RMY BATCHA

Create your own banner at mybannermaker.com!

02 June 2012

பெரியாறு அணையின் துளைகளை அடைக்கும் பணி நடந்து வருகிறது.

தேனி: பெரியாறு அணையில், சுப்ரீம் கோர்ட் உயர்மட்டக் குழு ஏற்படுத்திய துளைகளை அடைக்க, தமிழக அரசு பயன்படுத்தும் தொழில் நுட்பம், கேரள அதிகாரிகளை வியப்படையச் செய்துள்ளது மற்றும் அங்கே இருக்கும் அரசியல் வாதிகளை வயிற்றெரிச்சலும் அடைய செய்து உள்ளது.பெரியாறு அணையில் ஆய்வு செய்த சுப்ரீம் கோர்ட் உயர்மட்டக் குழு, 9 இடங்களில் துளைகளை போட்டது. ஒவ்வொன்றும், 140 முதல் 180 அடி ஆழத்தில் போடப்பட்டன. துளைகளை அடைக்க, முதலில் அனுமதி மறுத்த கேரளா, தமிழக முதல்வர் பிரதமருக்கு எழுதிய கடிதத்திற்கு அதில் இருந்த எச்சரிக்கைக்குகம் பின் ரொம்ப மரியாதையுடன் துளைகளை அடைக்க தமிழக அரசுக்கு அனுமதி அளித்தது. தற்போது, திரு. சம்பத்குமார் தலைமையிலான அர்ப்பணிப்பு உணர்வு மிக்க பொதுப்பணித் துறை அதிகாரிகளை கொண்ட குழுவினர் மேற்பார்வையில், துளைகளை அடைக்கும் பணி நடந்து வருகிறது. பணி முடிவடைய, இன்னும் 15 நாட்களுக்கு மேல் ஆகும். ஒவ்வொரு துளையும், ஒரு நாளைக்கு 10 அடி ஆழம் வரை அடைக்கப்படுகிறது. உயர் தொழில் நுட்பத்தில், சிமென்ட், கான்கிரீட் கலக்கப்பட்டு, கலவையை கம்ப்ரஷரில், அதிக வேகத்தில் துளைக்குள் செலுத்தி அடைக்கின்றனர்.இவ்வாறு, உயர் தொழில் நுட்பத்தில் துளைகள் அடைக்கப்படும் போது, அடிப்பகுதியில் உள்ள துளைகள் மட்டுமின்றி, பக்கவாட்டிலும் உள்ள சிறு துளைகளும், அடைபட்டு விடுகின்றன. இத்தொழில் நுட்பத்தில் துளைகள் அடைக்கப்படும் போது, அணை முன்பை விட வலுவாகிவிடும். இதை கண்காணித்து வரும் கேரள அதிகாரிகள், தமிழக தொழில் நுட்ப மேம்பாடு குறித்து, வியப்பு தெரிவித்துள்ளனர். எதிர்காலத்தில், இது குறித்து எந்த புகாரும் சொல்ல முடியாது. தற்போது பயன்படுத்தப்படும் தொழில் நுட்பத்தை, யாரும் குறை சொல்லவே முடியாது என, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பெரியாறு அணையில் தமிழக வழக்கறிஞர்கள்: வழக்கு விசாரணைக்காக முல்லைப்பெரியாறு அணையை, தமிழக வழக்கறிஞர்கள் குழு பார்வையிட்டது.சுப்ரீம் கோர்ட் பரிந்துரையின் பேரில் முல்லைப்பெரியாறு அணையில், ஐவர் குழு ஆய்வுப்பணிகள் நடந்து முடிந்துள்ளன. இதற்கான அறிக்கைகளை இக்குழு ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்து விட்டது. அறிக்கை நகல்கள் இரு மாநில அரசுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு விட்டன. தற்போது சுப்ரீம் கோர்டில், இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. சில தினங்களில் விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாக உள்ளது. இந்நிலையில், விசாரணைக்கு தேவையான தகவல்களை சேகரிக்க சென்னை ஐகோர்ட் வக்கீல்கள் நவநீத கிருஷ்ணன், உமாபதி ஆகியோர் கொண்ட குழு நேற்று முல்லைப்பெரியாறு அணைக்கு சென்றது. மெயின் அணை, பேபி அணை, ஆய்வுக்காக தோண்டப்பட்ட துளைகளை அடைக்கும் பணிகளை பார்வையிட்டனர். மேலும், தற்போது வரை உள்ள நிலவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்ரமணியன், மதுரை தலைமை பொறியாளர் சம்பத்குமார், பெரியாறு அணை உதவி செயற்பொறியாளர் கல்யாணசுந்தரம், உதவி பொறியாளர் ராஜகோபால், தொழில்நுட்ப உதவியாளர் பாலமுருகன் உடன் இருந்தனர்..

No comments: