம் இருந்திருந்தால் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பே எடுத்திருக்க வேண்டும். அப்படி எடுத்திருந்தால், தேர்தல் முடிவுகள் வேறுவிதமாக அமைந்திருக்கும் என்று பேசினார்.
அதற்கு முதல்வர் ஜெயலலிதா, இப்போது சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வரவிருக்கிறது. அப்போது நீங்களும் தைரியமிருந்தால் தனித்துப் போட்டியிட்டுப் பாருங்கள். யார் ஜெயிக்கிறார்கள் என்று பார்ப்போம் என்று கூறினார். அதற்கு விஜயகாந்த் எழுந்து, இடைத்தேர்தல்களில் ஆளும்கட்சிதான் ஜெயிக்கும். அது இயல்புதானே என்று கூறினார்.
அதற்கு முதல்வர், இப்போதே எதிர்க்கட்சித் தலைவர் தனது தோல்வியை ஒப்புக்கொள்கிறார் என்றார். இதனால், இரு தரப்புக்கும் வாக்குவாதம் எழுந்தது.
இந்நிலையில், அவையை அமைதி நிலைக்குக் கொண்டுவர, குழப்பம் ஏற்படுத்திய தேமுதிக உறுப்பினர்களை வெளியேற்றுமாறு அவைத்தலைவர் உத்தரவிட்டார். இதனையடுத்து தே.மு.தி.க. வினர் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
தொடர்ந்து முதல்வர் எழுந்து, தகுதி இல்லாதவர்களுக்கு பெரிய பதவி கிடைத்தால் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதை இவ்வளவு கீழ்த்தரமாக எதிர்க்கட்சியினர் நடந்துகொண்டதை வைத்து தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவித்தார். இந்தச் சம்பவங்களால் இன்று காலையில் தமிழக சட்டமன்றம் பெரும் அமளியானது.
நன்றி-- தமிழன்